Heart health: மழைக்காலத்தில் மாரடைப்பு பிரச்சனை அதிகரிக்கும்.. இதை செய்தால் வராமல் தடுக்கலாம்!
Heart Disease Prevention: மழை மற்றும் குளிர் காலத்தில் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வேகமாக அதிகரிக்கும். இதற்கு, மோசமான ஊட்டச்சத்து, உடற்பயிற்சியின்மை, நொறுக்கு தீனிகளும் ஒரு வகையில் காரணமாகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சில விஷயங்களை உங்கள் வாழ்க்கைமுறையில் சேர்த்துக் கொண்டால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் தொடர்பாக தினந்தோறும் பல விஷயங்களை பார்த்தும், கேட்டும் வருகிறோம். முன்பெல்லாம் இதுபோன்ற விஷயங்கள் 50 வயதை கடந்தவர்களுக்கே மாரடைப்பு ஏற்பட்டு வந்தநிலையில், தற்போது இளம் வயதிலேயே இந்த பிரச்சனைகளால் ஆளாகின்றன. மழை மற்றும் குளிர் காலத்தில் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வேகமாக அதிகரிக்கும். இதற்கு, மோசமான ஊட்டச்சத்து, உடற்பயிற்சியின்மை, நொறுக்கு தீனிகளும் ஒரு வகையில் காரணமாகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சில விஷயங்களை உங்கள் வாழ்க்கைமுறையில் சேர்த்துக் கொண்டால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உங்கள் வாழ்க்கைமுறையில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Home Fragrance: ஈரப்பதத்தால் படுக்கையறையில் நாற்றமா..? இப்படி செய்தால் நறுமணம் வீசும்!
நடந்து செல்லுங்கள்:
எந்த வயதினராக இருந்தாலும் தினசரி வாழ்க்கையில் நடைபயிற்சியை மேற்கொள்வது நல்லது. தினமும் தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை என்றாலும், ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 9 ஆயிரம் அடிகள் நடப்பது நல்லது. இது உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். தினசரி நடைபயிற்சி உங்கள் உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, இதய நோய், பக்கவாதம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும். அப்படி இல்லையென்றால், சைக்கிள் ஓடுதல் போன்ற சிறு சிறு பழக்கவழக்கங்களை மேற்கொள்வது நல்லது.
எடையை பராமரிக்கும்:
உடல் பருமன் ஒன்று உடலில் பல நோய்களை வரவைக்கும். உடல் பருமன் சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை வர காரணமாக அமைக்கிறது. எனவே, உடல் எடையை பராமரிப்பது மிக மிக முக்கியம். இன்றைய காலத்தில் சிறு வயது முதலே குழந்தைகளின் எடை அதிகரிக்க தொடங்கிவிடுகிறது. இது எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்கி இதய பிரச்சனையை ஏற்படுத்தலாம். எனவே, சிறுவயது முதலே குழந்தைகளின் எடையில் அக்கறை எடுத்துகொள்வது நல்லது.
பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகள்:
வெளி உணவுகளை எவ்வளவு அதிகமாக எடுத்து கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு கேடு என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். வறுத்த உணவுகள், வெண்ணெய் மற்றும் கேக் போன்ற உடலுக்கு கொழுப்பு சேர்க்கும் உணவுகளையும் எடுத்து கொள்ள வேண்டாம். இதுபோன்ற உணவுகள் இதய ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். எல்.டி.எல் கொழுப்பின் அளவை விரைவாக அதிகரிக்க செய்கிறது.
ஓய்வு எடுங்கள்:
எப்போதும் வேலை வேலை என்று இருப்பவர்களுக்கு போதுமான ஓய்வு எடுத்துகொள்வது முக்கியம். அதிகபடியான மன அழுத்தத்தை எடுத்து கொள்ளும்போது, இது இதயத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை உண்டாக்கும். எனவே, நேரம் கிடைக்கும்போது, குடும்பத்துடன் எங்கேயாவது பயணம் மேற்கொண்டு உங்களுக்கு பிடித்தவற்றை செய்யுங்கள். இது உங்களுக்கு மன அமைதியை தருவதுடன், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
ALSO READ: Kidney Disease: டயாலிசிஸ் என்றால் என்ன..? சிறுநீரகங்களை பாதுகாப்பது எப்படி..?
ஆரோக்கியமான உணவுகள்:
ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகள் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். உங்கள் இதயம் சரியாக செயல்பட வேண்டுமெனில், ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், ஒமேகா 3, நார்ச்சத்து, புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி, ஒவ்வொரு நாளும் உங்கள் உணவில் குறைந்தது 2-3 காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள் எடுத்துகொள்வது நல்லது. இது தவிர, போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், ஒரு நாளைக்கு ஒரு கப் காபி குடிப்பது உங்கள் இதயத்திற்கு நன்மை தரும்.
சர்க்கரை அளவு:
வயதாகும்போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கண்காணிப்பது மிக முக்கியம். அதிகரித்த இரத்த சர்க்கரை அளவுகள், தமனிகளுக்கு ஆக்ஸிஜனேற்ற சேதத்தை ஏற்படுத்தும். அதேபோல், ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டத்தை பாதிக்க செய்யும். இதன் காரணமாக, மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம். எனவே, ஆரோக்கியமான இதயத்திற்கு இரத்த சர்க்கரையை அளவை பராமரிக்க வேண்டும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)