Sleep Paralysis: இரவில் உங்களை யாரோ நெஞ்சில் அழுத்துவது போல இருக்கிறதா? இதுதான் காரணம்..!
Health Tips: நள்ளிரவில் திடீரென உங்கள் மீது யாரோ அமர்ந்திருப்பது போல தோன்றும். அதற்கு காரணம் அமானுஷ்ய நிகழ்வுகள் எதுவும் கிடையாது, அறிவியல்தான் காரணம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? மருத்துவ ஆய்வின்படி, இதற்கு பெயர் தூக்க முடக்கம் (Sleep paralysis) என்று சொல்லுவார்கள். தூக்கத்தின் போது உயரமான இடத்தில் இருந்து விழுவது, ஆழமான நீரில் மூழ்குவது அல்லது நெருங்கியவர் இறந்து போவது போன்ற பல நேரங்களில் பயங்கரமான கனவுகள் வரும். அதுபோல்தான் இந்த தூக்க முடக்கமும்.. அதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
தூக்க முடக்கம்: நள்ளிரவில் திடீரென உங்கள் மீது யாரோ அமர்ந்திருப்பது போலவும், உங்களால் சத்தம் எதுவும் போட முடியாமல் கை, கால்களை அசைக்க முடியாமல் போகும். காலம் காலமாக இதற்கு காரணம் ஏதோ ஒரு அமானுஷ்ய நிகழ்வுகள் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால், அதற்கு காரணம் அமானுஷ்ய நிகழ்வுகள் எதுவும் கிடையாது, அறிவியல்தான் காரணம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? மருத்துவ ஆய்வின்படி, இதற்கு பெயர் தூக்க முடக்கம் (Sleep paralysis) என்று சொல்லுவார்கள். தூக்கத்தின் போது உயரமான இடத்தில் இருந்து விழுவது, ஆழமான நீரில் மூழ்குவது அல்லது நெருங்கியவர் இறந்து போவது போன்ற பல நேரங்களில் பயங்கரமான கனவுகள் வரும். அதுபோல்தான் இந்த தூக்க முடக்கமும்.. அதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Health Tips: போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு தூங்குவது நல்லதா? இந்த பிரச்சனைகள் வரலாம்!
தூக்க முடக்கம் என்றால் என்ன..?
தூக்க முடக்கம் என்பது ஒரு வகையான தூக்க கோளாறு பிரச்சனையாகும். நீங்கள் தூக்கத்தில் இருக்கும்போது உங்களது ஆவி வெளியே வந்தது போலவும், கை, கால்கள் அசைக்க முடியாததை போலவும் உணர்வீர்கள். இது தூக்க முடக்கம் என்று அழைக்கப்படுகிறது. எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், இதில் மனம் விழித்திருக்கும் உங்களது உடல் தூங்குகிறது. ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்வதற்கு முன்பாகவோ அல்லது எழுந்திரிப்பதற்குச் சிறிது நேரத்திலோ இந்தப் பிரச்சனை அடிக்கடி இளமைப் பருவத்தில் அதிகமாகக் காணப்படும்.
தூக்க முடக்கம் எதனால் ஏற்படும்..?
தூக்க முடக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அதில் ஒரு சில தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்கள் கூறப்படுகிறது.
தூக்கமின்மை: உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லாத போது, இந்த தூக்க முடக்கம் பிரச்சனை ஏற்படலாம்.
ஒழுங்கற்ற தூக்க முறை: நீங்கள் தூங்கும் முறையில் அவ்வபோது மாற்றம் செய்தால், இந்த தூக்க முடக்கம் பிரச்சனை வரலாம். நைட் ஷிப்ட் மற்றும் பகல் ஷிப்ட் என மாறி மாறி பார்ப்பவர்களுக்கு இது அடிக்கடி ஏற்படும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக தூக்கம்: அதிக தூக்கம் போன்றவையும் இந்த தூக்க முடக்கம் பிரச்சினை ஒரு காரணமாக இருக்கலாம்.
ALSO READ: Health Tips: உள்ளாடை இல்லாமல் இரவில் தூங்கி பாருங்க.. உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்!
தூக்க முடக்க பிரச்சனை வராமல் தடுப்பது எப்படி..?
- தினமும் 7-8 மணி நேரம் நன்றாக தூங்குங்கள். 12 மணிக்கு தூங்கி அதிகாலை சீக்கிரம் எழுவது போன்றவற்றை தவிர்த்துடுங்கள்.
- மன அழுத்தத்தை குறைக்க யோகா, தியானம் போன்றவை செய்து, நிம்மதியாக தூங்குங்கள்.
- தூங்குவதற்கு முன் காபி மற்றும் அதிகளவில் உணவுகளை எடுத்து கொள்வதை தவிர்க்கவும்.
- தூங்கும் இடத்தை அமைதியாகவும் வைத்திருங்கள். அறை இருட்டாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- மது, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டாம்
- தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
- தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் போனை பார்க்காதீர்கள்.