Wheat Halwa: அரை மணி நேரத்தில் வீட்டில் எளிதாக செய்யும் கோதுமை அல்வா..! - Tamil News | | TV9 Tamil

Wheat Halwa: அரை மணி நேரத்தில் வீட்டில் எளிதாக செய்யும் கோதுமை அல்வா..!

அல்வா என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்த உணவுப்பொருளாக அல்வா உள்ளது. அல்வாக்கு பிரபலமான ஊர் திருநெல்வேலி.  உலகம் முழுவதும் பிரபலமான திருநெல்வேலி அல்வாக்கு அனைவரும் அடிமை என்றே சொல்லலாம். கோதுமை அல்வா செய்முறை குறித்து காணலாம்.

Wheat Halwa: அரை மணி நேரத்தில் வீட்டில் எளிதாக செய்யும் கோதுமை அல்வா..!

கோதுமை அல்வா

Updated On: 

01 Aug 2024 15:02 PM

இனிப்பு சுவை மிகுந்த அல்வா அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டிற்கு திருநெல்வேலி அல்வா, திருவாரூர் பருத்தி அல்வா, திருவையாறு அசோகா அல்வா, காசி அல்வா, மைதா அல்வா, கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா என்று பல ஊர்களில் பிரபலமான அல்வாக்கு மத்தியில் கோதுமை அல்வா என்பது பலருக்கும் பிடித்த உணவாகவே உள்ளது. இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இதுவரை நீங்கள் கோதுமை அல்வாவை சாப்பிட்டது இல்லையென்றால், உங்கள் வீட்டிலேயே அல்வாவை செய்யலாம். இதனை செய்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படாது என்பதால், மிகவும் குறைவான நேரத்தில் எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

Also Read: கருவுற்ற பெண்கள் பாகற்காய் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும் ?

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு – 1 கப்
  • சர்க்கரை – 1 கப்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • நெய் – 1/2 கப்
  • ஏலக்காய் – தேவையான அளவு
  • பாதாம் – 6
  • முந்திரி – 6

கோதுமை அல்வா செய்முறை

அல்வா செய்வதற்கு முதலில் அடிகனமான ஒரு பெரிய வாணலியை எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதனை மிதமான தீயில்ல் அடுப்பில் வைக்க வேண்டும்.

வாணலி சூடானும், அதில் 1/2 கப் நெய்யை ஊற்றிப்பின் அதில், நன்றாக சலித்த கோதுமையை அதில் சேர்த்து கட்டி பிடிக்காமல் கைவிடாது தொடர்ந்து 20 நிமிடத்திற்கு மேல், நன்றாக கிளறி விட வேண்டும்.

பின்னர் அந்த கலவையில், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகமாக கிளறி விட வேண்டும். அதில் கோதுமை மாவினை சேர்த்து கிளறி விடும் பொழுது, வாணலியில் ஒட்டாமல் தனியாக வரும் போது சர்க்கரை சேர்க்க வேண்டும்.

Also Read: Weight Gain Foods: ஒல்லியாவே இருக்கிற நீங்க சீக்கிரம் எடை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க..

சர்க்கரையை தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும். தொடர்ந்து இந்த பாகை வடிகட்டவும். தொடர்ந்து அதை 1 கம்பி பதம் வரை காத்திருந்த மாவை விட்டு கிளறவேண்டும்.

நாம் இறுதியாக சேர்த்த சர்க்கரை நன்கு உருகி அல்வா நன்கு திரண்டு வரும் பொழுது, அதில் மீண்டும் நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி தூவி கிளறவேண்டும். இறுதியில் முந்திரி மற்றும் பாதாமை தூவி அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான கோதுமை அல்வா ரெடி!

 

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!