Pushpa 2 : ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் புஷ்பா 2… இதுவரை எவ்வளவு வசூல் விவரம்! - Tamil News | Actor Allu Arjun Pushpa 2 Movie Pre-booking collection details | TV9 Tamil

Pushpa 2 : ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் புஷ்பா 2… இதுவரை எவ்வளவு வசூல் விவரம்!

Published: 

02 Dec 2024 15:13 PM

Pre-booking collection : தெலுங்கு திரைப்பட பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு உலகமெங்கும் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் புஷ்ப தி ரைஸ். இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்தாக வெளியீட்டிற்கு முன்னே பல ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுவரும் திரைப்படம் புஷ்பா 2.

1 / 5டோலிவுட் பிரபல நடிகர்களில் டாப் 5 இடத்தில் இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். கடந்த 2003ம் ஆண்டு 'கங்கோத்ரி' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக  அறிமுகமான இவர் தொடர்ந்து திரைப்படங்களில்  நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது  புஷ்பா திரைப்படம். தற்போது இப்படத்தினை வெற்றியை புஷ்பா 2 வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.

டோலிவுட் பிரபல நடிகர்களில் டாப் 5 இடத்தில் இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். கடந்த 2003ம் ஆண்டு 'கங்கோத்ரி' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது புஷ்பா திரைப்படம். தற்போது இப்படத்தினை வெற்றியை புஷ்பா 2 வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.

2 / 5

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். புஷ்பா 2ல் முக்கிய கதாபாத்திரங்களாக ராஷ்மிகா மந்தனா , ஃபஹத் பாசில் , ஜெகபதி பாபு , தனஞ்சயா , ராவ் ரமேஷ் மற்றும் சுனில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தற்போது 2 நாட்களில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?

3 / 5

வரும் டிசம்பர் 5ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி கன்னடம் மற்றும் மலையாளம் என 5க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகத் தயாராகிவரும் புஷ்பா 2 உலகளாவிய ப்ரீ புக்கிங்கில் சுமார் ரூ 60 கோடிகளும், இந்தியாவில் சுமார் ரூ 28 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

4 / 5

சுமார் ரூ 350 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படமானது வெளியீட்டிற்கு முன்பே 100க்கு 15% சதவீதம் வசூலைச் செய்துள்ளது. பிரம்மாண்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் சிறப்புப் பாடலுக்கு நடிகை ஸ்ரீலீலா நடனம் ஆடியுள்ளார். "கிஸ்ஸிக்" என்ற இப்பாடல் வெளியாகி தற்போது 43 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

5 / 5

வெளியீட்டிற்கு முன்னே பிரம்மாண்டமாக வரவேற்கப்படும் இந்த புஷ்பா 2 திரைப்படத்தினை அடுத்தாக நடிகர் அல்லு அர்ஜுன் AA 21, AA 22 மற்றும் ஐகான் போன்ற படங்களில் நடிக்க உள்ளார், மற்றும் புஷ்பா 2 திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு புஷ்பா பாகம் 3 நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

குளிர் காலத்தில் பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல வேண்டுமா?
எந்த மாதிரி பார்ட்னர் கிடைத்தால் ஓகே சொல்லலாம்?
40 வயதிற்கு பிறகு கைவிட வேண்டிய பழக்கங்கள்..!
பூண்டு சாப்பிடுவது யாருக்கு நல்லதல்ல..?