5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Walking : 10000 ஸ்டெப்ஸ் நடந்தால்தான் உடலுக்கு நல்லதா? வாக்கிங் குறித்த முக்கிய விவரங்கள்!

ஒருவர் நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டுமென்றால், ஒரு நாளைக்கு 10000 அடிகள் நடக்க வேண்டும் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட் வாட்ச்களில் போட்டிருக்கும். இந்த விஷயத்தில் டெக்னாலஜியை நம்பாதீங்க. ஏனென்றால், தினமும் 10 ஆயிரம் அடிகள் நடந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று எந்த ஆய்வும் கூறவில்லை. இதற்கு பின்னால் உள்ள உண்மையை தெரிந்துக் கொள்வோம்.

Walking : 10000 ஸ்டெப்ஸ் நடந்தால்தான் உடலுக்கு நல்லதா? வாக்கிங் குறித்த முக்கிய விவரங்கள்!
நடைப்யிற்சி
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 15 Jul 2024 17:07 PM

இன்றைய நவீன காலத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களால், எக்கச்சக்கமான உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருமே பாதிக்கக்கூடிய நிலையில் இருக்கிறோம். இதனால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும், தினமும் ஆரோக்கியமான உணவுகளை உண்பதோடு, முறையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பலரும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த சமயத்தில், கிளம்பிய ஒரு புரளி தான் ‘ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென்றால் தினமும் 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்’.

Also Read: தண்ணீரில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்

10000 அடிகள் என்ற இலக்கிற்கு பின்னால் உள்ள கதை

இன்று உட்கார்ந்தே தனது வாழ்நாளை கழித்துக்கொண்டிருக்கும் நபர்கள் மிகவும் எளிமையான உடற்பயிற்சியாக நடைபயிற்சியை தேர்வு செய்து, அதை பின்பற்றி வருகின்றனர். இதற்காக அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் தான் ஸ்மார்ட்போனும், ஸ்மார்ட் வாட்ச்சும். அதில் ஒருவர் தினமும் 10 ஆயிரம் அடிகள் நடந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதை நம்பி பலரும் நடைபயிற்சியை செய்து வருகிறார்கள். உண்மையில், ஒருநாளைக்கு 10 ஆயிரம் அடிகள் நடந்தால் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று எந்த ஆய்வும் கூறவில்லை. 

உண்மையில், 10 ஆயிரம் அடிகள் என்ற இலக்கிற்கு, 1964 ஆம் ஆண்டு பீடோமீட்டர் விற்பனைக்காக நிறுவனம் ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட விளம்பரம் தான் முக்கிய காரணம். ஒருவர் நடக்கும் தூரத்தை கணக்கிடுவதற்காக அந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விளம்பரத்தின் போது அந்த கருவில் 10 ஆயிரம் அடிகள் என்று இடம்பெற்றிருக்கும். இது தான் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Also Read: தண்ணீரில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்

10 ஆயிரம் அடிகள் குறித்து நிபுணர்களின் கருத்து என்ன?

உண்மையில் நமது ஆரோக்கியத்திற்கு நடைப்பயிற்சி அவசியமான ஒன்றாகும். ஆனால், அப்படி நடப்பதற்கு என்று எந்த வரம்பும் கிடையாது. உடல் தேவைகள் மற்றும் உடற்பயிற்சி நிலைகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். ஒரு நபர் செய்யும் வேலை மற்றொருவரால் நிச்சயம் செய்யும் முடியாது. இதற்கு உடல் வலிமையும் ஒரு முக்கிய காரணம். 

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் வெறும் நடைபயிற்சியால் மட்டும் தீர்மானிக்க முடியாது. நல்ல தூக்கம், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், உடல் செயல்பாடு, மன அழுத்தம் போன்ற பல கூறுகளும் அடங்கியுள்ளது என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். இருப்பினும், உடல் உறுப்புகளின் இயற்கையான செயல்பாடுகளுக்கு நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் அவ்வப்போது சிறிது நேரம் நடப்பது நல்லது.

Latest News