Movies List: விஜய் ஆண்டனி டூ யோகி பாபு… இந்த வாரம் திரையரங்கில் வரிசைக் கட்டும் முன்னணி நடிகர்களின் படங்கள்! - Tamil News | 7-tamil-movies-theatre-released-on-august-2-in-kollywood-cinema | TV9 Tamil

Movies List: விஜய் ஆண்டனி டூ யோகி பாபு… இந்த வாரம் திரையரங்கில் வரிசைக் கட்டும் முன்னணி நடிகர்களின் படங்கள்!

Published: 

02 Aug 2024 10:55 AM

Theater Release Movies: கோலிவுட்டில் மழை பிடிக்காத மனிதன், வாஸ்கோடகாமா, போட், கடமான் பாறை, ஜமா, பேச்சி, நண்பன் ஒருவன் வந்த பிறகே என ஏழு படங்கள் இன்று ஆகஸ்ட் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

1 / 7நடிகர்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் விஜய் மில்டர் இயக்கியுள்ளார்.

2 / 7

நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘போட்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் சிம்புதேவன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில்  எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

3 / 7

நகுல் நடிப்பில் உருவாகியுள்ள ’வாஸ்கோடகாமா’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்ஜிகே இயக்கி உள்ளார். இதில் நகுல் உடன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்.

4 / 7

பாரி இளவழகன் இயக்கி நடித்திருக்கும் ’ஜமா’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பாரி இளவழகனுடன் அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

5 / 7

பாலா சரவணன் நடித்துள்ள 'பேச்சி’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ராமசந்திரன் இயக்கியுள்ளார். இப்படம் பிரபல இயக்குனர் இமயம் பாலு மகேந்திராவின் குறும்படத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாகும்.

6 / 7

ஆனந்த் இயக்கி நடித்துள்ள 'நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கேபிஒய் பாலா, ஆர்.ஜே.விஜய், குமரவேல், பவானி ஸ்ரீ, இர்பான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

7 / 7

நடிகர் மன்சூர் அலிகான் இயக்கி, தயாரித்துள்ள 'கடமான் பாறை’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் மன்சூர் அலிகானின் மகன் அலி கான் துக்லக் நாயகனாக நடித்துள்ளார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!