5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Periods Health: மாதவிடாயின்போது அதிக இரத்தப்போக்கு! இரத்த சோகை அபாயத்தைக் குறைக்க என்ன சாப்பிடலாம்?

Menstruation: மாதவிடாய் காலத்தின்போது பல பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மாதவிடாயின்போது அதிக ரத்த இழப்பு ஏற்பட்டு உடல் பலவீனமடையும். இது மாதிரியான நேரத்தில் பெண்கள் எந்த மாதிரியான உணவுகளை எடுத்து கொள்வது, ஆரோக்கியத்திற்கு எந்த உணவுகள் நல்லது என்பதை தெரிந்து கொள்வோம்.

Periods Health: மாதவிடாயின்போது அதிக இரத்தப்போக்கு! இரத்த சோகை அபாயத்தைக் குறைக்க என்ன சாப்பிடலாம்?
மாதவிடாய் (Image: GETTY)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 12 Nov 2024 14:39 PM

ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு, ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் சுழற்சியை சந்திக்கின்றனர். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் நடக்கும் இயற்கையான செயல். ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு வயது மற்றும் இடைவெளியில் மாதவிடாய் ஏற்பட்டாலும், இதை மாதந்தோறும் 3 நாட்கள் கடந்து செல்கின்றன. அதாவது, ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதமும் 28 முதல் 45 நாட்கள் இடைவெளியில் மாதவிடாய் வருகிறது. சில பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் 3 நாட்களிலும் முடிவடையும். ஆனால், சில பெண்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்கு வரை நீளும்.

இன்னும் பல பெண்கள் மாதவிடாய் பற்றி பேசவோ, கடைக்கு பேடுகளை வாங்கவோ தயக்கம் கொள்கிறார்கள். இது பகல் – இரவு போல் பெண்களுக்கு நடக்கும் இயற்கையான நிகழ்வு ஆகும். இதனால் தயக்கம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாதவிடாய் காலத்தின்போது பல பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மாதவிடாயின்போது அதிக ரத்த இழப்பு ஏற்பட்டு உடல் பலவீனமடையும். இது மாதிரியான நேரத்தில் பெண்கள் எந்த மாதிரியான உணவுகளை எடுத்து கொள்வது, ஆரோக்கியத்திற்கு எந்த உணவுகள் நல்லது என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Kidney Care: சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பது இவ்வளவு ஆபத்தா? இனிமேல் இதை செய்யாதீர்கள்!

இரத்த சோகை வராமல் தடுக்க என்ன உணவுகளை சாப்பிடலாம்..?

பச்சை காய்கறிகள்:

மாதவிடாய் காலத்தில் பச்சை காய்கறிகளை தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. அதன்படி, கீரை, கேரட், பீட்ரூட் போன்றவற்றை உங்கள் உணவில் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். கீரை வகைகளை சாப்பிடுவது மிகவும் நன்மை தரும். இது உடல் சோர்வை எதிர்த்து போராடவும், இரத்தத்தில் நல்ல ஹூமோகுளோபின் அளவை பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது.

இஞ்சி:

மாதவிடாயின்போது ஏற்படும் உடல் வலியை குறைக்க இஞ்சி உதவுகிறது. இது, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதிலும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இஞ்சி மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று புண் போன்றவற்றை தடுக்கவும் உதவுகிறது. அதேநேரத்தில், மாதவிடாய் நேரத்தில் சளி பிடித்தாலும், இஞ்சி டீ குடிப்பதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

மஞ்சள்:

மஞ்சளில் பல மருத்துவ பண்புகள் உள்ளது. இது பண்டைய காலங்களிலிருந்து பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சையளிக்க மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. உடலில் எங்கேயாவது காயம் அல்லது வலி இருந்தால், மஞ்சள் தடவினால் வலி விரைவில் குறையும். மஞ்சளில் குர்குமின் என்ற சிறப்புப் பொருள் உள்ளது, இது வலி மற்றும் வீக்கத்தைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆரஞ்சு:

வருடத்தில் 3-4 மாதங்கள் மட்டுமே ஆரஞ்சு கிடைக்கும். குளிர்காலம் வந்துவிட்டால், ஆரஞ்சு என்பது தவிர்க்க முடியாத பழங்களாக இருக்கும். வைட்டமின் சி நிறைந்த இந்த பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் சி இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதன்மூலம், இரத்த சோகை அபாயத்தை குறைக்கும்.

தயிர்:

கால்சியம் நிறைந்த தயிரை மாதவிடாய் காலத்தில் உட்கொள்வது நன்மை பயக்கும். இது மாதவிடாய் காலத்தில் வயிற்றுக்கு குளுமையையும், உடலுக்கு ஆற்றலையும் தருகிறது.

சிக்கன்:

சிக்கனில் அதிகப்படியான இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. இது உங்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சோர்வை நீக்கி, தேவையான புரதம் மற்றும் இரும்புச்சத்துக்களை வழங்குகிறது.

ALSO READ: Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளதா..? உங்கள் பாதங்களை கொண்டே அறியலாம்..!

டார்க் சாக்லேட்:

டார்க் சாக்லேட் உடலுக்கு உடனடி சத்துக்களை வழங்கும் அதீத திறன் கொண்டது. அதாவது, டார்க் சாக்லேட்டில் இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது மாதவிடாய் காலத்தில் உங்களுக்கு தேவையான ஆற்றலை தரும்.

தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய்:

மாதவிடாய் காலத்தில் இவை வயிற்றுக்கு நல்லது. மேலும், வீக்கத்தை அகற்ற உதவும். இதிலுள்ள அதிகப்படியான நீர்ச்சத்து உடலை நீரேற்றமாக வைக்க உதவி செய்யும். இவற்றை மாதவிடாய் சுழற்சியின்போது எடுத்துக்கொள்வது பலன் தரும்.

வெதுவெதுப்பான பால்:

வெதுவெதுப்பான பால் குடிப்பது உங்களை தளர்வாக வைக்க உதவி செய்யும். அதேபோல், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News