3 நாட்கள்.. ’தேவரா’ படத்தின் வசூல் இத்தனை கோடிகளா? - Tamil News | 3 days Box office Collection Of Devara Part 1 movie In All Over India | TV9 Tamil

3 நாட்கள்.. ’தேவரா’ படத்தின் வசூல் இத்தனை கோடிகளா?

Updated On: 

01 Oct 2024 15:39 PM

Devara Day 3 Collection : டோலிவுட் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் தேவரா. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் எடுக்கப்பட்ட பான் இந்தியத் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான சைஃப் அலிகான், கலையரசன் மற்றும் ஜான்வி கபூர் போன்றவர்கள் நடித்துள்ளனர்

1 / 6தெலுங்கு

தெலுங்கு இயக்குநரான கொரட்டலா சிவாவின் இயக்கத்தில் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார்.

2 / 6

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாகத் தமிழ் சினிமாவின் மறைந்த முன்னணி நடிகையான ஸ்ரீ தேவியின் மகளான "ஜான்வி கபூர்" இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்.

3 / 6

இந்த தேவரா பாகம் 1ல் முக்கிய கதாபாத்திரைகளில் சைஃப் அலிகான், ஸ்ருதி மராத்தே, பிரகாஷ் ராஜ், ஸ்ரீ காந்த், ஷைன் டாம் சாக்கோ, நரேன், கலையரசன் மற்றும் முரளி ஷர்மா போன்றவர்களும் நடித்துள்ளனர்.

4 / 6

தேவரா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தமிழ் திரையுலகில் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது. இதைத்தொடர்ந்து இத்திரைப்படத்தில் அனிரூத் இசையமைத்துள்ளார் இவரின் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

5 / 6

தேவரா பாகம் 1 திரைப்படமானது கடந்த செப்டம்பர் 27ல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியது. இது வெளியான முதல் நாளிலேயே பல கோடிகளை வசூல் செய்த நிலையில் தற்போது மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது

6 / 6

இந்த திரைப்படமானது வெளியான முதல் நாளில் ரூ. 154 கோடியும், இரண்டாவது நாளில் ரூ. 61.24 கோடியையும் மற்றும் மூன்றாவது நாளில் சுமார் ரூ.63.51 கோடியையும் வசூல் செய்து மொத்தம் ரூ.279 கோடிகளை வசூல் செய்துள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவானதாகக் கூறும் இந்த தேவரா கல்கி திரைப்படத்தை ஒப்பிடும் போது குறைந்த வசூலையே பெற்றுள்ளது. .

Follow Us On
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version