Kitchen Tips: மாவுகள் கெட்டு போகாமல் இருக்க வேண்டுமா? இந்த எளிய குறிப்புகள் உதவும்!

Prevent The Flour: நீங்கள் மொத்தமாக மாவு வாங்கினால், அதன் தரம் மற்றும் காலாவதி தேதியை சரிபாருங்கள். மிகவும் பழைய மாவு என்றால் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது அல்ல. பூச்சிகளால் விரைவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மாவை முடிந்தவரை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைக்க நேரடியாக அரைத்து வைத்து கொள்வது நல்லது.

Kitchen Tips: மாவுகள் கெட்டு போகாமல் இருக்க வேண்டுமா? இந்த எளிய குறிப்புகள் உதவும்!

மாவு (Image: Freepik)

Published: 

20 Nov 2024 13:34 PM

வீடுகளில் நாம் கோதுமை உள்ளிட்ட மாவுகளை கடைகளில் வாங்கியோ அல்லது வெயிலில் காயவைத்து அரைத்தோ டப்பாகளில் அடைத்து வைப்போம். இவைகளை எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருந்தாலும், பூச்சிகள் உள்ளே சென்று அந்த மாவின் தரத்தை மோசமாக்கும். அதுவும், மழைக்காலத்தில் உங்கல் சமையலறை எவ்வளவு சுத்தமாக இருந்தாலும், இந்த சிறிய பூச்சி வகைகள் உங்கள் மாவு ஜாடிக்குள் சென்றுவிடும். இந்த பூச்சிகல் ஈரமான மற்றும் ஈரப்பதம் இருக்கும் சூழ்நிலையில் வளரும் என்பதால் பருவமழை காலம் இவைகள் இனப்பெருக்கத்திற்கு சிறந்த காலமாக இருக்கும்.

இவை ஒருமுறை உள்ளே புகுந்து இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்துவிட்டால், அவற்றை தடுத்து நிறுத்துவது கடினமாகிவிடும். மாவை சேமித்து வைப்பதற்கு முன் எப்போதும் வெயிலில் சிறிது நேரம் காயவைப்பது நல்லது.
எனவே, மாவுகளை எப்படி பாதுகாப்பாக சேமித்து வைப்பது என்று இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Food Recipe: சளி, இருமலால் இரவில் தூக்கம் இல்லையா..? இந்த இஞ்சி ரசம் ரெசிபி சரி செய்யும்..!

அலுமினிய பாத்திரங்கள்:

மாவுகளை பிளாஸ்டிக் டப்பாகளில் சேமித்து வைப்பதை முடிந்தவரை தவிர்க்கவும். காற்றில் உள்ள ஈரப்பதம் மாவின் தரத்தை பாதிக்கும். இதையடுத்து, எஃகு அல்லது அலுமினிய பாத்திரங்களில் போட்டுவைப்பது நல்லது. இவ்வகை பாத்திரங்களில் மாவுகளை கொட்டி வைப்பதற்கு முன்பு அதை கழுவி வெயிலில் நன்றாக காய வைக்கவும். மாவுகளில் சிறு துளி நீர் இருந்தால் கூட மாவை கெடுத்துவிடும். நீங்கள் டப்பாகளில் கொட்டியபிறகு, எப்போதும் ஒரு ஸ்பூன், ஒரு கிண்ணம் அல்லது ஒரு சிறிய தட்டை பயன்படுத்தி எடுத்து பயன்படுத்துங்கள்.

உப்பு:

நீங்கள் ஒரு டப்பாவில் நீண்ட காலத்திற்கு மாவை பாதுகாப்பாக சேமிக்க விரும்பினால், 10 கிலோ மாவில் 4 முதல் 5 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இது உங்கள் மாவை கெட்டுப்போகாமல் பாதுகாக்க உதவி செய்யும்.

வர மிளகாய்:

மாவில் உப்பு சேர்க்க உங்களுக்கு விருப்பம் இல்லையெனில், அதற்கு பதிலாக வர மிளகாயை பயன்படுத்தலாம். 10 முதல் 15 வரையிலான வர மிளகாயை மாவில் போட்டு வைக்கவும். இவை உங்கள் மாவை பாதுகாக்கும்.

பிரியாணி இலைகள்:

மாவில் பூச்சிகள் விழாமல், மாவு கெட்டுப்போகாமலும் இருக்க மாவு போட்டுவைக்கும் பாத்திரத்தில் பிரியாணி இலைகளை போட்டு வைக்கலாம். இவை, மாவு பாத்திரங்களில் பூச்சி விழாமல் உதவி செய்யும். இது மட்டுமின்றி, மாவு போட்டு வைத்திருக்கும் பாத்திரத்தை சுற்றி கிராம்பு பொடியை தூவலாம். இது பாத்திரத்தில் பூச்சிகளை வரவிடாமல் தடுக்கும்.

காற்று புகாத பாத்திரம்:

மாவுக்குள் பூச்சிகள் செல்லக்கூடாது என்றால் காற்று புகாத பாத்திரம் அல்லது இறுக்கமான மூடிக்கொண்ட உலோகப் பாத்திரங்களில் மாவை போட்டு மூடி வைக்கலாம். மூடி இறுக்கமாக இருப்பதன் காரணமாக பூச்சிகள் எளிதில் பாத்திரத்திற்குள் நுழையாது. இதேமுறையே, நீங்கள் பிளாஸ்டிக் டப்பாகளிலும் போட்டு ஈரப்பதம் இல்லாத இடத்தில் பத்திரப்படுத்தி வைக்கலாம்.

மஞ்சள் அல்லது இஞ்சி:

வரமிளகாய் போன்று மஞ்சள் அல்லது இஞ்சி போன்றவைகளை மாவு வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராமல் தடுக்கும்.

ALSO READ: Benefits of Bananas: வாழைப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிடுங்க.. இந்த பலன்கள் உங்கள் உடலில் சேரும்!

குளிர்சாதனப் பெட்டி:

அதிக அளவு மாவுகளை குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக வைக்கலாம். மாவு நீண்ட நாட்கள் புதியதாகவும், பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கப்படுவதற்கும் குளிர்சாதனப்பெட்டியை பயன்படுத்தலாம். இதற்கு, மாவை காற்று புகாத பிளாஸ்டிக் பையில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். ஈரப்பதம் மாவில் ஆதிக்கம் செலுத்தாமல் இருந்தால், பாதுகாப்பாக இருக்கும். அப்படி, இல்லையெனில் அது கெட்டுப்போகலாம்.

நீங்கள் மொத்தமாக மாவு வாங்கினால், அதன் தரம் மற்றும் காலாவதி தேதியை சரிபாருங்கள். மிகவும் பழைய மாவு என்றால் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது அல்ல. பூச்சிகளால் விரைவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மாவை முடிந்தவரை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைக்க நேரடியாக அரைத்து வைத்து கொள்வது நல்லது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

இன்ஸ்டாவில் வைரலாகும் நிமிர் பட நடிகை நமீதா பிரமோத் போட்டோஸ்!
நடிகை நஸ்ரியா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
குழந்தையின் வெற்றிக்கு தாய் செய்ய வேண்டிய விஷயங்கள்!
நடிகை ஷாலினி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!