5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ant Infestation: வீட்டில் எறும்பு தொல்லையா? ஈசியா விரட்ட சிம்பிள் டிப்ஸ்!

Prevent an Ant Infestation: குழந்தைகள் முதல் 5 வயது சிறியவர்கள் வரை கொடுக்கும் தின்பண்டங்களை வீடு முடுவதும் கொட்டிவிடுகின்றனர். இதனால் வரும் எறும்புகள் குழந்தைகளை கடிக்கும் நிலைமையும் ஏற்படும். இவற்றை எல்லாம் தடுப்பதற்காகவே எறும்பை விரட்டும் 7 டிப்ஸ்களை இங்கே பார்க்க போகிறோம்.

Ant Infestation: வீட்டில் எறும்பு தொல்லையா? ஈசியா விரட்ட சிம்பிள் டிப்ஸ்!
கோப்பு புகைப்படம்
mukesh-kannan
Mukesh Kannan | Published: 18 Jul 2024 11:32 AM

எறும்பு தொல்லை: வெயில் காலமோ, மழை காலமோ எந்த காலமாக இருந்தாலும் வீட்டில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று எறும்பு தொல்லை. பொதுவாக எறும்புகளை பொறுத்தவரை வெயில் காலத்தில் சேமிக்கும். வெயில் காலத்தில் சேமிக்கும் அனைத்தையும் மழை காலத்தில் உணவாக பயன்படுத்திக்கொள்ளும். இதனால், வீட்டில் வைத்திருக்கும் சர்க்கரை, சிந்திய சாதம், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட சிலவற்றை தேடி கண்டுபிடித்து ஆக்கிரமிக்கும். இதன் காரணமாக, அடிக்கடி வீடு சுத்தமாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைகள் முதல் 5 வயது சிறியவர்கள் வரை கொடுக்கும் தின்பண்டங்களை வீடு முடுவதும் கொட்டிவிடுகின்றனர். இதனால் வரும் எறும்புகள் குழந்தைகளை கடிக்கும் நிலைமையும் ஏற்படும். இவற்றை எல்லாம் தடுப்பதற்காகவே எறும்பை விரட்டும் 7 டிப்ஸ்களை இங்கே பார்க்க போகிறோம்.

ALSO READ: Smriti Mandhana Birthday: கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பிறந்தநாள் இன்று.. நேஷனல் க்ரஷ் ரெக்கார்ட் லிஸ்ட் இதோ!

சாக்பீஸ்:

அனைவரது வீடுகளிலும் பெரும்பாலும் கோலம் வரைவதற்கும், குழந்தைகளுக்கு பாடம் சொல்லிகொடுப்பதற்கும் சாக்பீஸ் இருக்கும். இதில், கால்சியம் கார்பனேட் இருக்கின்ற காரணத்தினால் சுண்ணாம்பு ஸ்மெலுக்கு எறும்புகள் வராது. இதையே தான் எறும்பு சாக்பீஸ் முறையிலும் பயன்படுத்துகிறோம். இது எறும்புகள் வரும் இடத்தில் கோடுகள் வரைந்தால் வராது.

மஞ்சள் பொடி:

வீட்டில் இருக்கும் இந்த மஞ்சளின் அருமை நம் அனைவருக்கும் தெரியும். மஞ்சள் பொடியின் ஸ்மெலுக்கும் எறும்புகள் நெருங்காது. எந்தெந்த இடங்களில் எறும்புகள் அதிகமாக இருக்கிறதோ, அங்கு மஞ்சள் பொடியை தூவலாம். அதேபோல், இனிப்பு தொடர்பான பொருட்கள் இருக்கும் இடத்தை சுற்றி பொடியால் வட்டமிட்டு வைத்தால் எறும்பு தொல்லை இருக்காது.

மிளகு தூள்:

மஞ்சள் தூளை போன்று மிளகு தூளும் எறும்புகளை விரட்ட பயன்படும் என்றால் உங்களால் நம்ப முடியுமா. மிளகு பொடியில் வெளிப்படும் ஒருவிதமாக காட்டத்திற்கே எறும்புகள் வராது. அதன்படி, புற்று இருக்கும் இடங்களில் நேரடியாகவும், இனிப்புகளை சுற்றி வட்டமாகவும் பயன்படுத்தலாம்.

கிராம்பு:

என்னதான் நமது சமையலறையில் சர்க்கரை ஒரு டப்பாவில் போட்டு அடைத்து வைத்தாலும், அதற்குள் எறும்புகள் எப்படியாவது தஞ்சமடைந்து விடும். அதற்கு தீர்வு காணும் வகையில் சர்க்கரை போட்டு வைத்திருக்கும் டப்பாவிற்குள் 4 முதல் 5 அளவிலான கிராம்புகளை போட்டு வைத்தால் எறும்பு தொல்லை இனி இல்லை.

பெருங்காய பொடி:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் மிளகு பொடிகளை போன்று பெருங்காய பொடியும் எறும்புகளை விரட்டுவதற்கு ஒரு சிறந்த காரணி. புற்றுகளில் நேரடியாகவும், தின்பண்டங்கள் மற்றும் சர்க்கரை டப்பாவை சுற்றி வட்டமாகவும் பெருங்காய பொடியினை பயன்படுத்தலாம்.

எழுமிச்சை பழம்:

எழுமிச்சை பழத்தின் சாறுகளை நேரடியாக நம் வீட்டியில் கட்டியிருக்கும் புற்றுகளின் மீது நேரடியாக பயன்படுத்தலாம். அதேபோல், எறும்பு அமைத்திருக்கும் பாதைகளில் தேய்த்துவிட்டாலே போதும், எழுமிச்சையில் வெளிபடும் அமிலம் எறும்புகளை நம் பக்கத்தில் இருந்து விரட்டும்.

ALSO READ: Sandals: உயிரை பாதுகாக்கும் செருப்பு.. ஏன் முக்கியம் தெரியுமா? மருத்துவர் சொன்ன முக்கிய விளக்கம்!

அந்துருண்டை:

சமையலறை மற்றும் வீட்டில் எறும்புகள் இருந்தால் இதையெல்லாம் செய்யலாம். பாத்ரூம்களில் இருந்தால் என்ன செய்யலாம் என்று கேட்பவர்களுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ். ஒரு வட்டவடிவிலான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடாவை போடவும். அதில் 4 ஸ்பூன் அளவிற்கு வினிகர் கலந்து, அந்துருண்டையை பொடியாக்கி கலந்து தெளித்தால் பாத்ரூமில் எறும்பு தொல்லைகள் இருக்காது.

Latest News