5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் சுரைக்காய்.. தினசரி உணவில் மறக்காம சேருங்க!

Zucchini: நீங்கள் ஆரோக்கியமான இருக்க வேண்டுமென்றால் சுரைக்காயை சாப்பிடுவது நல்லது. வைட்டமின் சி, இரும்பு, நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் இந்த காய்கறியில் நிறைந்துள்ளது. எந்த நோயும் இல்லாதவர்களுக்கு சுரைக்காய் ஆரோக்கியமான உணவாகும். ஆனால், சில வகையான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு இது நல்லதல்ல என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

Health Tips: பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் சுரைக்காய்.. தினசரி உணவில் மறக்காம சேருங்க!
சுரைக்காய்
mukesh-kannan
Mukesh Kannan | Published: 29 Aug 2024 10:51 AM

சுரைக்காய் பயன்கள்: உடல் ஆரோக்கியமாக இருக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். காற்கறிகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துகள் இதில் உள்ளதால், உடலை கட்டுக்கோப்பாக வைத்துகொள்ள உதவுகிறது. மேலும், இது பல உடல் பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. அந்த வகையில், நீங்கள் ஆரோக்கியமான இருக்க வேண்டுமென்றால் சுரைக்காயை சாப்பிடுவது நல்லது. வைட்டமின் சி, இரும்பு, நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் இந்த காய்கறியில் நிறைந்துள்ளது. எந்த நோயும் இல்லாதவர்களுக்கு சுரைக்காய் ஆரோக்கியமான உணவாகும். ஆனால், சில வகையான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு இது நல்லதல்ல என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். அந்தவகையில், சுரைக்காயை யார் சாப்பிடக்கூடாது.? சுரைக்காயை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Lung Health: நுரையீரலை பாதுகாக்க வேண்டுமா..? இந்த உணவுகளை எடுத்து கொள்வது மிக முக்கியம்!

இளமை தோற்றம்:

சுரைக்காயைல் ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. எனவே, இது வயதாகும்போது ஏற்படும் புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் சருமத்தில் ஏற்படுவதை தடுக்கும். மேலும், இது சருமத்தை பளபளப்பாகவும் வைக்க உதவும்.

கண் பிரச்சனை:

கோடைக்காலத்திலும், அதிக நேரம் கம்யூட்டர் பார்ப்பவர்களுக்கும் இரண்டு காரணங்களால் பொதுவாக கண்களில் வறட்சி ஏற்படும். ஒன்று அனல் காற்றால் ஏற்படும் வறட்சி, மற்றொன்று உடலில் நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் வறட்சி. அதன் காரணமாக, சுரைக்காயில் 80 முதல் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. எனவே இந்த காய்கறி உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை குறைத்து, உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.

சுரைக்காய் கண்களுக்கு நன்மை பயக்கும். இதில் மற்ற ஊட்டச்சத்துக்களுடன் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ நம் உடலில் வறட்சியை தருக்கும், கண்களில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கும்.

எலும்புகள் வலுவடையும்:

வயது அதிகரிக்கும்போது, எலும்புகள் பலவீனமடைய தொடங்கும். இதன் காரணமாக அடிக்கடி மூட்டு வலி, அன்றாட செயல்களை செய்ய முடியாத சூழல் உண்டாகும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சுரைக்காய் உட்கொண்டால், உங்கள் எலும்புகள் எஃகு போல வலுவடையும், ஏனெனில் அதில் ஏராளமான கால்சியம் மற்றும் வைட்டமின் கே உள்ளன.

செரிமானம்:

சுரைக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து உதவியுடன், நல்ல பாக்டீரியாக்கள் வயிற்றில் வளர தொடங்குகின்றன. இதன் காரணமாக, உங்கள் உடலில் செரிமானம் சீராகவும், மலத்தை கடினமாக்குவதைத் தடுக்கிறது.

உடல் எடை குறையும்:

சுரைக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை சாப்பிட்டால், உங்களுக்கு அதிக நேரம் பசி எடுக்காது. இதன்மூலம், அதிகப்படியான உணவு உண்பதில் இருந்து காக்கும். இதன் காரணமாக, உங்கள் எடை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

மாரடைப்பு வராமல் தடுக்கும்:

சுரைக்காய் ஒரு ஆரோக்கியமான உணவாகும், இதைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள், அவர்களின் நரம்புகளில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையத் தொடங்குகிறது. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, மாரடைப்பு, இதய செயலிழப்பு, கரோனரி தமனி நோய் உள்ளிட்ட பிரச்சனைகளை வராமல் தடுக்கும்.

ALSO READ: Health Tips: மலச்சிக்கலுக்கு மகத்தான மருந்து வெற்றிலை தண்ணீர்! எளிதாக தயாரிப்பது எப்படி..?

யார் சாப்பிடக்கூடாது..?

  • சிறுநீரகக் கற்களால் அவதிப்படுபவர்கள் சுரைக்காயை சாப்பிடக்கூடாது. சுரைக்காயில் அதிக அளவு ஆக்சலேட் உள்ளது. இதன் காரணமாக, இது றுநீரக கற்கள் பிரச்சனையை அதிகரிக்க செய்யும்.
  • குடலில் அல்சர், அல்சர் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் சுரைக்காய் சாப்பிடக்கூடாது. இது மேலும் பிரச்சனையை அதிகரிக்க செய்யும்.
  • இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சுரைக்காய் நல்லதல்ல. எனவே அவர்கள் இந்த சுரைக்காய் மற்றும் சுரைக்காய் சாற்றை மிகவும் குறைவாக உட்கொள்ள வேண்டும்.

 

Latest News