World hypertension day 2024: உயர் இரத்த அழுத்த தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? - Tamil News | | TV9 Tamil

World hypertension day 2024: உயர் இரத்த அழுத்த தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

Updated On: 

17 May 2024 12:46 PM

To raise awareness and promote hypertension prevention : உயர் இரத்த அழுத்த தின கொண்டாட்டத்தின் நோக்கங்கள். இன்று கொண்டாடப்படும் இந்த இரத்த அழுத்த தினமானது, "Measure Your Blood Pressure Accurate Method, Control It, Live Long" இந்தக் கருத்தையே அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. அதாவது உங்கள் இரத்த அழுத்தத்தின் சரியான அளவை தெரிந்துகொண்டு, அதை கட்டுப்படுத்தி நீண்ட நாள் வாழ்தல் என்பது பொருளாகும்

World hypertension day 2024: உயர் இரத்த அழுத்த தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

மாதிரி படம்

Follow Us On

உயர் இரத்த அழுத்த தினம்: பெரும்பாலான மரணத்திற்கு முக்கிய காரணம் இந்த உயர் இரத்த அழுத்தம்தான், ஆனால் அதைப்பற்றிய போதிய விழுப்புணர்வு இல்லாததுதான் நிறைய மரணத்திற்குக் காரணம். எனவே இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உயர் இரத்த அழுத்த தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்று கொண்டாடப்படும் இந்த இரத்த அழுத்த தினமானது, “Measure Your Blood Pressure Accurate Method, Control It, Live Long” இந்தக் கருத்தையே அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. அதாவது உங்கள் இரத்த அழுத்தத்தின் சரியான அளவை தெரிந்துகொண்டு, அதை கட்டுப்படுத்தி நீண்ட நாள் வாழ்தல் என்பது பொருளாகும். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி மூன்றில் ஒரு பங்கு மரணம் இதய நோய்களால் ஏற்படுவதாகவும், அந்த இதய நோய் ஏற்பட முக்கிய காரணம் இந்த உயர் இரத்த அழுத்தம் எனவும் அறியலாம். இதுவரை சுமார் 22 கோடி இந்தியர்கள் இந்த உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உயர் இரத்த அழுத்த தினமானது மே 14 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, அதன்பிறகு 2006 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மே 17ஆம் தேதி இந்த தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.

பல பில்லியன் மக்கள் இந்த உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆண்டிற்கு சுமார் 7.5 மில்லியன் மக்களின் இறப்பிற்கு இந்த உயர் இரத்த அழுத்தமே காரணமாக இருக்கிறது. எனவே உயர் இரத்த அழுத்தம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

Also read: யாருக்கு எந்த ருத்ராட்சம் பலன் தரும்! தெரிந்து கொள்ளுங்கள்.

உயர் இரத்த அழுத்தம் :

இது ஒரு சைலன்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது வந்தது கூட தெரியாமல் பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இது வந்ததுமே சில அறிகுறிகள் தென்படும் அதை நாம்தான் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். இதனால் பக்கவாதம், இதய பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றை நாம் சந்திக்க நேரிடலாம். உயர் இரத்த அழுத்தம் என்பது நம் பிளட் பிரஸ்ஷரின் அளவானது 140/90 அல்லது அதற்குமேல் இருப்பது.

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்:

பெரும்பாலும் மது மற்றும் புகைப்பிடிப்பவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதாலும் அதிகம் பேர் இந்த உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த மது, புகை பழக்கங்களை விட்டுவிட்டு ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை கையாண்டால் இதிலிருந்து தப்பிக்கலாம். தேவையற்ற டென்சன்களை தவிர்ப்பது நல்லது. சத்தான காய்கறிகள் சீரான உணவுகள், தானியங்களை எடுத்துக்கொள்ளலாம். இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும்.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version