Actress Samantha : முன்னாள் கணவர் குறித்து பேசிய நடிகை சமந்தா.. என்ன சொன்னார் தெரியுமா? - Tamil News | A video of actress Samantha talking about her ex-husband is going viral on the internet | TV9 Tamil

Actress Samantha : முன்னாள் கணவர் குறித்து பேசிய நடிகை சமந்தா.. என்ன சொன்னார் தெரியுமா?

Published: 

25 Nov 2024 15:18 PM

Actress Samantha : தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தென்னிந்தியத் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்துவருபவர் நடிகை சமந்தா. தற்போது இவரின் நடிப்பில் வெளியான "சிட்டாடல் : ஹன்னி பண்ணி" ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனது முன்னாள் கணவரைப் பற்றிப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 / 8ஆரம்பக்

ஆரம்பக் காலத்தில் விளம்பர மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த சமந்தா, பின் 2010ம் ஆண்டு இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான "யே மாயா செசவே" என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இந்த திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யா உடன் ஜோடியாக நடித்துப் பிரபலமானார்.

2 / 8

இந்த திரைப்படத்திற்குப் பிறகு தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா, சாகுந்தலம் மற்றும் குஷி போன்ற திரைப்படங்களில் நடித்து மீண்டும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து இவர் "சிட்டாடல் : ஹன்னி பண்ணி" என்ற இந்தி வெப் தொடரில் நடிகர் வருண் தவான் உடன் இணைந்து நடித்தார். இந்த தொடர் இந்தி மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பிரபலமாகியது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

3 / 8

அந்த நிகழ்ச்சியில் நடிகர் வருண் மற்றும் நடிகர் சமந்தா இருவரும் கலந்து கொண்டனர். அதில் இருவரும் ஒருவருக்கொருவர் கேள்விகள் கேட்டு அந்த கேம் ஆரம்பித்த நிலையில் நடிகர் வருண் தவான் "நீங்கள் அதிகம் செலவு செய்து வீணான விஷயம் எது?" என்ற கேட்ட கேள்விக்கு நடிகை சமந்தா "என்னுடைய EX-க்கு வாங்கி கொடுத்த விலை உயர்ந்த பொருட்கள் தான்" என்று சிரித்துக்கொண்டே அதில் தெரிவித்திருப்பார்.

4 / 8

தனது முதல் திரைப்படத்திலே முன்னாள் கணவர் நாக சைதன்யா உடன் நடித்த இவருக்கு அந்த திரைப்படத்தினை தொடர்ந்து இவர்களுக்குள் சிறிது சிறிதாகக் காதல் மலர தொடங்கியுள்ளது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இவர் ஒரே ஆண்டில் "நீதானே என் பொன் வசந்தம் மற்றும் நான் ஈ " என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாகப் பிரபலமானார்.

5 / 8

தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய இவர் தமிழ் பிரபல நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் எனப் பலருடன் திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். அதிலும் விஜய் மற்றும் சமந்தாவின் ஜோடி காமினேஷன் அருமையாக ஒர்க்அவுட் ஆனது என்றும் கூறலாம். இவர் விஜய்யுடன் கத்தி, தெறி மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்து தமிழ் விஜய் ரசிகர்களுக்குப் பிடித்த நடிகையாக ஆனார்.

6 / 8

தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துவந்த இவருக்கு ஆள் ஓவர் இந்தியாவிலும் ரசிகர்கள் அதிகம். இதனைத் தொடர்ந்து திரைப்படங்களுக்கு அடுத்தாக குடும்ப வாழ்க்கையில் இறங்க ஆசைப்பட்ட இவை தனது நீண்டநாள் காதலரான நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி கோவாவில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

7 / 8

திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை மறுத்த சமந்தா பின் திரைப்படங்களில் நடிப்பதையும் குறைத்துக்கொண்டார். பின் 2021ம் ஆண்டில் திருமண வாழ்க்கையில் நடைபெற்ற சில கசப்பான விஷயங்கள் காரணமாக இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியது. அதைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவரின் பிரிவு திரையுலகினர்களை மட்டுமில்லாமல் சமந்தா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

8 / 8

தனது விவாகரத்திற்குப் பிறகு திரைப்படங்களுக்குக் கம்பேக் கொடுக்கும் விதத்தில் புஷ்பா பாகம் 1ல் வெளியான "ஊ சொல்றியா மாமா" என்ற சிறப்புப் பாடலுக்குக் கவர்ச்சியாக நடனமாடி சினிமாவில் மீண்டும் நுழைந்தார். இந்த பாடல் வெளியான முதலில் பல விமர்சனங்களை பெற்ற நிலையில் தொடர்ந்து இவருக்கு ரசிகர்களின் ஆதரவும் பெருகியது.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?