Agoraphobia: கூட்டத்திற்கு செல்ல பயமா..? தனிமை பிடிக்கிறதா..? இந்த பிரச்சனைதான் காரணம்!
Health Tips: அகோராபோபியா பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபர் தன்னை சுற்றியுள்ள சூழல் தொடர்பான எந்தவொரு சமூக சூழலையும் எதிர்கொள்வதில் பயம் கொள்வார். அதன்படி, கூட்டம் நிறைந்த ஷாப்பிங் மால்கள், பார்ட்டிகள், சினிமா அரங்குகள் அல்லது ரயில் நிலையங்கள் போன்ற இடங்களுக்கு செல்ல தயங்குவார்கள்.
ஒரு சிலருக்கு எவ்வளவு கூட்டம் இருந்தாலும், அவர்களை எளிதாக கடந்து தங்களது தினசரி வாழ்க்கையை மேற்கொள்வார்கள். ஆனால், ஒரு சிலருக்கு கூட்டத்தை கண்டால்போதும் பயந்துவிடுவார்கள். வீட்டுக்குள் இருந்தாலும் தனியாகவே இருக்கவே விரும்புவார்கள். இவர்கள் நெரிசலான பகுதிக்கு செல்லும்போதெல்லாம், அவர்களுக்கு தலைச்சுற்றல் வரும், உடல் நடுங்க தொடங்கும், பதட்டம் தொடங்கும். இதற்கு பெயர் மருத்துவரீதியாக அகோராபோபியா என்று சொல்வார்கள். இது ஒரு மனநிலை ஆகும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, அகோராபோபியாவால் ஆளான நபர்கள், மக்களை சந்திப்பதிலும், பேசுவதில் எப்போதும் தயக்கம் காட்டவும், பயப்படவும் செய்வாது. இதனால்தான், இவர்கள் பெரும்பாலும் தனிமையை விரும்புகிறார்கள். சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், இந்த தனிமை நாளடைவில் பெரிய மன நோய்களுக்கு வழிவகுக்க செய்யும்.
ALSO READ: Lipstick: லிப்ஸ்டிக் போடும் பழக்கம் உள்ளதா? உதடுகளுக்கு கிடைக்கும் நன்மைகள் இவ்வளவு இருக்கு!
இவர்களை அடையாளம் காண்பது எப்படி..?
அகோராபோபியா பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபர் தன்னை சுற்றியுள்ள சூழல் தொடர்பான எந்தவொரு சமூக சூழலையும் எதிர்கொள்வதில் பயம் கொள்வார். அதன்படி, கூட்டம் நிறைந்த ஷாப்பிங் மால்கள், பார்ட்டிகள், சினிமா அரங்குகள் அல்லது ரயில் நிலையங்கள் போன்ற இடங்களுக்கு செல்ல தயங்குவார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் கொஞ்சம் பதற்றம் ஏற்படுவது இயற்கையானது என்றாலும், இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுபவர் எப்போதும் இத்தகைய இடங்களுக்கு செல்வதை தவிர்க்கிறார்கள். மேலும், இந்த இடங்களுக்கு செல்லும்போது பதட்டம், தொண்டை வறட்சி மட்டும் ஏற்படாமல், சில சமயங்களில் நெரிசலான இடங்களில் மயக்கமடையும் சூழலும் ஏற்படும். இந்த பிரச்சனை யாருக்கும், எப்போதும் வரலாம் என்றால் இதன் அறிகுறிகள் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களிடமும், பெண்களிடமும் அதிகளவில் காணப்படுகிறது.
இந்த பிரச்சனையின் அறிகுறிகள் என்ன..?
ஒரு நபர் வீட்டை விட்டு வெளியே செல்ல பயப்படுகிறார் என்றாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தை பற்றி சிந்தித்தாலோ அது அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும். தொடர்ந்து உடல் நடுக்கம், சுவாசிப்பதில் சிரமம், வேகமாக இதய துடிப்பு, அதிக வியர்வை, தலைச்சுற்றல், குமட்ட, வயிற்றுப்போக்கு, பீதி, பதட்டம் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
அகோராபோபியா எப்படி ஏற்படுகிறது..?
அகோராபோபியா உருவாவதற்கான காரணம் சரியாக தெரியவில்லை. ஆராய்ச்சியாளர்களும் இதுவரை கண்டறியவில்லை. இருப்பினும், இது பெரும்பாலும் பயத்தின் காரணமாகவே உருவாகிறது என்று கூறுகின்றனர். இதற்கு காரணம், தன்னால் முடியாது என்ற பயம், தன்னால் இதை செய்ய முடியாது, யாரிடம் ஏதாவது கேட்டால் என்ன சொல்லிவிடுவார்களோ என்ற பயம் இதுபோல், அனைத்திற்கு பயந்து தனிமையை அதிகம் விரும்ப தொடங்கிவிடுவார்கள்.
அகோராபோபியாவை எவ்வாறு கண்டறிவது..?
உங்களுக்கும் அகோராபோபியா இருப்பதாக உணர்ந்தால், பயம் மற்றும் தேவையில்லாத சிந்தனைகளை தள்ளிவைத்து மனநல மருத்துவர் அல்லது உளவியலாளர் போன்ற மனநல சுகாதார நிபுணர்களிடம் மனம் விட்டு பேசலாம். அப்படி உங்களுக்கு மருத்துவமனைக்கு செல்ல நேரில் பயமாக இருந்தால், தொலைபேசி அல்லது வீடியோகால் போல் பேசுங்கள்.
அகோராபோபியாவிற்கு என்ன சிகிச்சை..?
அகோராபோபியா சிகிச்சைக்கு பெரிய அளவிலான சிகிச்சை முறை என்பது எதுவும் கிடையாது. ஆனால், சிலவற்றை மேற்கொண்டு தீர்வை பெறலாம்.
- உளவியல் சிகிச்சை (பேச்சு சிகிச்சை)
- மருந்துகள்
- வாழ்க்கை முறை மாற்றங்கள்
ALSO READ: Winter Season: குளிர்காலத்தில் அதிகமாக தூங்குவது ஏன்..? இந்த இயற்கை மாற்றங்களே காரணம்!
அகோராபோயியாவிலிருந்து விடுபடுவது எப்படி..?
- ஆல்கஹால் மற்றும் காஃபின் கொண்ட பொருட்களை உட்கொள்ள வேண்டாம்.
- ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உண்ணுங்கள்
- தவறாமல் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்யுங்கள்.
- நல்ல மனநல மருத்துவரை அணுகவும்.
- சிகிச்சை மூலம் பய உணர்வை கட்டுப்படுத்துவதை தவிர, மருத்துவரின் பரிசோதனை மற்றும் பரிந்துரையின் பின்னரே மருந்து எடுத்து கொள்ளுங்கள்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)