Diabetes: சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? வராமல் தடுப்பது எப்படி..?
Diabetes Symptoms: பெரும்பாலான மக்களுக்கு உடலின் சர்க்கரையின் அளவு அதிகரிக்க தொடங்கும்போது, இதை உணர்வது கிடையாது. இதுவே, பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். அந்தவகையில், சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகளை நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியம்.
இந்தியாவில் சர்க்கரை நோய் ஒரு பெரிய உடல்நலப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. ஒரு காலத்தில் முதியவர்கள் மட்டும் எதிர்கொண்ட பிரச்சனையை, தற்போதைய இளைய தலைமுறைகளும் எதிர்கொள்கின்றனர். மேலும், சர்க்கரை நோய் நமக்கும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஒரு சிலர் இருந்துள்ளனர். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெரும்பாலும் இயல்பை விட அதிகமாக இருந்தால், கண்கள், இதயம், நரம்பு மண்டலம் போன்ற உறுப்புகலில் பாதிப்பு ஏற்படலாம். உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் வருகிறது. ஒரு சிலருக்கு இது மரபணு காரணங்களாலும் ஏற்படுகிறது. மரபணு மூலம் ஏற்படும் சர்க்கரை நோயானது டைப் – 1 சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது.
மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் சர்க்கரை நோய் டைப் 2 சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது. அந்தவகையில், வாழ்க்கைமுறை மற்றும் உணவு பழக்கம் போன்ற காரணங்களால் சர்க்கரை அளவு அதிகரிப்பது இன்றைய காலத்தில் அதிகமாக உள்ளது.
ALSO READ: Breathing Trouble: பருவ மாற்றத்தால் ஆஸ்துமா பிரச்சனையா..? ஆரோக்கியமாக வைப்பது எப்படி?
சர்க்கரை நோய் ஆபத்தை விளைவிக்கும்:
சர்க்கரை நோய் என்பது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் சேதப்படுத்தும் ஒரு நோயாகும். சர்க்கரை நோய் கண்கள், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, முழு உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான மக்களுக்கு உடலின் சர்க்கரையின் அளவு அதிகரிக்க தொடங்கும்போது, இதை உணர்வது கிடையாது. இதுவே, பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். அந்தவகையில், சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகளை நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியம்.
சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன..?
சர்க்கரை நோய் என்பது உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் ஒரு நோயாகும். சர்க்கரை நோய் வருவதற்கு முன்பே உடலில் பல அறிகுறிகள் தோன்றும். சர்க்கரை நோயின் பொதுவான அறிகுறிகளுக்கு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். அதன்படி அதிக தாகம், வாய் வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு மற்றும் பலவீனம், திடீர் எடை இழப்பு, அடிக்கடி நோய்த்தொற்றுகள், மங்கலான பார்வை ஆகியவை நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும்.
சர்க்கரை நோயை தடுக்க முடியுமா..?
டைப் 2 சர்க்கரை நோயை வாழ்க்கை முறையில் மாறுவதன் மூலம் பெருமளவு தடுக்க முடியும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம், தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலமும், எடையை கட்டுப்படுத்துவதன் மூலம் குறைக்கலாம். அதேபோல், புகைபிடித்தல், மது அருந்துவதை தவிர்ப்பதன் மூலமும் சர்க்கரை நோயை தவிர்க்கலாம். அதேநேரத்தில். டைப் 1 சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது. இது நோயெதிர்ப்பு மண்டலம் தொடர்பான பிரச்சனை என்பதால், இதை குணப்படுத்துவது முடியாத காரியம்.
உங்கள் பாதங்களில் காணப்படும் சில அறிகுறிகள் சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். அதையும் இங்கு தெரிந்து கொள்வோம்.
- சர்க்கரை நோயால் பாதங்களில் உள்ள நரம்புகள் பாதிப்படையும். இதன் காரணமாக வலி, உணர்வின்மை, கூச்ச உணர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
- சர்க்கரை நோயால் பாதங்களில் இரத்த ஓட்டம் குறையலாம். இதனால், புண்கள் ஏற்படலாம், காயங்கள் ஆறுவது கடினமாகி விடும்.
- சர்க்கரை நோயால் பாதங்களின் தோலின் நிறம் சிவப்பு, பழுப்பு அல்லது கருப்பு நிறமாக இருக்கலாம்.
- சர்க்கரை நோயால் பாதங்களில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
உங்கள் பாதங்களில் மேற்கூறிய அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொண்டு சர்க்கரை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்வது நல்லது. அதேபோல், 40 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், அடிக்கடி சர்க்கரை நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. அதனால்தான் ஒவ்வொருவரும் தங்கள் சர்க்கரை அளவை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)