World Longest Train: தனிப்பாதை, எட்டு இன்ஜின்கள், 682 பெட்டிகள்… பிரமிக்க வைக்கும் உலகின் மிகப்பெரிய ரயில்!… - Tamil News | world largest train with 682 coaches 8 engines and separate route and about 7 kilometers | TV9 Tamil

World Longest Train: தனிப்பாதை, எட்டு இன்ஜின்கள், 682 பெட்டிகள்… பிரமிக்க வைக்கும் உலகின் மிகப்பெரிய ரயில்!…

Published: 

08 Oct 2024 12:03 PM

World Longest Train: சிறுவயதில் அனைவரும் ரயிலின் பெட்டிகளை எண்ண முயற்சித்திருப்போம். சிலரை ரயில்களில் குறைந்த பெட்டிகளும் சில ரயில்களில் சற்று கூடுதல் பெட்டிகளும் இருக்கும். அதிகபட்சமாக 15 இல் இருந்து 25க்குள் பெட்டியில் இருக்கும். அதனால் எளிதாக எண்ணி விட முடியும். உலகத்தின் மிகப்பெரிய ரயிலின் பெட்டியை நம்மால் எண்ண முடியுமா? படித்துவிட்டு முடிவெடுங்கள்...

1 / 5தனியார்

தனியார் ரயில் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ரயிலுக்கு 'The Mount Newman Railway' என பெயரிடப்பட்டுள்ளது. 2001 ஜூன் 21 அன்று இந்த ரயில் முதல் முதலில் இயக்கப்பட்டது. சரக்கு ரயிலான இது இன்ஜினில் இருந்து கடைசி பெட்டி வரை 7.3 கிலோ மீட்டர் வரை இருக்கும். 8 என்ஜின்கள் மற்றும் 682 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் நிலக்கரி, இரும்பு தாது பொருட்கள் ஏற்றி செல்ல பயன்படுகிறது.

2 / 5

இந்த ரயில் உலகிலேயே நீண்ட ரயில் மட்டுமல்லாமவல் மிகவும் அதிக எடை கொண்ட ரயில் என்ற பெருமையும் பெற்றுள்ளது. ஏண்டியிலிருந்து ஹெட் லேண்ட் துறைமுகம் வரை பயணிக்கும் இந்த ரயில் 10 மணி நேரத்தில் 82,000 டன் இரும்பு தாதுக்களுடன் 275 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கிறது. இந்த ரயிலில் மொத்த எடை 99,773 டன்கள் ஆகும்.

3 / 5

682 பெட்டியில் கொண்ட உலகின் மிக நீளமான ரயில் இதுவாகும். இந்த ரயிலின் நீளம் 24 ‌ ஈபிள் கோபுரங்களின் உயரம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ரயிலை இயக்க 8 இன்ஜின்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 / 5

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ரயில் தனியார் ரயில் பாதை பயணிக்கிறது. இரும்புத்தாது கொண்டு செல்வதற்காக இந்த ரயில் பாதை மற்றும் நீள ரயிலை அந்த நிறுவனம் உருவாக்கியது. இப்பொழுது தேவையைப் பொறுத்து ரயிலின் பெட்டிகளின் எண்ணிக்கை 270 குறைக்கப்பட்டுள்ளது. 8 இன்ஜின்கள் இயங்கி வந்த நிலையில் தற்பொழுது 4 மட்டுமே இயங்கி வருகிறது.

5 / 5

660 பெட்டிகளை கொண்ட சிஷென் - சல்டான்ஹா எனப்படும் தென் ஆப்பிரிக்கா ரயிலை பின்னுக்குத் தள்ளி உலகின் மிக நீளமான ரயில் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த ரயில் ஒரே ஒரு ஓட்டுனரால் இயக்கப்படுகிறது.

கிவி பழம் தினசரி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்ன ஆகும்?
டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட் இதோ!
ஹேப்பி பர்த்டே அக்‌ஷரா ஹாசன்...
Exit mobile version