Home Tips: ஃப்ரிட்ஜில் இருந்து கெட்ட வாசனை வருகிறதா..? இதை செய்து போக்குங்க..!

Refrigerator: பல நேரங்களில் நாம் ஃப்ரிட்ஜை திறக்கும்போது திடீரென கெட்ட வாசனை வீச தொடங்கும். அதற்கு என்ன காரணம் என்று என்றாவது நினைத்தது உண்டா? உங்கள் ஃப்ரிட்ஜில் நாற்றம் அடித்தால், நீங்கள் முதலில் பயப்பட வேண்டும். இதை சரி செய்வது மிகவும் எளிதானது. ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய சில எளிய வழிமுறைகளை நாம் பின்பற்றுவதன் மூலம், இந்த கெட்ட வாசனையை உடனடியாக நீக்கலாம். இதனால், உங்களது ஃப்ரிட்ஜ் புதியதாகவும், சுத்தமாகவும் காட்சியளிக்கும். உங்கள் ஃப்ரிட்ஜில் உள்ள கெட்ட வாசனை உடனடியாக மறைய செய்ய இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

Home Tips: ஃப்ரிட்ஜில் இருந்து கெட்ட வாசனை வருகிறதா..? இதை செய்து போக்குங்க..!

கோப்பு புகைப்படம்

Updated On: 

14 Aug 2024 08:43 AM

ஃப்ரிட்ஜில் கெட்ட வாசனை: ஃப்ரிட்ஜ் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதை எப்படி பராமரித்துக்கொள்ள வேண்டும் என பலருக்கும் தெரிவதில்லை. பல நேரங்களில் நாம் ஃப்ரிட்ஜை திறக்கும்போது திடீரென கெட்ட வாசனை வீச தொடங்கும். அதற்கு என்ன காரணம் என்று என்றாவது நினைத்தது உண்டா? உங்கள் ஃப்ரிட்ஜில் நாற்றம் அடித்தால், நீங்கள் முதலில் பயப்பட வேண்டும். இதை சரி செய்வது மிகவும் எளிதானது. ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய சில எளிய வழிமுறைகளை நாம் பின்பற்றுவதன் மூலம், இந்த கெட்ட வாசனையை உடனடியாக நீக்கலாம். இதனால், உங்களது ஃப்ரிட்ஜ் புதியதாகவும், சுத்தமாகவும் காட்சியளிக்கும். உங்கள் ஃப்ரிட்ஜில் உள்ள கெட்ட வாசனை உடனடியாக மறைய செய்ய இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

ALSO READ: World Elephant Day 2024: உலக யானைகள் தினம் இன்று ஏன் கொண்டாடப்படுகிறது..? பிரதமர் மோடி அளித்த உறுதி!

வெண்ணிலா எசன்ஸ்:

ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிது வெண்ணிலா எசன்ஸை எடுத்துகொண்டு, அதை ஃப்ரிட்ஜில் வைக்கவும். வெண்ணிலா எசன்ஸின் புத்துணர்ச்சியூட்டும் வாசனை ஃப்ரிட்ஜில் இருக்கும் அனைத்து வகையான நாற்றங்களையும் நீக்கி, நல்ல நறுமணத்தை கொடுக்கும்.

தேநீர் பைகள்:

பயன்படுத்திய தேநீர் பைகளை தூக்கி எறியாமல், அதை ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இந்த பைகள் ஃப்ரிட்ஜில் உள்ள கெட்ட வாசனைகளை உறிஞ்சிவிடும். இதன் காரணமாக உங்கள் ஃப்ரிட்ஜ் புதியதுபோல் காட்சியளிக்கும்.

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை:

ஒரு சிறிய பாத்திரத்தில் பேக்கிங் சோடாவையும், சில எலுமிச்சை துண்டுகளையும் எடுத்து கொள்ளவும். பின்னர், இந்த தட்டை ஃப்ரிட்ஜில் வைக்கவும். இந்த எளிய முறை ஃப்ரிட்ஜில் இருக்கும் துர்நாற்றத்தை நீக்கி எப்போதும் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும். தொடர்ந்து, உங்கள் ஃப்ரிட்ஜை சுத்தமாகவும் மணமாகவும் வைத்திருக்கும். ஒவ்வொரு மாதத்திற்கு ஒருமுறையும் நீங்கள் உங்கள் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யுங்கள். மேலும், ஃப்ரிட்ஜில் உள்ள நீண்ட நாட்களாக உள்ள உணவு பொருட்களை அப்புறப்படுத்துங்கள். இதனால் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.

ALSO READ: Washing Machine Care Tips: வாஷிங் மெஷினை இப்படி பராமரித்து கொள்ளுங்கள்.. ரிப்பேர் ஆகாது..!

மேலும் சில..

  • பொருட்களை சரியாக மூடாமல் ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அதன் வாசனை ஃப்ரிட்ஜ் முழுவதும் பரவத் தொடங்குகிறது. இந்த வாசனை மூடிய ஃப்ரிட்ஜுக்குள் நீண்ட நேரம் இருப்பதால், அது துர்நாற்றமாக மாறி மற்ற பொருட்களின் சுவையையும் கெடுக்கும். எனவே, குளிர்சாதனப் பெட்டியில் எந்தப் பொருளையும் திறந்து வைக்கக் கூடாது.
  • உங்கள் ப்ரிட்ஜில் ஏதேனும் கெட்டுப்போன பொருட்கள் வைக்கப்பட்டிருந்தால்,இது உள்ளே முழுவதும் பரவி நாற்றம் வீச தொடங்கும். ஏனெனில் உணவு கெட்டுப் போனால் அதில் வளரும் பாக்டீரியாக்கள் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
  • ஃப்ரிட்ஜ், நீண்ட நேரம் சுத்தம் செய்யாமல் இருந்தால், ஃப்ரிட்ஜும் நாற்றமெடுக்கத் தொடங்குகிறது. எனவே, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் பொருட்களை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.

மைக்ரோஃபைபர் துணி:

உங்கள் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யும்போதேல்லாம் மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்துவது நல்லது. மைக்ரோஃபைபர் துணி என்பது நம் ஊரில் குடல் துண்டு என்று அழைப்போம். இதை வைத்து சுத்தம் செய்வதன்மூலம், தூசி மற்றும் அழுக்குகளை மிக எளிதாக உறிஞ்சிவிடும். இது உங்கள் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், அதன் மேற்பரப்பில் கீறல்கள் விழுவதையும் தடுக்கிறது. மைக்ரோஃபைபர் துணியால் சுத்தம் செய்வதன் மூலம், ஃப்ரிட்ஜின் பளபளப்பு அப்படியே இருக்கும்.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?