ABC Juice: ஏபிசி ஜூஸில் நன்மைகள் ஏராளம்.. இது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா..?

Health Tips: 100 மில்லி ஏபிசி ஜூஸில் 45-50 கிராம் கலோரி, 10-12 கிராம் கார்போஹைட்ரேட், 8-9 கிராம் சர்க்கரை, 0.5 கிராம் புரதம், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அந்தவகையில் இன்று ஏபிசி ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதிகமாக எடுத்துக்கொண்டால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதையும் இங்கே பார்க்கலாம்.

ABC Juice: ஏபிசி ஜூஸில் நன்மைகள் ஏராளம்.. இது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா..?

ஏபிசி ஜூஸ்

Published: 

31 Oct 2024 17:40 PM

ஏபிசி ஜூஸ் சமீபத்தில் அதிகமாக கேள்விபட்ட ஒரு பெயராக இருக்கும். ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகியவற்றின் கலவையே ஏபிசி ஜூஸ் என்று அழைக்கிறோம். இந்த ஜூஸ் ஃபிட்னஸ் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். இந்த ஜூஸ் குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பராமரிக்கப்படுவது மட்டுமல்லாமல், இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை போகவும் செய்கிறது. ஏபிசி ஜூஸில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற பல சத்துகள் உள்ளன. இது தவிர கால்சியம், தாமிரம், இரும்பு மற்றும் மெக்னீசிய சத்துகளும் ஏபிசி ஜூஸில் உள்ளது.

அதாவது, 100 மில்லி ஏபிசி ஜூஸில் 45-50 கிராம் கலோரி, 10-12 கிராம் கார்போஹைட்ரேட், 8-9 கிராம் சர்க்கரை, 0.5 கிராம் புரதம், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அந்தவகையில் இன்று ஏபிசி ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதிகமாக எடுத்துக்கொண்டால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதையும் இங்கே பார்க்கலாம்.

ALSO READ: Health Care: பட்டாசு புகை ஆபத்தானதா..? சுவாச பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்யலாம்..?

சரும பாதுகாப்பு:

ஏபிசி ஜூஸில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்வதோடு, வயதான அறிகுறிகளையும் குறைக்கிறது. மேலும், இது சருமத்திற்கு பளபளப்பை தருகிறது.

இதய ஆரோக்கியம்:

குளிர் மற்றும் மழைக்காலத்தில் பொட்டாசியம் நிறைந்த கேரட் மற்றும் பீட்ரூட் உள்ள ஏபிசி ஜூஸ் குடிப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்:

ஏபிசி ஜூஸில் அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உடலில் இருக்கும் நச்சுகளை எதிர்த்து போராடவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி:

ஏபிசி ஜூஸில் உள்ள ஆப்பிள்கள் மற்றும் கேரட்டில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நம் உடலுக்கு போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி நோய் மற்றும் நோய் தொற்றுகளிடம் இருந்து பாதுகாக்கும். ஏபிசி ஜூஸில் உள்ள ஈர இரத்த அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

செரிமானத்தை மேம்படுத்தும்:

கேரட் மற்றும் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து உடலில் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதாவது, ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை பராமரித்து, மலச்சிக்கலை தடுக்கும். அடிக்கடி செரிமான பிரச்சனையால் அவதிப்படுவோருக்கு ஏபிசி ஜூஸ் சிறந்த பலனை தரும்.

எடை குறைப்பு:

உடல் எடையை குறைக்க விரும்புவோர் தாராளமாக ஏபிசி ஜூஸை எடுத்து கொள்ளலாம். இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். ஏபிசி ஜூஸ் குடித்தவுடன் உங்களுக்கு வயிறு நிரம்பிடும். இதன் காரணமாக, அதிக பசி எடுக்காது. சாப்பாட்டையும் குறைந்த அளவு எடுத்து கொள்வீர்கள்.

முடி அடர்த்தி:

ஏபிசி ஜூஸ் குடிப்பவர்களுக்கு முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் இருக்கும். இதில் உள்ள இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் முடியை நீளமாகவும், அடர்த்தியாகவும், வலுவாகவும் மாற்றும்.

ALSO READ: Diwali Special Recipes: தீபாவளி ஸ்பெஷல் மட்டன் குழம்பு.. ஈஸியா எப்படி செய்து பாருங்க..!

ஏபிசி ஜூஸின் பக்க விளைவுகள்:

ஏபிசி ஜூஸில் அதிகப்படியான நன்மைகள் இருந்தபோதிலும், அதிகமாக உட்கொள்வது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அதிகமாக ஏபிசி ஜூஸ் எடுத்து கொள்பவர்களில் சிலருக்கு வாயு மற்றும் வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள் ஏபிசி ஜூஸில் இருந்தால் பல்வேறு சேர்மங்களின் கலவையால் இவை ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகள் இந்த சாற்றை உட்கொள்ளும்போது அவர்களின் இரத்த சர்க்கரை அளவையும் கண்காணிக்க வேண்டும். இது கணிசமாக சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும்.

பீட்ரூட்டில் உள்ள அதிகப்படியான ஆக்சலேட் சிறுநீரக கற்களை உண்டாக்கும்.  எனவே, பாதகமான விளைவுகளைத் தவிர்க்க மிதமான அளவில் ஏபிசி ஜூஸ் உட்கொள்ள வேண்டியது அவசியம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?