5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

World Food Day 2024: உலக உணவு தினம் இன்று ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் நோக்கம் என்ன..?

Avoid Waste The Food: உலக உணவு தினத்தை கொண்டாடுவதன் நோக்கம், பசியின் கொடுமையை மக்களுக்கு உணர்த்துவதாகும். ஒருபுறம், மக்கள் பசியுடன் தூங்குகிறார்கள், மறுபுறம் சிலர் உணவை வீணாக்குகிறார்கள். உலக உணவு தினத்தின் மூலம், உணவை வீணாக்கக் கூடாது என்பதை மக்களுக்கு உணர்த்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ஒவ்வொரு வேளையும் உணவை வீணாக்காமலும், உணவை சேமித்து மக்களுக்கு விநியோகிப்பது மிகவும் முக்கியமாகும்.

World Food Day 2024: உலக உணவு தினம் இன்று ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் நோக்கம் என்ன..?
உணவு (Image: Freepik)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 16 Oct 2024 09:00 AM

உலகம் மிகவும் நவீனமாகிவிட்டாலும், சிலர் இன்னும் ஒரு வேளைக்கு உணவுக்காக ஏங்குகிறார்கள். உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் பட்டினி போன்ற கடுமையான பிரச்சனைகளில் பிடியில் உள்ளன. உணவு நாம் வாழ்க்கையில் முக்கியமான அங்கம் ஆகும். இன்னும் நூற்றுக்கணக்கான மக்கள் சாப்பிடாமல் தூங்குகிறார்கள். ஒருவேளை பசியை இங்கு பலரால் தாங்க முடியவில்லை. சிலர் மூன்றுவேளையில் ஒரு வேளை கூட சாப்பிட முடியாமல் தவிக்கிறார்கள். இங்கு பசியுடன் யாரும் விருப்பப்பட்டு இருப்பதில்லை. கட்டாயத்தின் கொடுமையாலே காயத்தை அனுபவிக்கிறார்கள்.

அந்தவகையில் உணவு, பாதுகாப்பு மற்றும் பசி தொடர்பான பிரச்சனைகளின் முக்கியத்துவம் குறித்து உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் 16ம் தேதி உலகக் உணவு தினம் கொண்டாடப்படுகிறது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பசியின் பிடியில் இல்லாமல் இருந்தாலும், உலக மக்கள் தொகை அதிகரிப்பும் பசி ஒரு பெரிய சவாலாக இருக்கிறது.

ALSO READ: Women T20 World Cup: 8 ஆண்டுகளில் முதல் முறை.. அரையிறுதிக்கு முன்னேறாமல் போன இந்திய அணி!

ஊட்டச்சத்து குறைபாடு:

மக்கள் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில், உலக உணவு தினம் பசியால் யாரும் உயிரை இழக்க கூடாது என்பதற்காகவே இது உருவாக்கப்பட்டது. உலக உணவு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது..? அதன் வரலாறு என்ன..? 2024ம் ஆண்டுக்கான தீம் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

உலக உணவு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

உலக உணவு தினத்தை கொண்டாடுவதன் நோக்கம், பசியின் கொடுமையை மக்களுக்கு உணர்த்துவதாகும். ஒருபுறம், மக்கள் பசியுடன் தூங்குகிறார்கள், மறுபுறம் சிலர் உணவை வீணாக்குகிறார்கள். உலக உணவு தினத்தின் மூலம், உணவை வீணாக்கக் கூடாது என்பதை மக்களுக்கு உணர்த்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ஒவ்வொரு வேளையும் உணவை வீணாக்காமலும், உணவை சேமித்து மக்களுக்கு விநியோகிப்பது மிகவும் முக்கியமாகும். இத்தகைய தினத்தை கொண்டாடுவது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

உலக உணவு தினத்தின் வரலாறு என்ன..?

கடந்த 1945ம் ஆண்டு உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) உலக உணவு தினத்தை நிறுவியது. இதையடுத்து, நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த 2014ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பினால் இந்த தினம் அங்கரீக்கப்பட்டது. 2014ம் ஆண்டு இந்த தினம் அங்கரீக்கப்பட்ட நாளில் இருந்து, உணவு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விவசாயத்தின் பல அம்சங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. உணவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, பசியால் வாடுபவர்களுக்கு உதவ முன்வரவும் மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ALSO READ: Watch Video: தந்தையின் மரணம்.. மைதானத்திற்கு நடுவே கதறி அழுத பாகிஸ்தான் கேப்டன்!

2024 உலக உணவு தினத்தின் தீம்:

உலகளாவிய உணவு சவால்களை முன்னிலைப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஒரு தீம் வெளியிடும். அந்தவகையில், இந்தாண்டான 2024ம் ஆண்டு உணவு தினத்தின் கருப்பொருள் “சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான உணவுக்கான உரிமை” என வைக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த கருப்பொருளின் நோக்கமாகும். உணவு மனிதனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு உயிரினத்திற்கும் அவசியம். ஏனென்றால், இதுவே மனிதன் உட்பட அனைத்து உயிரினமும் வாழ்வதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. இதுவே, உடலுக்கு ஆற்றலை கொடுக்கிறது. உணவு கிடைக்காமல் போனால் உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் நோய்வாய்ப்படுகிறோம். எனவே, பசியால் தவிப்பவர்களுக்கு உணவு வாங்கி தருவது மட்டும் புண்ணியம் அல்ல, உணவை வீணடிக்காமல் இருப்பதும் புண்ணியம்தான்.

Latest News