5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Water Heater: வாட்டர் ஹீட்டரை பயன்படுத்துபவர்களா நீங்கள்..? இந்த விஷயங்களை பின்பற்றுவது மிக முக்கியம்!

Safety Tips: விலை குறைந்த வாட்டர் ஹீட்டர்களை முடிந்த வரை வாங்குவதை தவிருங்கள். இது விரைவில் வெடித்துவிடும் அபாயத்தை கொண்டிருக்கும். சரியான அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் வாட்டர் ஹீட்டர்களை வாங்குவது மிக நல்லது. வாட்டர் ஹீட்டரை வாளியில் வைப்பதற்கு முன்பு, சுவிட்சை ஆன் செய்யாதீர்கள். உடனடியாக வாட்டர் ஹீட்டர் வெப்பமடைய தொடங்குவதால், குளிர்ந்த நீருக்குள் வைக்கும்போது வெடித்துவிட வாய்ப்புகள் அதிகம்.

Water Heater: வாட்டர் ஹீட்டரை பயன்படுத்துபவர்களா நீங்கள்..? இந்த விஷயங்களை பின்பற்றுவது மிக முக்கியம்!
வாட்டர் ஹீட்டர்
mukesh-kannan
Mukesh Kannan | Published: 16 Aug 2024 10:51 AM

வாட்டர் ஹீட்டர்: சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மகேஷ் பாபு என்பவர் தனது வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் நாயை குளிப்பாட்ட, வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீர் சுட வைத்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு போன் வந்தநிலையில் செல்போனை பயன்படுத்திக்கொண்டே தண்ணீர் சுடாகி விட்டதா என்பதை கண்டறிய கை வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மகேஷ் பாபுவின் கையானது வாட்டர் ஹீட்டரின் ராடில் பட்டு, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் மட்டுமல்லாது, வாட்டர் ஹீட்டர் ராடுகளில் இருந்து மின்சாரம் தாக்கி ஒவ்வொரு ஆண்டும் பலர் உயிரிழக்கும் சோகம் நடந்து கொண்டிருக்கிறது.

ALSO READ: On This Day: லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்தியா செய்த சம்பவம்.. இதே நாளில் இங்கிலாந்தை வீழ்த்தி மிரட்டிய விராட் படை..!

இதை தடுக்கும் விதமாகவும், பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள். இதன்மூலம், நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம். இனி அடுத்தடுத்து மழை மற்றும் குளிர் காலங்கள் வரப்போகின்றன. இந்த காலக்கட்டங்களில் பெரும்பாலானோர் குளிர்ந்த நீரில் குளிப்பதற்கு பயந்து, வாட்டர் ஹீட்டரை நோக்கி படையெடுப்பர். அப்படி பட்டவர்கள், இங்கு குறிப்பிடப்படும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும் முறை:

  • வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், தண்ணீர் சூடாகும்போதோ அல்லது சூடாக்கிய பின்னரே அவர்கள் தொடும் இடத்தில் எங்கும் வைக்கக்கூடாது. குழந்தைகள் தவறுதலாக சென்று தண்ணீரைத் தொட்டால் பெரிய ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால்தான் ஏதாவது மூலையில் அல்லது மூடிய அறையில் தண்ணீர் ஹீட்டர் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
  • வாட்டர் ஹீட்டர் பிளாஸ்டிக் வாளியில் வைக்கப்பட்டிருந்தால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஹீட்டர் கொக்கியை நேரடியாக வாளியில் இணைக்க வேண்டாம். ஒரு சில நேரங்களில் வெப்பத்தால் பிளாஸ்டிக் உருகும். எனவே வாளியின் நடுவில் கயிற்றை கட்டியோ அல்லது ஏதேனும் நீளமாக மரக்கட்டையை வைத்தோ வாட்டர் ஹீட்டரை வைக்கவும். முடிந்தவரை அலுமினிய வாளிகளை பயன்படுத்துவது நல்லது.
  • சிலர் வாட்டர் ஹீட்டர்களை நீண்டநேரம் தண்ணீரில் வைத்து பயன்படுத்துகிறார்கள். இப்படி செய்வதன் மூலம் தண்ணீர் மிகவும் சூடாகும் என்று நம்பப்படுகிறது. தண்ணீர் அதிகமாக சூடாவதால் சில சமயங்களில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதனால் நீண்டநேரம் அப்படியே விடாதீர்கள். அதிகபட்சமாக 7 முதல் 10 நிமிடங்கள் தண்ணீரை சூடு செய்வதே போதுமானது.
  • எந்த சூழ்நிலையிலும் குளியலறையில் வாட்டர் ஹீட்டர்களை வைத்து தண்ணீரை சூடு செய்யாதீர்கள். சில சமயங்களில் குளியலறையில் ஈரம் இருப்பதால் குளிர்ச்சி காரணமாக வெடிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே வாட்டர் ஹீட்டரை காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்து சூடு செய்வது நல்லது.
  • வாட்டர் ஹீட்டர் கம்பி முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் கம்பியில் விரிசல் ஏற்பட்டு, உடைய வாய்ப்பு உள்ளது. அணைத்த உடனேயே தண்ணீரில் கையை வைத்து சூடு எப்படி இருக்கிறது என்பதையும் சோதிக்க வேண்டாம். சுவிட்ச் போர்டில் இருந்து பிளக்கை அகற்றிய பின்னரே கையை வைத்து சோதிக்க வேண்டும்.
  • சிலர் தண்ணீரை சூடாக்க எஃகு மற்றும் இரும்பு வாளிகளைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் வாட்டர் ஹீட்டர் கம்பியை உள்ளே செலுத்திய பின் ஷாக் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே வெந்நீர் எடுக்கும் போது பிளாஸ்டிக் அல்லது அலுமினிய வாளிகளை பயன்படுத்தவும்.
  • வாட்டர் ஹீட்டரை வாளியில் வைப்பதற்கு முன்பு, சுவிட்சை ஆன் செய்யாதீர்கள். உடனடியாக வாட்டர் ஹீட்டர் வெப்பமடைய தொடங்குவதால், குளிர்ந்த நீருக்குள் வைக்கும்போது வெடித்துவிட வாய்ப்புகள் அதிகம். எப்பொழுதும் தண்ணீரில் வைத்த பிறகுதான் சுவிட்ச் ஆன் செய்ய வேண்டும்.

ALSO READ: Mustard Seeds: உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும் கடுகு… இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!

விலை குறைந்த வாட்டர் ஹீட்டர்களை முடிந்த வரை வாங்குவதை தவிருங்கள். இது விரைவில் வெடித்துவிடும் அபாயத்தை கொண்டிருக்கும். சரியான அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் வாட்டர் ஹீட்டர்களை வாங்குவது மிக நல்லது.

Latest News