5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cobra: அதிக விஷமுள்ள நாக பாம்பு.. தமிழ்நாட்டில் ஏன் நல்ல பாம்பு என்று அழைக்கிறோம்..?

Snake: உலகில் அதிக விஷம் கொண்ட பாம்பு வகைகளில் முதலிடத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள பிளாக் மாம்பா உள்ளது. இதற்குபிறகு, இரண்டாவது இடத்தில் கோப்ரா வகைகளே உள்ளன. இப்படி அதிக விஷம் உள்ள பாம்பு வகையான கோப்ரா, தமிழ்நாட்டில் நீண்டகாலமாக பாரம்பரியத்துடன் ஒன்றியுள்ளது.

Cobra: அதிக விஷமுள்ள நாக பாம்பு.. தமிழ்நாட்டில் ஏன் நல்ல பாம்பு என்று அழைக்கிறோம்..?
நல்ல பாம்பு (Image: GETTY)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 22 Nov 2024 18:37 PM

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். அவ்வளவு ஆபத்தானது பாம்பு. ஒருவர் எவ்வளவு தைரியசாலிகளாக இருந்தாலும் பாம்பு என்றால், ஒரு நிமிடம் ஜர்க் விடுவார்கள். அந்த அளவிற்கு பாம்புகள் மீது மக்களுக்கு பயம் இருக்கும். பாம்புகளில் பல வகைகள் இருந்தாலும், அதில் விஷமுள்ளவை, விஷமற்றவை என இரண்டு வகையாக பிரிக்கலாம். விஷமற்ற பாம்புகளை பற்றி நாம் பெரியதாக கவலைப்பட்டது கிடையாது. ஆனால், விஷமுள்ள பாம்புகள் இவ்வுலகில் அதிகம் இருந்தாலும் கோப்ரா என்று அழைக்கப்படும் பாம்பு வகையை நாம் தமிழ்நாட்டில் நல்ல பாம்பு என்று அழைக்கிறோம். அதீத விஷம் கொண்ட நாக பாம்பு வகையை ஏன் நல்ல பாம்பு என்று அழைக்கிறோம். அதற்கு காரணம் என்ன என என்றாவது யோசித்து உள்ளீர்களா..? இந்த கேள்விக்கான விடையை இங்கு தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Health Tips: போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு தூங்குவது நல்லதா? இந்த பிரச்சனைகள் வரலாம்!

உலகில் அதிக விஷம் கொண்ட பாம்பு வகைகளில் முதலிடத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள பிளாக் மாம்பா உள்ளது. இதற்குபிறகு, இரண்டாவது இடத்தில் கோப்ரா வகைகளே உள்ளன. இப்படி அதிக விஷம் உள்ள பாம்பு வகையான கோப்ரா, தமிழ்நாட்டில் நீண்டகாலமாக பாரம்பரியத்துடன் ஒன்றியுள்ளது. அதிக விஷம் கொண்ட இந்த பாம்பை ஏன் கெட்ட பாம்பு என்று பெயர் வைக்காமல், நல்ல பாம்பு என்று பெயர் வைத்தார்கள் என்றால், ஒரு மனிதன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, நல்ல பாம்பு பலமுறை நீ இங்கிருந்து போய்விடு என்று எச்சரிக்கைகளை காட்டும். இதையும் மீறி ஒரு மனிதன் அந்த பாம்பை தொந்தரவு செய்யும்போதுதான், தனது பொறுமையை மீறி கடிக்கும்.

முதல் எச்சரிக்கை:

ஒரு மனிதமும், நல்ல பாம்பும் நேருக்குநேர் சந்திக்கும்போது, அந்த பாம்பு இது நான் போகும் வழி என்று சொல்வதற்காக தன் தலையை தூக்கி காட்டும். இதையே நாம் பாம்பு படம் எடுத்து ஆடுகிறது என்று சொல்வோம். இப்படி நல்ல பாம்பு செய்யும்போது, நீ இங்கிருந்து போய்விடு என்று சொல்லாமல் சொல்லி காட்டும்.

