சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?

International Men's Day: சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19 ஆம் தேதி உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.‌ ஆண்களுக்கு எதிரான வன்முறை, துஷ்பிரயோகம், தற்கொலை, பால் சமத்துவம், பெற்றோர்களின் அந்நியப்படுத்துதல் ஆகிய பிரச்சனைகளுக்கு உலக அளவில் விழிப்புணர்வு செய்வதற்கு கொண்டாடப்படும் தினம் ஆகும். இது கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?

கோப்புப் படம் (Photo Credit: Pinterest)

Updated On: 

18 Nov 2024 15:30 PM

உலகப் பெண்கள் தினத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் பெரும்பாலானோருக்கு ஆண்கள் தினம் ஒன்று இருப்பதும் ஆண்கள் தினம் எப்பொழுதும் என்பதும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் ஆண்டுதோறும் வரும் இந்த ஆண்கள் தினம் நம் வாழ்வில் நம் முன்மாதிரியாக பார்க்கும் ஆண்களை கொண்டாடுவதற்கும், நாளுக்கு நாள் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒளி வீசுவதற்கும் ஒரு வழியை வழங்குவதற்காக தான் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ஒரு ஆணாக இருப்பதன் மதிப்புகள், குணாதிசியங்கள் மற்றும் பொறுப்புகளை சிறுவர்களுக்கு கற்பித்து தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற ஊக்குவிப்பது தான் இந்த சர்வதேச ஆண்கள் தினத்தில் நோக்கமாகும். குடும்பம் மற்றும் சமூகத்தில் ஆண்களுக்கு இருக்கும் நேர்மறையான மதிப்பை உலக அளவில் கொண்டாடுவதற்கு உலகளாவிய நாள்தான் இது. இது நேர்மறையான முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்தவும் மற்ற ஆண்களின் நல்வாழ்வை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது.

இதுகுறித்து உலக ஆண்கள் தின அமைப்பாளர்கள் கூறுகையில் “ஆண்மை மற்றும் சமூகத்திற்கு ஆண்கள் செய்யும் நேர்மையான பங்களிப்புகளின் ஒருங்கிணைந்த கொண்டாட்டத்தை நாங்கள் ஊக்குவிக்குகிறோம்” என்று தெரிவிக்கிறார்கள்.

எப்பொழுதிலிருந்து கொண்டாடப்படுகிறது?

சர்வதேச ஆண்கள் தினம் டிரினிடாட் மற்றும் டொபாக்கோவில்‌ டாக்டர் ஜெரோம் டீலக்ஸ் சிங்கால் 1999 ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆனால் 1960 ஆம் ஆண்டிலேயே சர்வதேச ஆண்கள் தினம்‌ கொண்டாடுவதற்கு திட்டம் வரையறுக்கப்பட்டது. ஆனால் பிப்ரவரி 7 1992 ஆம் ஆண்டு தாமஸ் ஓஸ்டரால் சர்வதேச ஆண்கள் தினம் துவங்கப்பட்டது. இதை கொண்டாடுவதற்கு ஓராண்டு முன்பாகவே 8ஆம் தேதி பிப்ரவரி 1991 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. ஆனால் பிப்ரவரி 7‌ஐ சர்வதேச ஆண்கள் தினமாக கடைபிடித்த ஒரே நாடு மால்டா ஆகும்.‌ அதன் பிறகு மீண்டும் ஜெரோம் டீலக்ஸ் சிங்கால் 1999 ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆண்களின் ஆரோக்கியம், பாலின உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்த ஆகியவை சர்வதேச ஆண்கள் தினத்தின் முக்கிய அம்சமாகும்.

Also Read: National Epilepsy Day 2024: இன்று தேசிய வலிப்பு நோய் விழிப்புணர்வு தினம்! வலிப்பு நோய் என்றால் என்ன?

2024 கருப்பொருள் (Theme)

இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக ” நேர்மறை ஆண் முன்மாதிரி” (Positive Men Role Models) என்பதாகும்.

