Health Tips: திடீரென எழுந்து நிற்கும்போது தலைச்சுற்றலா? இவைதான் முக்கிய காரணங்கள்..!

Dizziness: திடீரென எழுந்து நிற்கும்போது சிலருக்கு மயக்கம் அல்லது தலை சுற்றல் ஏற்படலாம். பொதுவாக, இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே ஏற்படும். ஏனெனில், வயதுக்கு ஏற்ப நமது இரத்த நாளங்கள் பலவீனமடைய தொடங்கும். இதையடுத்து, பலவீனமான இரத்த நாளங்கள் உங்களது மூளை செல்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை வழங்குவது கிடையாது. இதனால்தான் தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்படும்.

Health Tips: திடீரென எழுந்து நிற்கும்போது தலைச்சுற்றலா? இவைதான் முக்கிய காரணங்கள்..!

தலைச்சுற்றல் (Image: freepik)

Published: 

13 Nov 2024 14:10 PM

காரணமே இல்லாமல் சிலருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்படும். இது ஏன் ஏற்படுகிறது, இதற்கான காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியவில்லை என்றால், அதற்காக விளக்கத்தை இங்கே தருகிறோம். ஆர்த்தோஸ்டேடிக் மற்றும் போஸ்டுரல் ஹைபோடென்ஷன் காரணமாக நின்று கொண்டிருக்கும்போது திடீரென தலைச்சுற்றல் ஏற்படலாம். இது குறைந்த இரத்த அழுத்தத்தின் நிலையாகும். இருப்பினும், சில வினாடிகளுக்கு மேல் நீடிக்கும் தலைசுற்றல் குறிப்பிட்ட வகை நோயின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

திடீரென எழுந்து நிற்கும்போது சிலருக்கு மயக்கம் அல்லது தலை சுற்றல் ஏற்படலாம். பொதுவாக, இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே ஏற்படும். ஏனெனில், வயதுக்கு ஏற்ப நமது இரத்த நாளங்கள் பலவீனமடைய தொடங்கும். இதையடுத்து, பலவீனமான இரத்த நாளங்கள் உங்களது மூளை செல்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை வழங்குவது கிடையாது. இதனால்தான் தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்படும்.

ALSO READ:Monsoon Prevention: மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க வேண்டுமா..? இதை பின்பற்றினால் போதுமானது!

தலைசுற்றுவதற்கான காரணங்கள் என்ன..?

திடீர் அசைவு:

நீங்கள் நிற்கும்போதோ, உட்காரும்போதோ அல்லது படுத்திருக்கும்போதோ, உங்கள் இதயம் உடலில் இரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக வேலை செய்யும். அதாவது, நீங்கள் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது உங்கள் இரத்த அழுத்தம் இயற்கையாகவே மாற்றம் அடையும். இதுவே ஹோமியோஸ்டாஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது உங்கள் உடலின் அமைப்புகள் சரியாக செயல்பட உதவி செய்யும். நீங்கள் திடீரென ஒரு நிலையை மாற்றும்போது உங்கள் மூளையில் சிறு அதிர்ச்சி ஏற்படும். இதனால் சில நொடிகள் உங்கள் மூளைக்கு இரத்தம் வராது. இது சரியாக சில நேரம் ஒரு நிமிடம் வரை கூட ஆகும். இதன் இரத்த அழுத்தம் ஏற்றம் இறக்கமாகி, உங்களுக்கு தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம்.

நிற்கும்போது உங்களுக்கு அடிக்கடி தலைசுற்றல் ஏற்பட்டால், உங்கள் உடலை சமநிலைப்படுத்த சில நிமிடம் கொடுக்க வேண்டும். இதற்காக, நீங்கள் சுவரையோ, வீட்டின் ஜன்னல் கம்பியையோ பிடித்து நிற்கலாம். அப்படி இல்லையென்றால், எங்காவது உட்காரலாம். தலை சுற்றல் சரி செய்ய தலை மற்றும் கைகளை மேலும் கீழும் அசைக்கலாம். இதனால், இரத்த ஓட்டம் சீராகும்.

படுக்கையில் இருந்து எழும்போது தலைசுற்றல் ஏற்பட்டால், எழுவதற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம். இதனால், உடலில் உள்ள இரத்த ஓட்டம் மேம்படும்.

நீரிழப்பு:

ஒரு நாளைக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும், அதிகமாக சூடாக இடங்களில் இருக்கும்போதோ உங்கள் உடல் சூடாகிவிடும். உங்களை சுற்றி இருக்கும் பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, உங்கள் இரத்த அழுத்தம் குறைய தொடங்கும். இதன் காரணமாகவும், தலைச்சுற்றல் ஏற்படலாம். எனவே, உடலை நீரேற்றமாக வைத்து கொள்வதன் மூலம், தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.

உடற்பயிற்சி:

நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது, உங்கள் தசைகள் மூலம் இதயத்திற்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். சிறிது நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருக்கும்போது இரத்தம் ஓட்டம் சீராக நேரம் எடுக்கும். இதன்காரணமாகவே, உடற்பயிற்சி செய்த பிறகு, சிலருக்கு மயக்கம் ஏற்படுகிறது. ஒரே நாளில் அதிகப்படியான உடற்பயிற்சி மேற்கொள்வது தலைச்சுற்றல், குமட்டல் போன்ற பிரச்சனை ஏற்படுத்தலாம். எனவே, உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் நிறைய தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். இடைப்பட்ட நேரத்திலும் சிறிதளவு தண்ணீர் குடியுங்கள்.

ALSO READ: Periods Health: மாதவிடாயின்போது அதிக இரத்தப்போக்கு! இரத்த சோகை அபாயத்தைக் குறைக்க என்ன சாப்பிடலாம்?

மது அருந்துதல்:

மது அருந்துதல் உங்களது இரத்த நாளங்களை சேதப்படுத்தி, சுருங்க செய்யும். இதனால், இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும். இதன் விளைவாக, நீங்கள் நிற்கும்போது சிறிது தலைச்சுற்றல் ஏற்படலாம். மது அருந்துதல் தினந்தோறும் செய்யும்போது, உங்களது இரத்த ஓட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, மது அருந்துதல் போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

பாதாம் பருப்பை எவ்வாறு உட்கொள்வது சரியானது?
தினமும் காலையில் சிறிது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ
காலாவின் காதலி ஹூமாவின் நியூ ஆல்பம்