2வது எச்சரிக்கை:

இதையும் மீறி தொடர்ந்து அந்த பாம்புவிடம் நீங்கள் தொந்தரவு செய்தால், தலையை தூக்கி வைத்துள்ள பாம்பு கொத்துவதற்கு வருவது போன்று முன்னும் பின்னும் வந்து செல்லும். இடம் மற்றும் வலது புறங்களில் நகர்ந்து நகர்ந்து அசைவை கொடுக்கும். இந்த எச்சரிக்கைகளுக்கு பிறகாவது நீங்கள் நகர்வது நல்லது.

3வது எச்சரிக்கை:

இன்னும் நீங்கள் நகராமல் அதே இடத்தில் நின்று கொண்டு, அந்த பாம்புக்கு தொந்தரவு கொடுப்பதாக அந்த பாம்பு நினைத்தால், 3வது எச்சரிக்கையாக வாயை மூடிக்கொண்டு உங்கள் கால்களில் வந்து கொத்துவதுபோல் முட்டும். இதை செய்வதன்மூலம், பயத்தில் நீங்கள் இங்கிருந்து செல்வீர்கள் என்று பாம்பு நினைக்கும். இப்போதாவது, நீங்கள் இந்த இடத்தில் இருந்து நகர்வது, உங்கள் உயிரை பாதுகாக்க செய்யும்.

4வது எச்சரிக்கை:

3 எச்சரிக்கைகளுக்கும் நீங்கள் மசியாத நபராக இருந்தால், 4வது மற்றும் கடைசி எச்சரிக்கையாக அந்த பாம்பு உங்களை கடிக்கும். ஆனால், இந்த முறை அந்த பாம்பு தனது விஷ பற்களால் கடிக்காமல், தான் உணவு சாப்பிடும் பற்களால் கடிக்கும். இதை ட்ரை பைட் என்று சொல்வார்கள். இதனால், கடி வாங்கும் நபருக்கு எந்த பாதிப்பும் வராது, சிறிது வலி மட்டுமே ஏற்படும்.

ALSO READ: Monsoon Bike Tips: மழைக்காலத்தில் உங்கள் பைக்கை பாதுகாப்பது எப்படி? இதை செய்வது மிக முக்கியம்!

கடைசி நிலை கடிதான்:

இதற்கெல்லாம் கவலைப்படாத ஆள் நீங்கள் என்றால், கடைசி நிலை கடி வாங்கிகொண்டு மருத்துவமனையில் படுக்க வேண்டியதுதான். இவ்வளவு எச்சரிக்கைகளை கொடுத்து, உங்களை அது காப்பாற்ற முயற்சி செய்யும். இந்த நல்ல குணங்கள் கொண்ட காரணத்திற்காகதான் நாக பாம்பிற்கு, நல்ல பாம்பு என்று பெயர் வைத்தனர் நம் முன்னோர்கள்.

பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய விஷயங்கள்:

  • பாம்பு கடித்தவுடன் திரைப்படங்களில் காட்டுவதுபோல், இறுக்கமாக கயிறுகளை கொண்டு கட்ட வேண்டாம். கீறி வாயை வைத்து உறிஞ்ச வேண்டாம். இது பெரிய ஆபத்தில் தள்ளும்.
  • பாம்பு கடித்தவுடன் முதலில் பதட்டம் கொள்ளாமல், முடிந்தவரை அமைதியாக எங்காவது உட்காருங்கள்.
  • அதற்குமுன், பாம்பு கடித்த இடத்தில் சோம்பு மற்றும் தண்ணீரை கொண்டு கழுவுங்கள்.
  • தொடர்ந்து, சுத்தமாக துணியை கொண்டு லேசாக மூடி வைக்கவும்
  • மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News