Sleeping Position: குப்புற படுத்து தூங்கினால் நல்லதா..? எப்படி தூங்குவது நன்மை தரும்?
Health Tips: ஒரு சிலர் நன்றாக இரவு தூங்கியபிறகும் காலையில் உடல் வலியால் எழுந்திருக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதற்கு காரணம் இரவில் தவறான நிலையில் தூங்கியதாக கூட இருக்கலாம். இதனால் நாள் முழுவதும் மட்டுமின்றி, தினந்தோறும் முதுகுவலியால் அவதிப்படுவார்கள். தூக்கத்தின்போது சிலருக்கு நேராக தூங்குவது பிடிக்கும். சிலர் உடலை வளைத்து தூங்குவார்கள், சிலர் உடலை அழுத்தி வயிற்றை அழுத்தி தூங்குவர்கள். அந்த வகையில், எப்படி தூங்கினால் என்னென்ன நன்மைகள், தீமைகள் உடலுக்கு ஏற்படும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க போதுமான அளவு தூக்கம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. போதுமான அளவு தூக்கம் இல்லாதது உங்களுக்கு சோர்வு, மன அழுத்தம் மற்றும் பல உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தும். ஒருவர் தினசரி ஒழுங்கான தூக்கத்தை பெறவில்லை என்றால், அவருக்கு இரத்த அழுத்தத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். இது மட்டுமின்றி, தூக்கமின்மை நோயெதிர்ப்பு மண்டலத்தின் பலவீனப்படுத்தும், மனநல பிரச்சனைகளையும் அதிகரிக்க செய்யும். இதனால்தான் தினமும் 6-8 மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒரு சிலர் நன்றாக இரவு தூங்கியபிறகும் காலையில் உடல் வலியால் எழுந்திருக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதற்கு காரணம் இரவில் தவறான நிலையில் தூங்கியதாக கூட இருக்கலாம். இதனால் நாள் முழுவதும் மட்டுமின்றி, தினந்தோறும் முதுகுவலியால் அவதிப்படுவார்கள். தூக்கத்தின்போது சிலருக்கு நேராக தூங்குவது பிடிக்கும். சிலர் உடலை வளைத்து தூங்குவார்கள், சிலர் உடலை அழுத்தி வயிற்றை அழுத்தி தூங்குவர்கள். அந்த வகையில், எப்படி தூங்கினால் என்னென்ன நன்மைகள், தீமைகள் உடலுக்கு ஏற்படும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Home Tips: எலிகள் வீட்டிற்குள் வராமல் இருக்கணுமா? இதை வைத்து விரட்டுங்கள்..!
நேராக தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்:
தெலுங்கானாவில் உள்ள StyleCraze வெளியிட்ட தகவலின்படி, இரவில் நேராக தூங்குவதால் உடலில் உள்ள முதுகுத் தண்டு அதிக நன்மைகளை பெறுகிறது. கழுத்து முதல் இடுப்பு வரை உள்ள எலும்புகள் தளர்வடையும். ஒருவர் முதுகு வலி, கழுத்து வலியால் அவதிப்படால், முதுகை தரையில் கிடத்தி தூங்குவது நன்மை தரும் என்று தெரிவித்துள்ளது.
அடிக்கடி நெஞ்செரிச்சல் பிரச்சனையை சந்திப்பவர்கள் முதுகை அழுத்தி தூங்குவதை தவிர்க்கலாம். இது இவர்களுக்கு மேலும் பிரச்சனையை அதிகரிக்க செய்யும். இந்த நிலையில் தூங்கும்போது அவர்களுக்கு தொண்டைக்குள் வயிற்றில் இருந்து வெளிப்படும் அமிலம் பிரச்சனையை தரும். இதன் காரணமாக தொண்டையில் எரியும் உணர்வு ஏற்படும்.
தூக்கத்தில் உங்களுக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்படும் என்றால், நீங்கள் நேராக தூங்குவதை தவிர்க்கலாம். இது உங்களுக்கு மேலும் மூச்சுத்திணறல் பிரச்சனையை உண்டாக்கும்.
குப்புறப்படுத்து தூங்குவது நல்லதா..?
பெரும்பாலானவர்கள் வயிற்றை அழுத்தி குப்புறப்படுத்து தூங்குவர்கள். ஒரு சிலருக்கு இது அசௌகரியத்தை கொடுத்தாலும், சிலருக்கு இது நன்மையை தரும். குறட்டை பிரச்சனை உள்ளவர்கள் வயிற்றை அழுத்தி தூங்கினால் கட்டுப்படுத்தலாம் என்றும், தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் இந்த நிலையில் தூங்குவதால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் வயிற்றின் கீழ் தலையணையை வைத்து தூங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
வளைந்து தூங்கலாமா..?
குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் தலையை கால்களை குறுக்கி தூங்குவதை பார்த்திருப்போம். இந்த வகை நிலையும் முதுகு வலிக்கு நல்ல தீர்வை தரும். இந்த முறையில் தூங்குவது கர்ப்பிணிப் பெண்களுக்கும் நன்மை பயக்கும். குறட்டை பிரச்சனை உள்ளவர்களும் இந்த நிலையில் பலன் பெறலாம். ஏற்கனவே, இந்த நிலையில் தூங்கி பழக்கப்பட்டவர்களாக இருந்தால் பரவாயில்லை. புதிதாக பழக விரும்பினால் உடலில் வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எந்தப் பக்கம் தூங்கினால் என்ன பலன் கிடைக்கும்?
வலது பக்கம்:
வலது பக்கம் முதுகை வைத்து தரையில் தூங்குவது நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
இடது பக்கம்:
வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் இடது பக்கம் சாய்ந்து தூங்குவது நல்லது. இவ்வாறு செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் சீராகும். மேலும், ஆக்சிஜன் சப்ளை மூளைக்கு நன்றாக சென்றடைகிறது.
வயிற்றை அழுத்தி தூங்குவது:
இடுப்பு, முதுகு மற்றும் தோள்களில் வலி இருந்தால், வயிற்றில் தூங்குவது நிவாரணம் அளிக்கிறது.
தரையில் தூங்கலாமா..?
தரையில் தூங்குவதால் ஒருபுறம் நன்மைகள் தந்தாலும், மறுபுறம் தீமைகளையும் தரும். குளிர் காலத்தில் தரையில் உறங்குவது சளியை உண்டாக்கும். நீண்ட நேரம் தரையில் தூங்கினால் முதுகு வலி வரலாம். தரையில் படுப்பதால் கிடைக்கும் நன்மைகளுடன், தரையில் தூங்குவது எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். தரையில் உறங்க உதவும் பாய், மெத்தை அல்லது படுக்கை எதுவாக இருந்தாலும், அதை அவ்வப்போது சுத்தம் செய்து கொண்டே இருங்கள்.
யார் தரையில் தூங்கக்கூடாது..?
- மூட்டு வலி, எலும்பு வலி, இடுப்பு மற்றும் முதுகுவலி, அலர்ஜி போன்ற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் தரையில் தூங்கக் கூடாது.
- வயதானவர்கள் தரையில் தூங்கக்கூடாது.
- எழுந்து உட்காருவதில் சிரமம் இருந்தால், தரையில் தூங்க வேண்டாம்.