Health Tips: மிஞ்சிய சாதத்தை ஃபிரிட்ஜில் வைக்கலாமா..? இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

White Rice: உங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் மீதி சாதம் ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் சோற்றை சாப்பிடுவது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்றும், எடையை குறைக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

Health Tips: மிஞ்சிய சாதத்தை ஃபிரிட்ஜில் வைக்கலாமா..? இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

மிஞ்சிய சாதம் (Image: freepik and getty)

Published: 

24 Nov 2024 15:59 PM

தினசரி மிஞ்சும் மீதமுள்ள உணவுகளை குளிர்சாதன பெட்டியில் (ஃப்ரிட்ஜ்) வைத்து பயன்படுத்துவது பெரும்பாலும் ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. அதாவது குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் உணவு செரிமானம் உட்பட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால், உங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் மீதி சாதம் ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் சோற்றை சாப்பிடுவது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்றும், எடையை குறைக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இது வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவித்து, செரிமானத்தை ஆரோக்கியமானதாக வைக்கும். அந்தவகையில், உங்களிடம் மிஞ்சிய சோறு இருந்தால், அதை தூக்கி எறிவதற்கு முன் இந்த செய்தி குறிப்பை படித்துவிட்டு ஒருமுறை இருமுறை யோசியுங்கள்.

ALSO READ: Heart Blockage: இதய அடைப்பு என்றால் என்ன..? இவற்றை எவ்வாறு கண்டறிவது..?

அதற்காக புதிதாக சமைத்த சாதம் நல்லதல்ல என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், நாம் நினைப்பதை விட பழைய சோற்றில் அதிக ஊட்டச்சத்து உள்ளது. இதேபோன்று, நீங்கள் உருளைக்கிழங்கு, பாஸ்தா மற்றும் சப்பாத்தி போன்ற மற்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளுக்கும் இது பொருந்தும்.

எடையை குறைக்கும்:

புதிதாக சமைத்த சாதத்தை விட பழைய சாதத்தில் குறைந்த கலோரி உள்ளடக்கம் உள்ளது. இது நம் உடலில் எளிதில் ஜீரணமாகாது. எனவே, இது நீண்ட நேரம் பசியை கொடுக்காததால், எடையை குறைக்க பெரிதும் உதவி செய்யும். அதன்படி, குளிர்சாதனப் பெட்டி வைக்கப்பட்ட மீதமுள்ள சாதத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி சாப்பிடலாம். இதனால் இதன் பண்புகள் எந்தளவிலும் பாதிக்காது.

புற்றுநோயை தடுக்கும்:

பழைய சாதத்தில் உள்ள மாவுச்சத்து நம் உடலில் நார்ச்சத்து போல் செயல்படும். இது நமது வயிற்றில் நல்ல பாக்டீரியாவை ஊக்குவிக்கும். இது செரிமான செயல்முறையை ஆரோக்கியமான வைக்கவும், பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய்களில் அபாயத்தை குறைக்கவும் உதவி செய்கிறது.

இரத்த சர்க்கரை அளவு:

சமைத்த சாதத்தை 12 முதல் 24 மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது, அதில் இருக்கும் ஸ்டார்சானது எதிர்ப்ப்ய் சக்தியா மாற்றும். இந்த வகை மாவுச்சத்து குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவுகளில் விரைவான ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தாது. இது சர்க்கரை நோய் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

சாதாரண வேகவைத்த அரிசியின் நன்மைகள்:

செரிமானம்:

அரிசியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது மோசமான செரிமானத்தை குணப்படுத்தவும், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கவும் உதவி செய்யும். மேலும், இது இலகுவாக ஜீரணமாகும். இதனால், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது.

உடல் எடையை அதிகரிக்கும்:

சாதத்தில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. எடை குறைவாக உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த பலனை தரும். இது எளிதில் ஜீரணமாகி, உடலுக்கு தேவையான ஊட்டசத்தையும் அளிக்கிறது.

ஆற்றல்:

சாதம் விரைவில் ஜீரணமாகி, உடலுக்கு உடனடி சக்தியை அளிக்கும். எனவே, சாதம் சிறந்த ஆற்றல் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும், இது உங்கள் கல்லீரல், தசைகள், மூளை மற்றும் திசுக்களுக்கு ஆற்றலை வழங்குகிறது.

ALSO READ: ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாத பழங்கள் என்னென்ன தெரியுமா?

இரத்த சோகை:

சாதத்தில் இரும்பு மற்றும் தாமிரம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உள்ளது. இது இரத்தத்தில் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் இரத்த சிவப்பணுக்களை ஊக்குவிக்கும். இது இரத்த சோகை போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி:

சாதத்தில் ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பருவ மாற்றத்தின்போது ஒவ்வாமை, வைரஸ் தொற்றுகள், சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

பிரிட்ஜில் வைக்கப்பட்ட எந்த உணவுகளாக இருந்தாலும், சிறிது நேரம் வெளியே வைத்து சூடு செய்து சாப்பிடுவது நன்மை தரும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்