Chalazion: கண் இமை மீது சிவப்பு நிற கட்டியா..? இது ஏன் உருவாகிறது தெரியுமா..? - Tamil News | What is an chalazion its symptoms causes and treatment; health tips in tamil | TV9 Tamil

Chalazion: கண் இமை மீது சிவப்பு நிற கட்டியா..? இது ஏன் உருவாகிறது தெரியுமா..?

Eye Treatment: சலாசியன் ஏற்பட முக்கிய காரணம் கண் இமைகளில் சிறிய சுரப்பிகள் உள்ளன. இவை கண்களை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும் எண்ணெய் பொருளை உற்பத்தி செய்யும். இந்த எண்ணெய் சுரப்பிகள் சுரப்பதை தடுக்கும்போது இந்த கட்டிகள் உருவாகிறது. பொதுவாகவே, இந்த கட்டிகள் தானாகவே உருவாகி தானாகவே குணமாகும்.

Chalazion: கண் இமை மீது சிவப்பு நிற கட்டியா..? இது ஏன் உருவாகிறது தெரியுமா..?

கண் இமை (Image: freepik)

Published: 

03 Nov 2024 15:10 PM

சலாசியன் என்பது கண் இமைகளின் மீது உருவாகும் கட்டி போன்றது. இது மழைக்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையாகும். இந்த கட்டி மேல் மற்றும் கீழ் இமைகளில் உருவாகும். இந்த கட்டிகள் வலியை தரவில்லை என்றாலும், அந்த இடத்தில் வீக்கத்தை தரும். சலாசியன் ஏற்பட முக்கிய காரணம் கண் இமைகளில் சிறிய சுரப்பிகள் உள்ளன. இவை கண்களை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும் எண்ணெய் பொருளை உற்பத்தி செய்யும். இந்த எண்ணெய் சுரப்பிகள் சுரப்பதை தடுக்கும்போது இந்த கட்டிகள் உருவாகிறது. பொதுவாகவே, இந்த கட்டிகள் தானாகவே உருவாகி தானாகவே குணமாகும்.

ALSO READ: Uric Acid Control: உடலில் பல பிரச்சனை தரும் யூரிக் அமிலம்.. இதை எப்படி கட்டுப்படுத்தலாம்…?

சலாசியன் பற்றிய விரிவான விளக்கம்:

சலாசியன் என்பது கண் இமைகள் மீது சிவப்பு நிற கட்டி உருவாகும் ஒரு பிரச்சனையாகும். இது கண் இலை நீர்க்கட்டி அல்லது மீபோமியன் நீர்க்கட்டி என்றும் அழைக்கப்படுகிறது. கண்களில் எண்ணெய் சுரப்பி தடுக்கப்படும்போது அது மெதுவாக உருவாக தொடங்கும். கண் கட்டி உருவாக தொடங்கும்போது வலி ஏற்படும். அதன்பிறகு, வலி இல்லாமல் பெரியதாக வளரும். சலாசியன் பொதுவாக மேல் கண் இமையில் உருவாகும். சில நேரங்களில் மட்டும்தான் கீழ் இமைகளில் உருவாகும்.

இதன் அறிகுறிகள் என்ன..?

சலாசியன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, முதலில் கண் இமையில் ஒரு வீக்கம் ஏற்படும். இது ஆரம்பத்தில் சிறியதாக தொடங்கி, பெரிய வீக்கத்தை தரும். ஆரம்பத்தில் கட்டியாக இருப்பது, அத்ன்பிறகு, தொட்டு பார்த்தால் மென்மையாக இருக்கும்.

அறிகுறிகள்:

  • கண் எரிச்சல்
  • கண்களில் நீர் வடிதல்
  • மங்கலான பார்வை
  • முற்றிலும் வீங்கிய கண் இமை

இதை சரி செய்வது எப்படி..?

பொதுவாக சலாசியன் பிரச்சனை தானாகவே சரியாகிவிடும். அதாவது, 3 முதல் 4 நாட்களில் தானாகவே சரி ஆகிவிடும். அதற்கு மேலும், கண்களில் கட்டி நீடித்தால் நீங்கள் மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.

நீங்கள் மருத்துவர்களிடம் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால், மருத்துவர்கள் பரிந்துரைத்த கண் சொட்டுகள் மற்றும் கண் கிரீம்களை பயன்படுத்தலாம். இதுவும் உங்களுக்கு பலன் தரவில்லை என்றால், மருத்துவர் உங்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு ஊசி அல்லது வேறு ஏதேனும் சிகிச்சை தரலாம்.

ALSO READ: Health Tips: நீண்ட நேரம் நின்று வேலை செய்யும் நபரா நீங்கள்..? எச்சரிக்கை! ஆபத்து அதிகம்!

சலாசியன் உருவாக காரணம் என்ன..?

  • கண் இமைகளின் மேல் அல்லது கீழ் பகுதிகள் மீபோனியன் என்ற சிறிய சுரப்பி உள்ளது. இதில், அடைப்பு ஏற்படும்போது கண் இமைகளில் கட்டிகளை ஏற்படுத்தும்.
  • முகப்பரு, ரோசாசியா, செபோரியா, பிளேஃபாரிரிஸ் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
  • வைரஸ் கான்ஜுன்க்டிவிடிஸ் நோயால் பாதுக்கப்பட்டவர்களும், கண் இமைகளில் தொற்று ஏற்படும்போதும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
  • கண் இமைகளில் எப்போதாவது இந்த பிரச்சனை ஏற்பட்டால் பரவாயில்லை, அடிக்கடி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

கண்ணிமை மீது கட்டி தடுப்பு:

  • ஒரு நபர் பாக்டீரியா தொற்றால் கண்களை பாதிக்காமல் இருக்க, முகத்தைத் தொடும் முன் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
  • எந்த வகையான பாக்டீரியா தொற்றும் பாதிக்காமல் இருக்க, தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தை கழுவி தூங்கவும்.
  • எந்தவொரு பாக்டீரியா தொற்றும் பரவாமல் இருக்க, மற்றவர்கள் பயன்படுத்தும் டவல், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

எளிதான சிகிச்சை முறை: கண்களில் உள்ள கட்டிகள் கரைய, உங்கள் இடது கையை நன்றாக விரித்து வைத்து அதில் வலது கையில் ஆள்காட்டி விரலை கொண்டு நன்றாக சேய்த்து அதில் உருவாகும் சூட்டை அப்படியே கண்களில் வைப்பதன்மூலம், கண்களில் உள்ள கட்டி கரையும். இதை செய்து இத்தகைய பிரச்சனைகளை எளிதாகவும், சீக்கிரமாகவும் குணப்படுத்தலாம். இது சலாசியனை நீக்கி நல்ல பலனை தரும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

இந்தியாவின் மிக நீளமான ரயில் நிலையங்கள் எவை தெரியுமா?
புகைப்படங்களை சோதிக்க வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் - விரைவில் அறிமுகம்!
அவரைப் போல இருக்க வேண்டும் - நடிகை பார்வதியின் ஆசை
நயன்தாராவிற்கு சன் டிவியின் இந்த சீரியல் பிடிக்குமாம்