சர்வதேச ஆண்கள் தினம், வாழ்க்கையில் ஆண்களின் மதிப்புகள், பண்பு மற்றும் பொறுப்புகளை இளைஞர்களுக்கு கற்பிக்க ஊக்குவிக்கிறது. “எல்லாவற்றிலும் நாம் தேடும் மாற்றமாக நாம் மாற வேண்டும்” என்கிற மகாத்மா காந்தி. நாம் அனைவரும் ஆண்களும் பெண்களும் முன்மாதிரியாக இருந்தால் மட்டுமே அனைவரும் செழிக்க வாய்ப்பு அளிக்கும் ஒரு நியாயமான மற்றும் பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

எங்கே கொண்டாடப்படுகிறது?

சர்வதேச ஆண்கள் தினம் இப்போது சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஹைட்டி, ஜமைக்கா, ஹங்கேரி, மால்டா, கானா, மால்டோவா மற்றும் கனடா போன்ற நாடுகளில் கொண்டாடப்படுகிறது. தற்பொழுது கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச ஆண்கள் இனத்தின் வடிவம் 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது. பிரிட்டன் மற்றும் ஹோவில்‌ ஆண்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டு பின்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.‌ இதே போன்ற நிகழ்வுகள் இப்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

எப்படி கொண்டாடப்படுகிறது?

இந்த நாளில் எல்லா இடங்களிலும் ஆண்கள் மீது நல்லெண்ணம் கொண்ட மக்கள் தங்கள் வாழ்வில் உள்ள ஆண்களை பாராட்டவும் கொண்டாடவும் மற்றும் அனைவரின் நன்மைக்காக அவர்கள் சமூகத்திற்கு செய்யும் பங்களிப்பையும் பாராட்டவும் கொண்டாடவும் ஒரு வாய்ப்பாக கருதி கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் இந்த 2024 ஆம் ஆண்டு தங்கள் வாழ்க்கையில் இருக்கும் ஆண்களுக்கு நன்றி சொல்லவும் தங்கள் வாழ்க்கையில் உள்ள ஆண் முன்மாதிரிகளை அங்கீகரிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கடந்த காலங்களில் பொதுக் கருத்து அரங்குகள், மாநாடுகள், திருவிழாக்கள் மற்றும் நிதி சேகரிப்புகள், பள்ளிகளில் வகுப்பறை நடவடிக்கைகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தேவாலய அனுசரிப்புகள் மற்றும் அணிவகுப்புகள் நடைபெற்றது.

ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டியதா?

சர்வதேச பெண்கள் தினம் போல் ஆண்கள் தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தின் போது ஆண்கள் தினம் ஏன் கொண்டாடப்படுவதில்லை என்ற கேள்வி ட்ரெண்டிங்கில் இருக்கும். ஆனாலும் கூட சர்வதேச ஆண்கள் தினத்தில் பெரிதாக வாழ்த்துக்களை கூட ஆண்கள் பெறுவதில்லை. ஆண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சனைகளை பற்றி விவாதிக்க இந்த சர்வதேச ஆண்கள் தினம் ஒரு முக்கியமான வாய்ப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

Also Read: திருமண உறவில் அன்பை வலுப்படுத்தும் 5 பழக்க வழக்கங்கள்: நோட் பண்ணுங்க!

மேலும் ஆண்களின் தற்கொலை விகிதம் ஆண்டுகாண்டு அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்தியாவில் தற்கொலை இறப்பு விகிதத்தில் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் 34.6 சதவீதம் அதிகமாக உள்ளனர்.‌ கடந்த 2021 ஆம் ஆண்டு தற்கொலை செய்யப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 118,979‌ ஆகவும்‌ பெண்களின் எண்ணிக்கை 45,026 ஆகவும் இருந்தது. ஆண்களின் சொல்லப்படாத, வெளியே தெரியப்படாத பிரச்சனைகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக இந்த சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

பல அழுத்தத்திற்கு மத்தியில் வாழும் ஆண்களை ஆண்டு முழுதும் கொண்டாடப்படவில்லை என்றாலும் இந்த ஒரு நாளிலாவது அவர்களின் மகத்துவத்தை புரிந்து கொண்டு அவர்களை மனதார பாராட்ட வேண்டும்.

(தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமரும் வேலையா?
ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிட வேண்டும்?
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!