5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா..? இந்த விஷயத்தை பாலோ பண்ணாலே போதும்!

Good Night Sleep: ஒரு நபர் ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நல்ல தூக்கம் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் ஒருநாள் கூட நன்றாக தூங்கவில்லை என்றால், அது உங்கள் முழு உடலையும் பாதிக்க செய்யும். எனவே, நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமெனில், இரவில் செய்யக்கூடாத மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

Health Tips: நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா..? இந்த விஷயத்தை பாலோ பண்ணாலே போதும்!
நல்ல தூக்கம் (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 17 Sep 2024 16:43 PM

நல்ல தூக்கம் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஒரு மனிதனுக்கு தூக்கம் இல்லையெனில் சோர்வு மற்றும் மன அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நமது நோயெதிர்ப்பு அமைப்பு, நினைவகம் மற்றும் மூளை செயல்திறன் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு நபர் ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் ஒருநாள் கூட நன்றாக தூங்கவில்லை என்றால், அது உங்கள் முழு உடலையும் பாதிக்க செய்யும். எனவே, நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமெனில், இரவில் செய்யக்கூடாத மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

நல்ல உறக்கம் பெற என்ன செய்ய வேண்டும்..?

உறங்கும் நேரத்தை தீர்மானிக்கவும்:

தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்குவதையும், எழுந்திருப்பதையும் பழக்கப்படுத்தி கொள்வது மிக முக்கியம். இது உங்கள் உடலை தினந்தோறும் இந்த முறைக்கு பழக்கப்படுத்தி கொள்வதன்மூலம், உங்களது உடல் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் என்பதை உங்களுக்கு சொல்லாமல் சொல்லிவிடும். வாரத்தின் எல்லா நாட்களிலும் ஒரே நேரத்தில் தூங்கவும், எழுந்திருக்கவும் முயற்சி செய்வதால், உடலின் இயற்கையான கடிகாரம் (சர்க்காடியன் ரிதம்) சரியாக செயல்படும். இது உங்களுக்கு இரவு நேரத்தில் மொபைல் பார்ப்பதை அனுமதிக்க செய்வது இல்லை.

மொபைல், டிவி பார்க்காதீர்கள்:

தூங்கும் முன் டிவி, மொபைல், லேப்டாப் போன்ற எலக்ட்ரிக்கல் சாதனைகளை பயன்படுத்துவதை தவிருங்கள். இந்த சாதனங்களில் இருந்து வெளிப்படும் ப்ளூ ரே நமது தூக்கத்தை கெடுத்து, மெலடோனின் (தூக்கத்தை தூண்டு ஹார்மோன்) உற்பத்தியை குறைக்கும். எனவேம் தூங்குவதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன் மின்னணு சாதனைகளை உங்கள் கண்களில் இருந்து விலக்கி வையுங்கள்.

தியானம்:

தியானம் செய்வது உங்கள் மனத்திற்கு அமைதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை நீக்குகின்றன. தூங்குவதற்கு முன் சில நிமிட தியானம் அல்லது ஆழ்ந்த மூச்சு பயிற்சிகள் மனதை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தை தரும்.

சூடான பால்:

தூங்கும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் குடிப்பது மிகவும் நல்லது. பாலில் உள்ள டிரிப்டோபோன் என்ற அமினோ அமிலம் உடலில் மெலடோனின் அளவை அதிகரித்து, நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

வசதியான சூழ்நிலை:

தூங்குவதற்கு முன் நீங்கள் தூங்கும் அறையில் வெப்பநிலை, ஒளி மற்றும் இரைச்சல் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். நல்ல தூக்கத்திற்கு அமைதியான சூழல் இருப்பது மிகவும் அவசியம், சரியான வெப்பநிலை மற்றும் குறைந்த இரைச்சல் ஆகியவை உங்களது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். முடிந்தால், தூங்குவதற்கு முன் லேசாக வாசனை திரவியத்தை பயன்படுத்தியும் உறங்க செல்லலாம். இது உங்கள் புத்துணர்ச்சியை தந்து, தூக்கத்தை மேம்படுத்தும்.

தூங்குவதற்கு முன் எடுத்து கொள்ளக்கூடாத உணவுகள்:

ஆல்கஹால்:

நன்றாக தூங்குவதற்கு சில பேர் ஆல்கஹாலை பொதுவாக எடுத்துக்கொள்வர். ஆனால், இது உண்மையில் உங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்க செய்யும். மது அருந்துவது உங்களுக்கு ஆரம்பத்தில் நல்ல தூக்கத்தை கொடுத்திருக்கலாம். ஆனால், இது உங்கள் தூக்க சுழற்சியை சீர்குலைக்க செய்யும். கூடுதலாக, நீங்கள் மது எடுத்துகொள்வது நாள் முழுவதும் சோர்வாகவும், சோம்பலாகவும் உங்கலை வைக்கும்.

மசாலா உணவு:

காரமான உணவு பொருட்கள் உங்களை தூங்க விடாமல் செய்யலாம். காரமான உணவுகளை இரவில் எடுத்துக்கொள்ளும்போது இது உங்கள் செரிமனத்தை பாதிப்படைய செய்யும். மேலும், வயிற்று எரிச்சல், வாய் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சம்னைகளையும் தரும். இதன் காரணமாக, நீங்கள் தூங்கும்போது அசௌகரியமான உணர செய்து, உங்கள் தூக்கத்தை கெடுக்கும்.

ALSO READ: Healthy Tips: வைட்டமின் ‘டி’ குறைபாட்டால் இத்தனை ஆபத்தா? அதிகரிக்கச் செய்ய வழிகள் என்ன?

காபி:

காபியில் அதிக அளவு காஃபின் உள்ளது. இது உங்கள் தூக்கத்தை சீர்குலைக்கும். இது உங்கள் மைய நரம்பு மண்டலத்தை தூண்டி, தூக்கத்தை கெடுக்க செய்யும். இதன் காரணமாக, தூங்குவதற்கு குறைந்தது 4-6 மணிநேரத்திற்கு முன் காபி அல்லது வேறு ஏதேனும் காஃபின் கலந்த பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

சாக்லேட்:

டார்க் சாக்லேட்டில் காஃபின் மற்றும் தியோப்ரோமைன் அதிகம் உள்ளது. இந்த இரண்டு பொருட்களும் தூக்கத்தின் தரத்தை கெடுக்கும். நீங்கள் தூங்குவதற்கு முன் சாக்லேட் சாப்பிடுவது உங்கள் தூக்கத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Latest News