Jeera Water Benefits: உடலை ஆரோக்கியமாக்கும் சீரக தண்ணீர்.. தினமும் குடிப்பதால் பல நன்மைகள்! - Tamil News | What are the benefits of taking cumin water daily for the body | TV9 Tamil

Jeera Water Benefits: உடலை ஆரோக்கியமாக்கும் சீரக தண்ணீர்.. தினமும் குடிப்பதால் பல நன்மைகள்!

Published: 

21 Jul 2024 12:13 PM

Health Tips: ஒவ்வொரு நாளும் நீங்கள் அலுவலத்திற்கு கொண்டு செல்லும் வாட்டர் பாட்டிலில், ஒரு ஸ்பூன் சீரகத்தை போட்டு ஊறவைத்து குடித்தால் பல்வேறும் நன்மைகள் உங்களது உடலுக்கு வந்து சேரும். அத்தகைய சிறப்பான பண்புகளை கொண்ட, சீரகத்தின் நன்மைகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

Jeera Water Benefits: உடலை ஆரோக்கியமாக்கும் சீரக தண்ணீர்.. தினமும் குடிப்பதால் பல நன்மைகள்!

Jeera water

Follow Us On

சீரகத்தின் நன்மைகள்: சீரகத்தின் ஆரோக்கிய நன்மைகள் பண்டைய ஆயுர்வேத நூல்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில், குறிப்பிடத்தக்க நன்மைகள், நவீன அறிவியலாலும் அங்கரீக்கப்பட்டுள்ளது. தமிழர்களை பொறுத்தவரை, இந்த சீரகத்தை பழங்காலத்திலிருந்தே தங்களது சமையலறையில் தவிர்க்கமுடியாத உணவு பொருளாக பயன்படுத்தி வருகின்றனர். குமினால்டிஹைட் என்பது சீரகத்தில் உள்ள ஒரு முக்கியமான இரசாயனமாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் நீங்கள் அலுவலத்திற்கு கொண்டு செல்லும் வாட்டர் பாட்டிலில், ஒரு ஸ்பூன் சீரகத்தை போட்டு ஊறவைத்து குடித்தால் பல்வேறும் நன்மைகள் உங்களது உடலுக்கு வந்து சேரும். அத்தகைய சிறப்பான பண்புகளை கொண்ட, சீரகத்தின் நன்மைகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

Also read: Salt Expiry Date: உப்புக்கு காலாவதி தேதி உள்ளதா..? கெட்டுப்போனதை எப்படி அறிந்துகொள்வது..?

சீரக தண்ணீர் தயாரிக்கும் முறை:

1 லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து அறை வெப்பநிலையில் கொதிக்கவைத்து, பின்னர் குளிர்ந்தபின் தினமும் குடித்து வர வேண்டும். இப்படி அருந்துவதன்மூலம், சீரகத் தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.

சீரக தண்ணீரால் ஏற்படும் நன்மைகள்:

இரத்தத்தை சுத்தப்படுத்தும்:

சீரகத் தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.டாக்ஸின்களை வெளியேற்றும். சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.

புத்துணர்ச்சியை கொடுக்கும்:

தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

பசியை அடக்கும்:

அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும்.

தூக்கத்தை சீராக்கும்:

சீரகத் தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி:

சீரகத்தின் விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை எடை இழப்புக்கு உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சீரக விதைகளின் சாற்றில் பாலிபினால்கள் உள்ளதால், உங்கள் உடல் அமைப்பில் இருந்து நச்சுகளை நீக்கி உடலை நச்சுத்தன்மையாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

Also read: Red Banana : செவ்வாழை பழத்தில் கொட்டிக்கிடக்கும் சத்துகள்.. தினமும் ஒரு பழம் சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?

செரிமானத்தை மேம்படுத்தும்:

சீரக தண்ணீரை தொடர்ந்து குடிப்பது ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு வழி வகுக்கிறது. இது ஒட்டுமொத்த உடலின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணிக்கிறது. சீரக விதைகளில் காணப்படும் தைமால் என்ற குறிப்பிட்ட கலவை இரைப்பை சுரப்பி சுரப்பைத் தூண்டுகிறது. இது உங்களுக்கு அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்கிறது.

எடை குறைப்பு:

சீரகத்தின் தன்மை உடல் குறைக்க அதிக உதவிகள் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. சீரகத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள், கெட்ட கொழுப்பை (குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம், எல்டிஎல்) குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. இதில் உள்ள ரேச்சனா பண்பு காரணமாக உடலில் இருந்து கெட்ட கொழுப்பை வெளியேற்ற உதவுகிறது.

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
Exit mobile version