5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Harry Potter Book: அடேங்கப்பா.. ரூ.38 லட்சத்துக்கு ஏலம் போன ஹாரிபாட்டர் புத்தகம்!

Harry Potter: ஜே.கே.ரவுலிங் எழுதிய ஹாரிபாட்டர் நாவலை அடிப்படையாக கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மாயாஜால உலகத்திற்கு ஹாரிபாட்டர் படங்கள் அழைத்துச் சென்றது. இதுவரை 8 பாகங்கள் இந்த படத்தில் வெளியாகியுள்ளது.

petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 28 Nov 2024 12:35 PM
மாயாஜால கதைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அந்த உலகுக்கு நம்மை கூட்டிச் செல்லும் எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் நாம் கொண்டாடி தீர்த்து விடுவோம் என்பதே உண்மை. அதேபோல் காமிக்ஸ் புத்தகங்களும் நம்மை ஆட்கொண்டு விடும்.

1 / 6
அந்த வகையில் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் புத்தகத்தின் முதல் பதிப்பு £36,000க்கு விற்கப்பட்டுள்ள செய்தி ஹாலிவுட் பட ரசிகர்கள் மற்றும் புத்தக வாசிப்பாளர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் இன்றைய கணக்கின்படி ரூ.38,50,909 ஆகும்.

2 / 6
கிறிஸ்டின் மெக்கல்லோக்  தனது மகன் ஆடமுக்காக ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசபர்ஸ் ஸ்டோனின் புத்தகத்தை  1997 ஆம் ஆண்டு ஸ்ட்ராட்ஃபோர்ட்-அபான்-அவானில் உள்ள புத்தகக் கடையில் இருந்து வாங்கினார்.

3 / 6
அப்போது இந்த புத்தகத்திற்காக சுமார்  10 பவுண்டுகள் செலுத்தியதாகவும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதே புத்தகம் ஆயிரக்கணக்கான பவுண்டுகள் மதிப்புடையதாக இருக்கும் என்று தெரியவில்லை என்றும் ஆடம் கூறினார். 2020 ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் தான் ஹாரிபாட்டர் முதல் பதிப்பு புத்தகத்துக்கு இவ்வளவு மவுசு என தெரியவந்தது.

4 / 6
1997 ஆம் ஆண்டில் முதன்முதலில் ஹாரிபாட்டர் புத்தகம் 500 பிரதிகள் வெளியிடப்பட்டதில் இதுவும் ஒன்றாகும். எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங் கையெழுத்திட்ட சில பிழைகளுடன் கூடிய புத்தகம் இதுவாகும்.

5 / 6
கடந்தாண்டு ஜூலை 10 ஆம் தேதி இந்த அரிய புத்தகத்தின் ஒரு பிரதி ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தின் முடிவில் சுமார் 11 லட்சம் கொடுத்து அதை ஒருவர் எடுத்திருந்தார். தற்போது நடந்த இந்த ஏலமானது ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள லிச்ஃபீல்டில் நடைபெற்றது.

6 / 6
Latest Stories