70வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா.. விருதைப் பெற்ற பிரபலங்களின் விவரங்கள்..! - Tamil News | 70th National Film Award Winning Cinema Celebrity List In Tamil | TV9 Tamil

70வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா.. விருதைப் பெற்ற பிரபலங்களின் விவரங்கள்..!

Updated On: 

08 Oct 2024 21:54 PM

70th National Film Awards :அகில இந்திய அளவில் இன்று இந்தியத் தேசிய திரைப்படங்கள் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறந்த திரைப்படம் , சிறந்த நடிகர் மற்றும் நடிகைகள், துணை நடிகர்கள் போன்ற விருதுகள் பல வழங்கி நடிகர்களை கௌரவப்படுத்தும் வகையில் இன்று நடந்துள்ளது. இந்த விழாவை இந்திய ஜனாதிபதியான திரௌபதி முர்முவின் தலைமையில் நடந்துள்ளது. இந்த விழாவில் தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னம் போன்ற பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது யார் யார் எந்த திரைப்படத்திற்காக விருதுகளை வாங்கியுள்ளனர் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

1 / 970வது

70வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தமிழில் வெளியான சிறந்த திரைப்படத்தின் விருது இயக்குநர் மணி ரத்தினத்தின் இயக்கத்தில் 2022ல் வெளியான "பொன்னியின் செல்வன் பாகம் 1க்கு" வழங்கப்பட்டுள்ளது. இந்த தேசிய விருதை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இயக்குநர் மணி ரத்தினத்திற்கு வழங்கினார்.

2 / 9

தமிழ் திரைப்படங்களில் சிறந்த பின்னணி இசையமைப்பாளர் என்ற விருதைப் "பொன்னியின் செல்வன்" திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது

3 / 9

சிறந்த நடிகருக்கான விருது காந்தாரா பாகம் 1 இயக்குநரும் மற்றும் நடிகருமான "ரிஷப் செட்டிக்கு" வழங்கப்பட்டுள்ளது

4 / 9

தமிழில் சிறந்த நடிகைக்கான விருது திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த "நித்யா மேனனுக்கும்" மற்றும் குச்சு எக்ஸ்பிரஸ் திரைப்பட நடிகை "மானசி" என்பவருக்கும் இந்திய ஜனாதிபதி முர்மு விருதை வழங்கினார்.

5 / 9

சிறந்த இசையமைப்பாளர் விருதை இந்தியாவில் பல மொழிகளில் வெளியான பிரம்மாஸ்திரம் பாகம் 1 திரைப்படத்திற்காக "இசையமைப்பாளர் சிவாவிற்கு" வழங்கப்பட்டுள்ளது

6 / 9

இந்தி மொழியில் சிறந்த திரைப்படத்திற்கான விருது 2023ல் இயக்குநர் "ராகுல் வி. சிட்டெல்லா" இயக்கத்தில் வெளியான "குல்மோஹர்" என்ற திரைப்படத்திற்குச் வழங்கப்பட்டுள்ளது.

7 / 9

சிறந்த துணை நடிகர்களுக்கான விருதை இந்தி நடிகை "நின்னா குப்தா" உச்சாய் என்ற திரைப்படத்தில் நடித்தற்காகவும் மற்றும் போவுஜ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் "பாவன் ராஜ்"- கும் வழங்கப்பட்டுள்ளது

8 / 9

அனிமேஷன், விசுவல் மற்றும் கதை போன்ற அனைத்திலும் சிறந்த திரைப்படமாக இந்தியில் வெளியான "அயன் முகர்ஜி" இயக்கிய "பிரம்மாஸ்த்திரம்" பாகம் 1க்கு வழங்கப்பட்டுள்ளது

9 / 9

சிறந்த கன்னட திரைப்படத்திற்கான விருது இயக்குநர் "பிரசாந்த் நீல்" இயக்கிய KGF பாகம் 2 திரைப்படத்திற்குச் வழங்கப்பட்டுள்ளது

மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் என்னாகும்?
செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
Exit mobile version