5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

World Polio Day 2024: போலியோ என்றால் என்ன..? உலக நாடுகள் ஒழிக்க போராடுவது ஏன்..?

Polio Free Future: போலியோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 70 முதல் 95 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது. ஆரம்ப அறிகுறிகளாக காய்ச்சல், சோர்வு, தலைவலி, வாந்தி, கழுத்து, கை மற்றும் கால்களில் வலி போன்றவை ஏற்படும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பாதிக்கப்பட்ட 200 பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படலாம்.

World Polio Day 2024: போலியோ என்றால் என்ன..? உலக நாடுகள் ஒழிக்க போராடுவது ஏன்..?
போலியோ சொட்டு மருந்து (Image: GETTY)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 24 Oct 2024 12:09 PM

உலக போலியோ தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் போலியோ சொட்டு மருந்து போடுவதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி மேற்கு வங்காளத்தில் போலியோ கண்டறியப்பட்டது. போலியோ நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மத்திய 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்தை வழங்குகிறது.

ALSO READ: Wriddhiman Saha Birthday: ரோஹித் காயத்தால் அறிமுக வாய்ப்பு.. இந்திய அணியில் தனக்கென ஒரு இடம்.. விருத்திமான் சாஹாவின் பயணம்!

போலியோ என்றால் என்ன..?

போலியோ அல்லது போலியோமைலிடிஸ் என்பது ஒரு வைரஸ் நோயாகும். இந்த வைரஸ் ஏற்படும் நபருக்கு முதுகெலும்பு அல்லது மூளை தண்டுவடத்தில் உள்ள நரம்புகளை பாதிக்க செய்யும். இந்த போலியோ தொற்று காரணமாக நடக்க முடியாத சூழல் ஏற்படும். மேலும், முட்டக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை கொடுத்து, மரணத்தையும் ஏற்படுத்தும்.

போலியோ வைரஸ் உடலில் தசை இயக்கத்தை கட்டுப்படுத்தும் முதுகுத் தண்டு மற்றும் மூளை தண்டு வடத்தில் உள்ள நரம்பு செல்களை குறிவைத்து தாக்கும். போலியோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அறிகுறிகள் இல்லாவிட்டாலும், மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. போலியோ வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் தும்மல் அல்லது இருமும்போதோ, மலம் கழிக்கும்போதோ, அவற்றில் இருந்து வெளியாகும் நீர்த்துளிகள் மூலம் வைரஸ் மற்றவர்களுக்கு பரவும்.

போலியோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 70 முதல் 95 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது. ஆரம்ப அறிகுறிகளாக காய்ச்சல், சோர்வு, தலைவலி, வாந்தி, கழுத்து, கை மற்றும் கால்களில் வலி போன்றவை ஏற்படும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பாதிக்கப்பட்ட 200 பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படலாம். போலியோ பொதுவாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது. போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டு முடக்கவாதம் ஏற்பட்ட நபருக்கு சுவாசிப்பதில் சிரமன் இருந்தால், 5-10% இறப்பு அபாயம் உள்ளது.

உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, போலியோ தொற்றானது கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும், சில நாடுகள் இன்னும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகின் பெரும்பாலான நாடுகளில் போலியோ கிட்டத்தட்ட அழிக்கப்பட்டாலும், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் போலியோ வகை 1 பாதிப்புகள் கடந்த 2022ம் ஆண்டு வரை கண்டறியப்பட்டது.

போலியோ தினம் இன்று ஏன் கொண்டாடப்படுகிறது..?

உலக அளவில் போலியோ வைரஸால் ஏற்படும் ஆபாயத்தை குறைக்கவும், அதனை தடுப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 ஆம் தேதி உலக போலியோ தினம் கொண்டாடப்படுகிறது. போலியோ தடுப்பூசியை உருவாக்கிய முதல் குழுவை வழிநடத்திய மருத்துவ ஆரோக்கியாளர் ஜோனாஸ் சால்க்கின் பிறந்தநாளான இன்று உலக போலியோ தினம் கொண்டாடப்படுகிறது.

மருத்துவ ஆரோக்கியாளர் ஜோனாஸ் சால்க்கின் கடந்த 1955ம் ஆண்டு போலியோ வைரஸூக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கினார். அதன்பிறகு, கடந்த 1962ம் ஆண்டு ஆல்பர்ட் சபின் வாய்வழியாக செலுத்தப்படும் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தார்.

ALSO READ: Health Tips: முருங்கைக்காய் ஆண்களுக்கு மட்டுமல்ல! பெண்களுக்கும் இவ்வளவு நன்மைகளை தரும்..!

2024 உலக போலியோ தினத்தின் தீம் என்ன..?

உலக போலியோ தினத்தின் தீம் கடந்த பல ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் இதே தீம்-ஐ பின்பற்றுகிறது. அதன்படி, “தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான எதிர்காலம்” என்பதை பின்பற்றுகிறோம். இந்த தீம் குழந்தைகளிடையே ஏற்படும் போலியோவை ஒழிப்பதும், தாய்மார்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை வழங்குவதாகும்.

Latest News