Viral Fever: காய்ச்சல் இருக்கும்போது குளிக்கலாமா..? வேண்டாமா..? இது வெப்பநிலையை அதிகரிக்குமா?
Health Tips: காய்ச்சல் வந்தால் என்ன சாப்பிடலாம்? எதைச் சாப்பிடக்கூடாது என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு வைரஸ் காய்ச்சல் இருந்தால் குளிக்கலாமா இல்லையா? என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். இந்தநிலையில், காய்ச்சல் வந்தால் குளிக்கலாமா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போது மாறிவரும் காலநிலை மாற்றம் காரணமாக பருவகால நோய்களின் அபாயம் அதிகரித்து வருகிறது. எனவே, முடிந்தவரை நமது ஆரோக்கியத்தை நாமே பராமரித்து கொள்வது மிக மிக முக்கியம். அதிலும், சில ஆரோக்கியமான விஷயங்களை உடனே மேற்கொள்வது நல்லது. இது நோய்களின் அபாயத்தை குறைக்கும். மழைக்காலம் தொடங்கியதில் இருந்து வைரஸ் காய்ச்சலின் அபாயம் அதிகரித்து, சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, இதுபோன்ற நோய்கள் மீண்டும் மீண்டும் வரும். எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து தொற்றுநோயைத் தடுப்பது மிகவும் முக்கியமானது.
தற்போது, இந்தியாவில் சில மாநிலங்களில் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகி வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் காய்ச்சலுடன் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நோயாளிகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவை, காய்ச்சல், இருமல், சளி, தலைவலி மற்றும் தசை வலி ஆகியவை இந்த காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாகும். இதில், சிலருக்கு வைரஸ் காய்ச்சலும், சிலருக்கு டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல் பாதிப்பும் உள்ளது. இந்த நேரத்தில் காய்ச்சல், இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், அலட்சியமாக இருக்க வேண்டாம், உங்களை நீங்களே பரிசோதித்து கொள்வது நல்லது.
ALSO READ: Monsoon Health Tips: மழைக்காலத்தில் இந்த 5 நோய்களால் அதிக ஆபத்து..! இவற்றை தடுப்பது எப்படி?
காய்ச்சல் வந்தால் என்ன சாப்பிடலாம்? எதைச் சாப்பிடக்கூடாது என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு வைரஸ் காய்ச்சல் இருந்தால் குளிக்கலாமா இல்லையா? என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். இந்தநிலையில், காய்ச்சல் வந்தால் குளிக்கலாமா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மழைக்காலத்தில் பெரும்பாலானோருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பே ஏற்படுகிறது. இதை பற்றி சில விஷயங்களும் உள்ளன.
வைரஸ் காய்ச்சலுக்கான சோதனை:
உங்கள் வைரஸ் காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்டறிய வைரல் மார்க்கர் சோதனை செய்யப்படுகிறது. உடலில் வைரஸ் காய்ச்சல் எந்த அளவில் உள்ளது என்பதை இது வெளிப்படுத்தும். வைரஸ் காய்ச்சல் அளவு அதிகமாக இருந்தால் அதற்கேற்ப மருந்துகளை மருத்துவர்கள் வழங்குவார்கள்.
வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள்:
காய்ச்சல், உடல்வலி, தலைவலி, சோர்வு, தூக்கமின்மை ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். வைரஸ் காய்ச்சல் ஒருவருக்கு ஏற்பட்டிருந்தால், அவருக்கு சோர்வு அதிகரிக்கும், உடல் எடையும் குறையும்.
வைரஸ் காய்ச்சல் வந்தால் குளிக்கலாமா, வேண்டாமா?
காய்ச்சல் வந்தால் குளிக்கக்கூடாது, இது காய்ச்சலை அதிகரிக்கும் என பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அது தவறு. வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டவர்கள் குளிப்பது ஆரோக்கியம் என்கின்றனர் சில மருத்துவர்கள். ஏனெனில் இது உடலில் உள்ள அழுக்குகளை நீக்குவது மட்டுமல்லாமல், மனத்திற்கு அமைதியையும் தரும். எனவே, வைரஸ் காய்ச்சலின்போது குளிப்பது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. குழந்தைகள் அல்லது வயதானவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் இருந்தால், குளிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். காய்ச்சல் காலத்தில் சிலர் குழிக்கும்போது குளிரின் காரணமாக உடல் நடுக்கம் போன்றவை ஏற்படலாம். எனவே மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு, குளிப்பது நல்லது. நம் உடல் வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடும் போது, நாமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ALSO READ: Diwali Sweet: தீபாவளிக்கு சூப்பர் ஸ்வீட் செய்ய ஆசையா..? முந்திரி கேக், லட்டு செய்து அசத்துங்க..!
வைரஸ் காய்ச்சலை தடுப்பது எப்படி?
- வெளியே சென்று வந்தவுடன் தவறாமல் கை மற்றும் கால்களை கழுவவும்.
- வீட்டை எப்போதும் தூய்மையாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்.
- சுத்தத்தின் காரணமாக வைரஸ் உங்களை விட்டு விலகி இருந்தால், காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
- மாறிவரும் காலநிலையில் மாஸ்க் அணிவது நல்லது.
- முடிந்தவரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ணுங்கள்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)