RJ Balaji Birth Day : +2 தோல்வி.. ரேடியோவில் வேலை.. ஆர்ஜே பாலாஜி குறித்த சுவாரஸ்ய விஷயங்கள் - Tamil News | Actor and Director RJ Balaji celebrate his 39th birthday today | TV9 Tamil

RJ Balaji Birth Day : +2 தோல்வி.. ரேடியோவில் வேலை.. ஆர்ஜே பாலாஜி குறித்த சுவாரஸ்ய விஷயங்கள்

Updated On: 

20 Jun 2024 12:43 PM

HBD RJ Balaji: தீயா வேலை செய்யணும் குமாரு, நானும் ரௌடி தான், தேவி போன்ற படங்களில் காமெடி நடிகராக தன் ஒன் லைனர்கள் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். இதனையடுத்து எல்கேஜி என்ற படத்துக்கு கதை எழுதி ஹீரோவாகவும் மாறினார். அந்தப் படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. அதன்பிறகு, இயக்குநர் அவதாரம் எடுத்து இவர், நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

1 / 812-ம்

12-ம் வகுப்பில் பெயில் ஆன ஆர்.ஜே.பாலாஜி பின்னர் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றார். அதனைத் தொடர்ந்து தனது டிகிரியை முடித்த அவர் பிக் FM இல் பிரபல ஆர்ஜே -வாக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது பிரபல நடிகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவராக விளங்கி வருகிறார் ஆர்ஜே பாலாஜி. 

2 / 8

நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, தற்போது தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

3 / 8

தீயா வேலை செய்யணும் குமாரு, நானும் ரௌடி தான், தேவி போன்ற படங்களில் காமெடி நடிகராக தன் ஒன் லைனர்கள் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

4 / 8

இதனையடுத்து எல்கேஜி என்ற படத்துக்கு கதை எழுதி ஹீரோவாகவும் மாறினார். அந்தப் படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது.

5 / 8

அதன்பிறகு, இயக்குநர் அவதாரம் எடுத்து இவர், நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

6 / 8

பின்னர் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பதாய்கோ படத்தை தமிழில் வீட்டில விஷேசம் என்ற தலைப்பில் இயக்கி நடித்திருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. அதுவும் வெற்றியையே பதிவு செய்தது.

7 / 8

சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

8 / 8

தனது படங்களை பார்ப்பவர்களுக்கு நிச்சையம் ஏமாற்றம் அடையமாட்டார்கள் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி தனது 39-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!