பிரபல நடிகரின் மகன்… பான் இந்திய நடிகர்… யார் இந்த சிறுவன் தெரியுதா? - Tamil News | Actor Dulquer Salmans Childhood photo viral on social media | TV9 Tamil

பிரபல நடிகரின் மகன்… பான் இந்திய நடிகர்… யார் இந்த சிறுவன் தெரியுதா?

Published: 

20 Sep 2024 17:37 PM

பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கல்கி படத்தில் சிறப்பு தோற்றத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ‘காந்தா’ என்ற படத்தில் நடிப்பதற்காக கமிட்டாகி உள்ளார். இந்தப் படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது.

1 / 6மம்முட்டியின்

மம்முட்டியின் மகனாக பிறந்தார் நடிகர் துல்கர் சல்மான் பிறந்துள்ளார். சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுப்பதற்கு முன்னதாக பேரி ஜான் ஆக்டிங் ஸ்டுடியோவில் மூன்று மாத நடிப்புப் படிப்பை படித்துள்ளார்.

2 / 6

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘செக்கண்ட் ஷோ’ படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் துல்கர் சல்மான். அதனை தொடர்ந்து வெளியான ‘உஸ்தாத் ஹோட்டல்’ ரசிகர்களின் மனதில் துல்கருக்கு நீங்காத இடத்தைக் கொடுத்தது.

3 / 6

பின்னர் துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியான ஏபிசிடி, நீலாகாஷம் பச்சைக்கடல் செவ்வண்ண பூமி, பேங்களூர் டேய்ஸ் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் துல்கர் சல்மான்.

4 / 6

அதனைத் தொடர்ந்து  மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி, தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றார் துல்கர் சல்மான்.

5 / 6

பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கல்கி படத்தில் சிறப்பு தோற்றத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ‘காந்தா’ என்ற படத்தில் நடிப்பதற்காக கமிட்டாகி உள்ளார். இந்தப் படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது.

6 / 6

சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மானின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow Us On
சாப்பிட்ட உடனே டீ குடிக்கிறீங்களா? இதை படிங்க
டிஆர்பியில் இந்த வாரம் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
இந்த கியூட் பையன் இப்போ பெரிய நடிகர்!
உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
Exit mobile version