Hardik Pandya : ஹர்திக் முதல் ஷமி வரை.. விவாகரத்து பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியல்..! - Tamil News | 6 indian cricketers who got divorced like hardik pandya | TV9 Tamil

Hardik Pandya : ஹர்திக் முதல் ஷமி வரை.. விவாகரத்து பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியல்..!

Published: 

19 Jul 2024 17:28 PM

Hardik Natasa Divorce: தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான், முகமது ஷமி ஆகியோரின் பட்டியலில் தற்போது இணைந்திருக்கும் பெயர் ஹர்திக் பாண்டியா. ஹர்திக்கிற்கும் நடாஷாவிற்கும் இடையிலான 4 வருட திருமண உறவு முடிவுக்கு வந்தது. நேற்று ஹர்திக்கும், நடாஷாவும் பிரிவதாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தனர்.

1 / 8இந்தியாவின்

இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நான்கு வருட உறவுக்குப் பிறகு மனைவி நடாஷா ஸ்டான்கோவிச்சிலிருந்து பிரிந்ததாக நேற்று அறிவித்தார்.

2 / 8

ஹர்திக் பாண்டியாவுக்கு முன்பே, விவாகரத்து என்ற காயத்தை அனுபவித்த சில கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.

3 / 8

கடந்த 2023ம் ஆண்டு இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் மற்றும் அவரது மனைவி ஆயிஷா விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்கின்றனர்.

4 / 8

இந்திய அணியின் கேப்டனாக இருந்த முகமது அசாருதீன் ஒருமுறை அல்ல இரண்டு முறை விவாகரத்து செய்துள்ளார். 1996 ஆம் ஆண்டு தனது முதல் மனைவி நவ்ரீனை விவாகரத்து செய்துவிட்டு பாலிவுட் நடிகை சங்கீதா பிஜ்லானியை மணந்தார் அசாருதீன். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் சங்கீதா பிஜ்லானியை விவாகரத்து செய்தார்.

5 / 8

முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் தனது முதல் மனைவி சந்தியாவை நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு 2013ல் விவாகரத்து செய்தார். அதன் பின்னர் மனோஜ் பிரபாகர் நடிகை ஃபர்ஹீனை மணந்தார்.

6 / 8

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளி, தனது குழந்தை பருவ தோழியான நோயெலா லூயிஸை முன்னதாக திருமணம் செய்து கொண்டு, 2005ம் ஆண்டு பிரிந்தார்.

7 / 8

சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட தினேஷ் கார்த்திக், தனது 21 வயதில் தனது பால்ய தோழியான நிகிதா பஞ்சாராவை 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 5 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

8 / 8

கடந்த 2014ம் ஆண்டு இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, ஹசின் ஜஹானை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 வருடங்கள் ஆன நிலையில், 2018 ஆம் ஆண்டு முதல் இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?