World Diabetes Day 2024: சர்க்கரை நோய் என்றால் என்ன..? இன்று ஏன் உலக சர்க்கரை நோய் தினம் கொண்டாடப்படுகிறது?
What is Diabetes: சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். ஒன்று டைப் 1 சர்க்கரை நோய். இது கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது ஏற்படுகிறது. இரண்டு டைப் 2 சர்க்கரை நோய். இது உடல் இன்சுலினுக்கு சரியாக வினைபுரியாதது. அப்படி இல்லையென்றால், இன்சுலின் கணையத்திலேயே குவிந்துவிடுவதாகும்.
சர்க்கரை நோய் என்பது உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வரும் பிரச்சனையாகும். இந்தியாவிலும் இந்த சர்க்கரை நோயின் தாக்கம் தினசரி அதிகரித்து வருகிறது. இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்களில் முக்கியமானது உணவு முறையும், வாழ்க்கை முறையுமே ஆகும். சர்க்கரை நோய் என்பது முதலில் ஒரு நோய் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மாறாக, இது பல நோய்களின் அபாயத்தை ஏற்படும். எனவே, சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.
இந்த பிரச்சனையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி உலக சர்க்கரை நோய் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், இதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Orange Juice: தினமும் 2 கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் போதும்.. சிறுநீரக கற்கள் கரைந்து ஓடும்..!
உலக சர்க்கரை நோய் வரலாறு:
சர்க்கரை நோயை தடுக்கவும், இந்த நோயை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தவும் நவம்பர் 14ம் தேதியான இன்றைய நாளை உலக சர்க்கரை நோய் தினமாக கொண்டாடுவதாக சர்வதேச சர்க்கரை நோய் அறக்கட்டளை அறிவித்தது. இது 1991ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது வரை நடைமுறையில் உள்ளது. நவம்பர் 14ம் தேதியில் மட்டும் ஏன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது என்றால், இந்த நாளில்தான் சர் ஃபிரடெரிக் பாண்டிங் மற்றும் சார்லஸ் பெஸ்ட் இணைந்து சர்க்கரை நோய்க்கான இன்சுலினை கண்டுபிடித்தனர். இந்த நாள் சர் ஃபிரடெரிக் பாண்டிங்கின் பிறந்தநாள் ஆகும். இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டு நவம்பர் 14ம் தேதி உலக சர்க்கரை நோய் தினமாக கொண்டாட ஐநா அறிவித்தது.
உலக சர்க்கரை நோய் தினத்தின் முக்கியத்துவம்:
நவம்பர் 14ம் தேதி உலக சர்க்கரை தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடுவதன் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த கொடிய நோய் குறித்த விழிப்புணர்வை எலிய மக்கள் வரை ஏற்படுத்துவதாகும். இதனால், சர்க்கரை நோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.
உலக சர்க்கரை தினத்தின் தீம் 2024:
ஒவ்வொரு ஆண்டு உலக சர்க்கரை நோய் தினத்திற்கு ஒவ்வொரு சிறப்பு தீம் வெளியிடப்பட்டும். அந்தவகையில், இந்த ஆண்டும் ஒரு தீம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தீம் என்னவென்றால், “தடைகளை உடைத்தல், இடைவெளிகளை குறைத்தல்” என்பதாகும்.
சர்க்கரை நோய் என்றால் என்ன..?
சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். ஒன்று டைப் 1 சர்க்கரை நோய். இது கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது ஏற்படுகிறது. இரண்டு டைப் 2 சர்க்கரை நோய். இது உடல் இன்சுலினுக்கு சரியாக வினைபுரியாதது. அப்படி இல்லையென்றால், இன்சுலின் கணையத்திலேயே குவிந்துவிடுவதாகும். இந்த இரண்டு வகையான சர்க்கரை நோய்களும், இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்க செய்கிறது. இதுவே, சர்க்கரை நோயை ஏற்படுகிறது.
ALSO READ: Health Tips: திடீரென எழுந்து நிற்கும்போது தலைச்சுற்றலா? இவைதான் முக்கிய காரணங்கள்..!
சர்க்கரை நோய் அறிகுறிகள் என்ன..?
- அடிக்கடி சிறுநீர் கழிப்பது, குறிப்பாக இரவு நேரத்தில் 5 முதல் 6 முறை சிறுநீர் கழிப்பது போன்றவை இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரித்திருப்பதற்கான அறிகுறியாகும்.
- எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்கவில்லை என்றாலும், தாகம் தொடர்ந்து ஏற்பட்டாலும், உடலில் போதிய அளவு இன்சுலின் உற்பத்தில் செய்யப்படாமலொ இருப்பதே காரணம். இது டைப் 1 சர்க்கரை நோய் அறிகுறியாகும்.
- இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும்போது, தோலில் வறட்சி உண்டாகும். அதிலும், குறிப்பாக பாதங்களில் வெடிப்பு, வறண்ட சருமம், கரும்புள்ளிகள் தோன்றுதல் போன்றவை சர்க்கரை நோயின் அறிகுறியாகும்.
- சர்க்கரை நோய் ஆண், பெண் என கிட்டத்தட்ட சமமாக இருந்தாலும், பெண்களுக்கு மட்டும் மீண்டும் மீண்டும் ஈஸ்ட் தொற்று, சிறுநீர் தொற்று, கருப்பை தொற்று போன்றவற்றை ஏற்படுத்தும்.
- ஒரு சிறிய காயம் கூட குணமடைய நீண்ட நாட்கள் எடுத்தாலோ, இதுவும் சர்க்கரை நோயின் அறிகுறிகளாகும்.
- சர்க்கரை நோய் உள்ள ஆண்களுக்கு தசைகள் பலவீனமடைய தொடங்கும். இதனால், உடல் எடை வெகுவாக குறையவும் வாய்ப்புள்ளது.