Belly Fat : தொப்பையை சர்ரென குறைத்துவிடலாம்.. இதை ஃபாலோ பண்ணுங்க! - Tamil News | | TV9 Tamil

Belly Fat : தொப்பையை சர்ரென குறைத்துவிடலாம்.. இதை ஃபாலோ பண்ணுங்க!

Published: 

10 May 2024 17:58 PM

Ways to Lose Belly Fat : டயட் மற்றும் உடற்பயிற்சி இரண்டையும் ஒன்றாக செய்கையில் நல்ல மாற்றத்தை எளிதில் காணலாம். அது எப்படி என்று இப்பொழுது பார்ப்போம்.

Belly Fat : தொப்பையை சர்ரென குறைத்துவிடலாம்.. இதை ஃபாலோ பண்ணுங்க!

தொப்பை - மாதிரிப்படம்

Follow Us On

பலருக்கும் தொப்பை என்பது பெரிய சிக்கலாகவே உள்ளது. ஆண், பெண் என பாலினம் கடந்து தொப்பை என்பது ஆரோக்கியம் சார்ந்த விஷயமும் கூட. தொப்பை இருந்தால் இன்னும் அதிகரிக்குமோ என்ற பயத்தில் ஆசைப்பட்டதை சாப்பிடவும் முடியாமல், சாப்பிடாமல் இருக்கவும் முடியாமல் ஒரே ரோதனையாக இருக்கும். பயங்கர டயட் இருந்தும் தொப்பைக் குறையவில்லை என்றும், நன்கு உடற்பயிற்சி செய்தும் தொப்பைக் குறையவில்லை என்றும் புலம்புபவர்களுக்குத்தான் இந்தப் பதிவு. டயட் மற்றும் உடற்பயிற்சி இரண்டையும் ஒன்றாக செய்கையில் நல்ல மாற்றத்தை எளிதில் காணலாம். அது எப்படி என்று இப்பொழுது பார்ப்போம்.

வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்:
நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகம் நிறைந்த இந்த வெள்ளரிக்காய் வயிற்றில் சேரும் கொழுப்பைக் குறைத்து அல்கலைன் அளவை சீராகப் பராமரிக்கிறது.

புதினா மற்றும் இஞ்சி சேருங்கள்:
புதினா இஞ்சி இரண்டுக்குமே பசியைக் கட்டுப்படுத்திவதில் பெரும்பங்கு உண்டு. இதை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டால் அதிக உணவு சாப்பிடுபவர்கள் கூட குறைவாக சாப்பிடுவார்கள்.

எலுமிச்சம்பழச்சாறு:
எலுமிச்சையில் காணப்படும் பெக்டின் எனப்படும் நார்ச்சத்து உடலில் சேரும் நச்சுகள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது.

Also Read : ருசி மட்டுமல்ல.. ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் மாம்பழ ஜூஸ்!

எல்லாம் சரி இப்படி சாப்பிட்டால் உடம்பு குறைந்துவிடுமா என்றால் அதுதான் இல்லை. ஆள் பாதி ஆடை பாதி என்பது போல, உணவு பாதி உடற்பயிற்சி பாதி என்பதுதான் நம் தொப்பைக்கு ஏற்ற புதுமொழி.

உணவில் கட்டுப்பாட்டை மேற்கொண்ட பின் உடலில் கட்டுப்பட்டைக் கொண்டுவருவது மிகவும் அவசியம். அதற்காக கடினமான உடற்பயிற்சிகளை செய்யச்சொல்லி பயமுறுத்த மாட்டோம்.நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராதீர்கள், சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்காதீர்கள், அடிக்கடி உட்கார்ந்து எழுந்துகொள்ளுங்கள். எந்தப் பொருளையாவது கீழே போட்டு ஒரு முப்பது நாற்பது முறை குனிந்து நிமிருங்கள், நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள், தூங்கும்போது குப்புறப்படுத்து வயிற்றை அமிழ்த்தியபடி சில மணிநேரம் தூங்குங்கள்.

இப்படி உணவு உடற்பயிற்சி இரண்டையும் சரிவர செய்துவந்தால் ஒரு சில மாதங்களில் நல்லதொரு மாற்றத்தைக் காணலாம்.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version