Cabbage Benefits: முட்டைக்கோஸின் ஒவ்வொரு இலையிலும் ஆரோக்கிய நன்மைகள்.. புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும்! - Tamil News | 6 Impressive Health Benefits of Cabbage; health tips in tamil | TV9 Tamil

Cabbage Benefits: முட்டைக்கோஸின் ஒவ்வொரு இலையிலும் ஆரோக்கிய நன்மைகள்.. புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும்!

Published: 

17 Sep 2024 19:46 PM

Health Tips: முட்டைக்கோஸில் வைட்டமின் கே, அயோடின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான அந்தோசயனின் போன்றவை நிறைந்துள்ளன. முட்டைக்கோஸ் உடலில் வீக்கத்தைக் குறைக்கும். இதில் உள்ள சல்ஃபோராபேன் மற்றும் கேம்ப்ஃபெரால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன, இது நாள்பட்ட அழற்சி மற்றும் அதன் அறிகுறிகளைக் குறைக்க உதவி செய்கிறது.

1 / 6முட்டைக்கோஸில்

முட்டைக்கோஸில் உள்ள சல்ஃபர் கலந்த கலவையான சல்போராபேன் புற்றுநோயை எதிர்த்து போராடும் சக்தியை அளிக்கிறது. இந்த கலவை புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுப்பதிலும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

2 / 6

முட்டைக்கோஸ் உடலில் வீக்கத்தைக் குறைக்கும். இதில் உள்ள சல்ஃபோராபேன் மற்றும் கேம்ப்ஃபெரால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன, இது நாள்பட்ட அழற்சி மற்றும் அதன் அறிகுறிகளைக் குறைக்க உதவி செய்கிறது.

3 / 6

முட்டைக்கோஸில் வைட்டமின் கே, அயோடின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான அந்தோசயனின் போன்றவை நிறைந்துள்ளன. இந்த கூறுகள் மூளைக்கு நன்மை பயக்கிறது. மேலும், முட்டைக்கோஸில் உள்ள அல்சைமர் நோயாளிகளின் மூளையில் காணப்படும் கெட்ட புரதங்களின் அளவைக் குறைக்க உதவுகிறது.

4 / 6

முட்டைக்கோஸில் உள்ள நன்மைகளில் ஒன்று இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இவற்றில் உள்ள பொட்டாசியம் மற்றும் பைட்டோகெமிக்கல் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைத்திருக்க வேலை செய்கிறது.

5 / 6

முட்டைகோஸில் உள்ள அந்தோசயனின் என்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி, புற்றுநோயில் இருந்து மீட்டெடுக்க உதவி செய்கிறது. தொடர்ந்து, செரிமானம், மலச்சிக்கல், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, உடல் பருமன், அல்சர், நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் உதவி செய்கிறது.

6 / 6

முட்டைக்கோஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் ஆன்டிபாடிகளின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த இது செயல்படுகிறது. இது நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

Follow Us On
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version