5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Dhanush: இட்லி கடை ரிலீஸ் தேதி அறிவிப்பு – தனுஷூக்கு கைகொடுக்குமா ஏப்ரல்?

Idli Kadai Released Date: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் ப.பாண்டி, ராயன் ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார். அடுத்ததாக இவர் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படம் வெளியாகவுள்ளது. இதனிடையே தன்னுடைய இயக்கத்தின் முதல் படமான ப.பாண்டி வெளியான அதே ஏப்ரல் மாதத்தில் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியையும் குறிப்பிட்டுள்ளார்.

barath-murugan
Barath Murugan | Published: 08 Nov 2024 16:10 PM
நடிகர் தனுஷ் 2002ல் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகினார். இப்படத்தினை தொடர்ந்து காதல் கொண்டேன் , திருடா திருடி மற்றும் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

1 / 6
தனது சாதுரியமான நடிப்பினால் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துவந்த இவர் தனது சகோதரர் செல்வராகவனின் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களால் மிகவும் பேசப்பட்டார். இந்த திரைப்படம் கமர்ஷியல் திரைப்படமாக அமையவே  அடுத்ததாகத் திருவிளையாடல் இவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

2 / 6
இவர் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் பிரபல பின்னணி பாடகராகவும் பல திரைப்படங்களில் பாடி இருக்கிறார். அதிலும் இவர் முதல்முதலில்  புதுக்கோட்டையிலிருந்து சரவணன்  என்ற திரைப்படத்தில் பாடிய "நாட்டுச் சரக்கு" என்ற பாடல் இன்றளவும் வைப் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மாரி,  கர்ணன் போன்ற பல திரைப்படங்களிலும்  பாடி இருக்கிறார்.

3 / 6
இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தற்போது திரைப்படங்களை இயக்கும் வேலையிலும் இறங்கியுள்ளார். இவர் இயக்கத்தில் முதன்முதலாக வெளியான திரைப்படம் ப. பாண்டி. 2017ல் வெளியான இப்படத்தில் இவரும் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டிய தனுஷ்  ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

4 / 6
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் இயக்கிவரும் திரைப்படம் இட்லி  கடை. டான் பிக்சர்ஸுடன்  மற்றும்   வுண்டர்பார் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நடிகர் தனுஷ்  இயக்கியும் நடித்தும் வருகிறார். இப்படத்தில் நடிகைகளாக  நித்யா மேனன் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துவரும் நிலையில்  இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

5 / 6
கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த இட்லி கடை திரைப்படம் வருகின்ற 2025ம் ஆண்டு ஏப்ரல் 10 தேதி உலகமெங்கும் வெளியாகும் எனத் தகவலை வெளியிட்டுள்ளது.

6 / 6
Latest Stories