Health Tips: காய்ச்சல், சளி பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? தினமும் இந்த உணவுகளை எடுத்துக்கோங்க! - Tamil News | What can be done to prevent colds and flu during monsoons; health tips in tamil | TV9 Tamil

Health Tips: காய்ச்சல், சளி பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? தினமும் இந்த உணவுகளை எடுத்துக்கோங்க!

Monsoon Care Tips: மழைக்காலத்தில் நமது உடலின் மெட்டபாலிசம் குறைவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று அதிகளவில் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக சளி, இருமல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் போன்றவை அதிகரிக்க தொடங்கும். இவற்றை தவிர்க்க, வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

Health Tips: காய்ச்சல், சளி பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? தினமும் இந்த உணவுகளை எடுத்துக்கோங்க!

மழைக்காலம் (Image: freepik)

Updated On: 

15 Oct 2024 16:19 PM

மழைக்காலம் எவ்வளவு குளிர்ச்சியை தருகிறதோ, அதே அளவிற்கு நம் உடலில் நோய்களின் தாக்கத்தையும் அதிகரிக்க செய்யும். இந்த மழைக்காலத்தில் வெப்பநிலை மிகவும் குறைவாகவும், ஈரப்பதம் அதிகமாகவும் இருக்கும். இதனால், வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அதிவேகமாக வளர தொடங்கும். இதன் காரணமாக, மழை நேரத்தில் நீங்கள் எதை செய்தால் கவனமுடன் ஈடுபடுவது முக்கியம். உதாரணத்திற்கு குளிப்பது, சாப்பிடுவதில் கூட கவனம் செலுத்துவது கூட மிக மிக முக்கியம். மழைக்காலத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க உணவு பழக்கத்தில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

மழைக்காலத்தில் நமது உடலின் மெட்டபாலிசம் குறைவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று அதிகளவில் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக சளி, இருமல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் போன்றவை அதிகரிக்க தொடங்கும். இவற்றை தவிர்க்க, வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், வீட்டில் அவ்வபோது சமைக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிடுவது நல்லது. மழைக்காலத்தில் பெரும்பாலான உணவுகள் விரைவில் கெட்டுவிட தொடங்கும்.

ALSO READ: Northeast Monsoon: தொடங்கியது வடகிழக்கு பருவமழை… சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

உணவு மற்றும் தண்ணீரில் கவனம்:

மழைக்காலத்தில் தெருவோர உணவுகளில் மக்கள் சாப்பிடும்போது, இது வயிற்று தொற்று, இரைப்பை அழற்சி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம். இது தவிர, அசுத்தமான தண்ணீரை குடிப்பதால் மலேரியா, காலரா மற்றும் மஞ்சள் காமாலை போன்றவை வருவதற்காக வாய்ப்புகளும் அதிகம். மழைக்காலத்தில் போதுமான அளவு தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லது.

மழைக்காலத்தில் பயன்படுத்த வேண்டிய அருமருந்துகள்:

மழைக்காலத்தில் மக்கள் தங்கள் உணவில் இஞ்சியை தவறாமல் சேர்த்துக்கொள்வது முக்கியம். இஞ்சி நம் தொண்டையில் வெப்பமயமாதல் விளைவை ஏற்படுத்து, தொண்டை வலி, இருமல் போன்ற அசௌகரியத்தை குறைக்க பெரிதும் உதவும். மேலும், இஞ்சி தொண்டையில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும். இஞ்சியில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலில் தொற்றுநோய்களை எதிர்த்து போராடுவது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. இதையடுத்து, மழைக்காலத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இஞ்சி டீயை எடுத்து கொள்ளலாம்.

எலுமிச்சை:

மக்கள் பெரும்பாலும் மழைக்காலத்தில் பிரச்சனையை தரும் என்று நினைத்து, தவிர்க்கிறார்கள். ஆனால், எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. எலுமிச்சையை ஜூஸ், சாலடுகள் அல்லது பிற உணவுகளில் பிழிந்து எடுத்துக்கொள்ளலாம். மேலும், மழைக்காலத்தில் குளிர்ச்சிக்கு இதமாக வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையை கலந்து குடிக்கலாம். இது உங்கள் உடலை தொற்றுநோயிலிருந்து விரைவில் மீட்க உதவி செய்யும்.

சூப்:

மழைக்காலத்தில் மட்டுமல்லாது, எந்த காலத்திலும் ஒருவர் சளி, காய்ச்சல், தொண்டை வலி அவதிப்பட்டால், காய்கறி சூப் செய்து ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்கலாம். அதேபோல், தக்காள் சூப் தொண்டைக்கு மிகுந்த நிவாரணத்தையும், உடலை வலுவாக்கவும் உதவி செய்யும். காய்கறிகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் இருக்கு தொற்றுகளை நீக்கும்.

ALSO READ: Diwali Dessert Recipes: உறவினர்களை மயக்கும் உணவை பரிமாற ஆசையா? தீபாவளிக்கு படுஜோரான அல்வா ரெசிபி…!

பூண்டு:

மழைக்காலத்தில் பூண்டு சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை தரும். பூண்டில் ஆண்டிவைரல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடலை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கும். பூண்டில் இருக்கும் சூடான தன்மை, உடலை சூடாக வைத்திருக்கும். அந்தவகையில், பூண்டை பச்சையாகவோ அல்லது வறுத்தோ வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

மழைக்காலத்தில் குளிர்ச்சியானவற்றைத் தவிர்த்து, சூடான உணவுகளை உண்ண வேண்டும். புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உப்பு சேர்த்து வெந்நீரில் கழுவிய பின் பயன்படுத்துங்கள்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
தண்ணீரின்றி உயிர் வாழும் பாலைவன விலங்குகள் என்னென்ன?
உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான உறவுகளை உருவாக்குவது எப்படி?
மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அப்துல் கலாமின் பொன்மொழிகள்...!