Types of Sugar : வெல்லமா? நாட்டு சர்க்கரையா? உடலுக்கு நல்லது தரும் சுகர் எது தெரியுமா? - Tamil News | | TV9 Tamil

Types of Sugar : வெல்லமா? நாட்டு சர்க்கரையா? உடலுக்கு நல்லது தரும் சுகர் எது தெரியுமா?

Updated On: 

13 May 2024 20:24 PM

Which sugar is best for our health: தேன், வெல்லம், நாட்டுச்சக்கரை, இதில் சிறந்தது எது?

1 / 3நாட்டுச்

நாட்டுச் சக்கரை: நாங்கள் நாட்டுச் சக்கரையைத்தான் எடுத்துக்கொள்கிறோம் எனவே எங்களுக்கு சுகர் பற்றி கவலே இல்லை என்பவர்களா நீங்கள். உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சியான தகவல். நாட்டுச்சக்கரைக்கும் ஜீனிக்கும் பெரிய வித்தியாசம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. இது வெறும் ஜீனி மற்றும் வெல்லப்பாகுவின் கலவைதான். என்ன ஜீனியைவிட நாட்டுச்சக்கரை உணவிற்கு சற்று கூடுதல் சுவையைத் தருகிறது அவ்வளவுதான். மேலும் ஆற்றலை உடனே பெற உதவுகிறது. இதனால் சர்க்கரையின் அளவு உடனடியாகக் கூடுகிறது. ஜீனியை ஒப்பிடுகையில் நாட்டுச்சக்கரையில் எந்த கூடுதல் சத்தும் இல்லை. ஆனால் நாட்டுச்சக்கரையில் காப்பர், ஜிங்க், இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது எதுவும் ஜீனியில் இல்லை. இவையே நம் உடலை உடனடியாக ஆற்றலை எடுத்துக்கொள்ள வைத்து சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. நாட்டுச்சக்கரை வெறும் வெல்லப்பாகு கொண்டு இனிப்புச் சுவையூட்டப்பட்ட வறுத்த நறுமணம் கொண்ட ஒரு பொருள் அவ்வளவே. இதை தினமும் எடுத்துவந்தால் உடல் எடை அதிகரிக்கும். நாட்டுச்சக்கரையின் ஒரு ஸ்பூனிலுள்ள கலோரியின் அளவு 15கலோரி ஆகும். இது ஒரு ஸ்பூன் ஜீனியிலுள்ள 16.3 கலோரிக்குச் சமம்.

2 / 3

வெல்லம் : இந்த மூன்று இனிப்புகளிலும் வெல்லம் சிறந்தது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இது நேரடியாக கரும்புப் பாகுவிலிருந்து அப்படியே தயாரிக்கப்படுகிறது. ஜீனியைப் போன்றோ நாட்டுச்சக்கரையைப் போன்ற எந்தவொரு கலவையும் இதில் கலக்கப்படுவதில்லை. வெல்லம் சளி, ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. மேலும் இது நம் உடலுக்கு ஒரு கவசம் போல செயல்படுகிறது. செரிமானத்தை அதிகரிக்கச் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எரிச்சலைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் உடனடி ஆற்றலைத் தருகிறது. மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்களுக்கு இது சிறந்த தேர்வாகும். வெல்லம், இனிப்பில் மிகச்சரியான தேர்வாகும். இனிப்பில் எதற்கு பதில் வேண்டுமானாலும் இதை தாராளமாய்ப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு ஸ்பூனில் 20 கலோரி உள்ளது. வேறெந்த இனிப்பும் இந்த அளவு கலோரிகளைத் தரவல்லதல்ல. இதில் பிரச்சனை என்னவென்றால் வெல்லத்தை தினமும் எடுத்துக்கொள்ளும் போது இதய நோய்கள், டைப் 2 டயாபெட்டிஸ், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

3 / 3

தேன் : சரிவிகித உணவில் தேன் மிகவும் முக்கியமான ஒன்று. தேன் வெறும் இயற்கையான இனிப்பூட்டி மட்டுமல்ல, இதில் நியூட்ரின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்களும் நிரம்பியிருக்கிறது. தேனீக்களால் சுத்தமாக இயற்கையாக உருவாக்கப்படும் இந்த தேன் பல உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது டயாபெட்டிஸை கட்டுக்குள் வைக்கவும், மெட்டபாலிக் சின்ட்ரோமிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகிறது. தேன் சிறிய அளவில் நார்ச்சத்து மற்றும் புரதத்தைக் கொண்டுள்ளது. இது எரிச்சலைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் சுகரை அதிகப்படுத்துகிறது. இதில் தேவையான ஊட்டச்சத்துகள் இருப்பதால் புண்களை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. இதில் ஒரு ஸ்பூனில் 21 கலோரிகள் இருக்கிறது. ஆரோக்கயமான உடலைப் பெற ஜீனிக்கு தேன் எவ்வளவோ பயன்படுத்துவதற்கு உகந்தது.

Follow Us On
இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version