Treadmill Running: டிரெட்மில்லில் ஓடும் பழக்கம் கொண்டவரா..? நன்மை, தீமைகள் இவ்வளவு இருக்கு!
Treadmill: டிரெட்மில்லில் ஓடுவதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நமக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பயன்படுத்தி நம்மை பிட்டாக வைத்து கொள்ளலாம். குளிர்காலம், மழைக்காலம் போன்ற சீசன்களில் காலையில் எழுந்து ஜிம், நடைபயிற்சி மற்றும் ஓடுவது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது கடினமான விஷயம். இதுபோன்ற சூழ்நிலைகளில் வீட்டில் இருக்கும் டிரெட்மில்லில் உங்கள் வசதி மற்றும் நேரத்திற்கு ஏற்ப, எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி ஓடலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் ஃபிட்டாக இருப்பது மக்களிடையே மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் உடற்பயிற்சி, யோகா, ஜிம் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். இதில், பெரும்பாலானோர் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்க ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வீட்டிலேயே டிரெட்மில்லில் ஓடுகிறார்கள். டிரெட்மில்லில் ஓடுவது மக்களிடையே இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. வெளியே சென்று ஓடுவதற்கு நேரமில்லாதவர்கள் டிரெட்மில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்தவகையில், இன்று டிரெட்மில்லில் ஓடுவதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் மற்றும் எப்படி இதை இயக்குவது என்பதை தெரிந்து கொள்வோம்.
டிரெட்மில்லில் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
வசதி:
டிரெட்மில்லில் ஓடுவதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நமக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பயன்படுத்தி நம்மை பிட்டாக வைத்து கொள்ளலாம். குளிர்காலம், மழைக்காலம் போன்ற சீசன்களில் காலையில் எழுந்து ஜிம், நடைபயிற்சி மற்றும் ஓடுவது போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது கடினமான விஷயம். இதுபோன்ற சூழ்நிலைகளில் வீட்டில் இருக்கும் டிரெட்மில்லில் உங்கள் வசதி மற்றும் நேரத்திற்கு ஏற்ப, எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி ஓடலாம்.
மூட்டு வலி:
டிரெட்மில்லில் ஒரு நிலையான குஷனிங் அமைப்பு உள்ளது. இது மூட்டுகளில் தாக்கத்தை குறைக்கும். நீண்ட காலமாக முழங்கால்கள், குதிகால் அல்லது இடுப்பு வலியால் அவதிப்படும் மக்களுக்கு சிறந்த பலனை தரும்.
கட்டுப்பாடு:
உங்கள் வசதிக்கு ஏற்ப டிரெட்மில்லின் வேகத்தை எளிதாக கூட்டவும், குறைக்கவும் முடியும். இதன் மூலம் உங்களது உடற்தகுதிக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்யலாம்.
காயம்:
டிரெட்மில்லின் வேகம் சீராகவும், அதே வேகத்துடன் இருக்கும். இதனால், உங்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் மிக மிக குறைவு.
டிரெட்மில்லில் ஓடுவதால் ஏற்படும் தீமைகள்:
- டிரெட்மில்லில் நீண்ட நேரம் ஓடுவது உங்களுக்கு விரைவில் சலிப்பை கொடுக்கும். இதனால், உங்களது ஊக்கம் குறைந்து கடமைக்கு ஓடுவீர்கள்.
- டிரெட்மில்லில் அதிக வேகத்தில் ஓடுவது மூட்டுகள் மற்றும் தசைகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால், உங்களுக்கு முழங்கால் மற்றும் முதுகு பகுதிகளில் வலி ஏற்படலாம்.
- டிரெட்மில்லில் ஓடுவது உங்களது உடலின் இயல்பான இயக்கத்தை கெடுக்க செய்யும். அதாவது, தரையில் ஓடுவதை ஒப்பிடும்போது, டிரெட்மில்லின் பெல்ட் நம் பாதத்தை பின்னோக்கி இழுக்கும். இதனால், நம் உடலின் இயல்பான இயக்கம் பாதிக்கும்.
டிரெட்மில்லில் வெறுங்காலுடன் ஓடாதீர்கள்:
- வேகமான இயக்கம் மற்றும் உராய்வு காரணமாக காலில் வெப்பம் உருவாகும். ஷூ இல்லாமல் ஓடும் அல்லது டிரெட்மில்லில் நடப்பது பாதங்களில் எரிச்சலை தரும். இது தவிர, பூஞ்சை மற்றும் கிருமிகள் பரவும் அபாயம் ஏற்படும். எனவே, பொருத்தமான ஷூ அணிந்து மட்டுமே டிரெட்மில்லில் ஓடுங்கள்.
- டிரெட்மில்லில் ஓடும்போது அல்லது நடக்கும்போது அடிக்கடி கைப்பிடிகளை பிடித்து கொள்ளாதீர்கள். நீண்ட நேரம் இப்படி செய்வது, கைகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை கொடுக்கும்.
- டிரெட்மில்லின் வேகத்தை திடீரென அதிகரிக்க வேண்டாம். படிப்படியாக வேகத்தை அதிகரிப்பதன் மூலம், உடல் வெப்பமடையும்போது நேரம் கிடைக்கும்போது தசைகளில் அழுத்தம் ஏற்படாது.
ALSO READ: Bathroom Cleaner: டாய்லெட்டை இதை கொண்டு சுத்தம் செய்யுங்கள்.. கண்ணாடி போல் சூப்பராக மின்னும்..!
ஓடும்போது நடக்கும்போது கீழே பார்க்காதீர்கள்:
- டிரெட்மில்லில் பெரும்பாலும் ஓடி மக்கள் சோர்வடைந்ததும் தங்களது கால்களை பார்வையிடுகின்றனர். இவ்வாறு செய்வது மூலம், இவர்கள் சமநிலையை இழந்து காயமடைய செய்யும்.
- டிரெட்மில்லில் ஓடுவதற்கு முன் உங்கள் இருதய துடிப்பை தெரிந்து கொள்ளுங்கள். விரைவாக உடல் எடையை குறைக்க அதிக வேகம் வேண்டாம். இதை செய்யாவிட்டால், உங்களுக்கு மாரடைப்பு வரலாம்.
- டிரெட்மில் ஓடும்போது போன் கால் அல்லது வேறு யாரேனும் அழைத்தால், தவறுதலாக கூட டிரெட்மில்லில் இருந்து இறக்க முயற்சிக்காதீர்கள். திடீரென நகரும் டிரெட்மில்லில் இருந்து இறங்குவது தலைச்சுற்றல் அல்லது சமநிலை இழப்பை ஏற்படுத்தும். மிகவும் அவசரமான வேலை என்றால், அவசர பொத்தானை அழுத்தவும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)