5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Blood Pressure: உயர் இரத்த அழுத்த நோயாளிகள் என்ன சாப்பிடக்கூடாது? இது பிரச்சனையை தரும்!

High BP: தலைச்சுற்றல், மயக்கம் ஆகியவை இரத்த அழுத்த ஏற்ற இறக்கங்களின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, திடீரென ரத்த அழுத்தம் குறைந்தால், உடனே கவனமாக இருப்பது நல்லது. இந்த செய்தி குறிப்பில் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்ன உணவு சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.

Blood Pressure: உயர் இரத்த அழுத்த நோயாளிகள் என்ன சாப்பிடக்கூடாது? இது பிரச்சனையை தரும்!
உயர் இரத்த அழுத்தம் (Image: GETTY)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 19 Oct 2024 22:21 PM

உயர் இரத்த அழுத்தம் என்பது தமனிகளில் இரத்தம் அதிக அழுத்தத்தை செலுத்தும் ஒரு நிலையாகும். இது அதிகரிக்கும்போது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் போன்ற பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். அந்தவகையில், உயர் இரத்த அழுத்தத்தை இரத்த அழுத்தத்தை சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களின் உதவியுடன் கட்டுப்படுத்தலாம்.

இருப்பினும், திடீரென இரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக குறைந்தாலும், இதயத்தில் பல்வேறு விளைவுகள் ஏற்படலாம். இரத்த அழுத்தம் திடீரென குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ பிரச்சனை. தலைச்சுற்றல், மயக்கம் ஆகியவை இரத்த அழுத்த ஏற்ற இறக்கங்களின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, திடீரென ரத்த அழுத்தம் குறைந்தால், உடனே கவனமாக இருப்பது நல்லது. இந்த செய்தி குறிப்பில் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்ன உணவு சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Vitamin E Benefits: உடலுக்கு வைட்டமின் ஈ ஏன் முக்கியமானது? இவ்வளவு நன்மைகளை தருமா?

உயர் இரத்த அழுத்த நோயாளிகள் என்ன சாப்பிடலாம்..?

பழங்கள், காய்கறிகள்:

இயற்கையாகவே பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக அளவு பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்ததை சமநிலையை வைக்க உதவி செய்யும்.

பருப்பு வகைகள்:

பீன்ஸ் உள்ளிட்ட பருப்பு வகைகளில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதேபோல், முழு தானியங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதுவும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

மீன்:

மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்ன சாப்பிடக்கூடாது..?

கொழுப்பு நிறைந்த உணவுகள்:

ரெட் மீட், பனீர், வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயில் அதிகளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இது நம் உடலில் கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. இது தமனிகள் செயல்படுவதை கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

சர்க்கரை:

அதிக அளவு சர்க்கரையை உட்கொள்வது எடை அதிகரிக்க வழிவகுக்கும். இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும். இதன் காரணமாக, சர்க்கரை உள்ள பானங்கள், மிட்டாய்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

காபி மற்றும் டீ:

காஃபின் இரத்த அழுத்தத்தை சிறிது அதிகரிக்கும். அதிக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், காஃபின் கொண்ட உணவு மற்றும் பானங்களை தவிர்ப்பது நல்லது.

ஆல்கஹால்:

ஆல்கஹால் தற்காலிகமாக இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அதிக அளவு ஆல்கஹால் அருந்துவது இரத்த அழுத்தத்தை அதிக நேரம் வைத்திருக்கும் தன்மை கொண்டது.

உப்பு:

உப்பில் உள்ள சோடியம் உடலில் உள்ள தண்ணீரைத் தக்கவைத்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். கருவாடு போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்வீட் பட்டியல் ரெடியா? தினை பணியாரம், நெய்யப்பம் செய்து அசத்துங்க!

துரித உணவுகள்:

கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து நல்ல கொழுப்பை குறைக்கிறது. சுட்ட பொருட்கள், பொரித்த உணவுகள் போன்றவற்றில் டிரான்ஸ் கொழுப்பு அதிகளவில் இருக்கும். இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும்.

இரத்த அழுத்தத்தை சீராக வைக்க என்ன செய்யலாம்..?

எடை குறைப்பு:

அதிக எடையுடன் இருந்தால், இரத்த அழுத்தத்தைக் குறைக்க எடையை குறைப்பது சிறந்த தீர்வை தரும்.

தினமும் உடற்பயிற்சி:

தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி செய்யும்.

மன அழுத்தம்:

அதிகப்படியான மன அழுத்தம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே, மன அழுத்தத்தை குறைக்க யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

புகைபிடிப்பதை நிறுத்துங்கள்:

புகைபிடித்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்க புகைப்பிடிப்பதை நிறுத்துவது நல்லது. மேலும், புகைபிடித்தல் பல்வேறு வகைகளில் உங்கள் உடலுக்கு தீமைகளை தரும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News