பா.ரஞ்சித் படத்தின் இணையும் ஃபகத் ஃபாசில்.. வேட்டுவம் பட அப்டேட்! - Tamil News | Actor Fahadh Faasil is set to join director Pa. Ranjith's upcoming film Vettuvam | TV9 Tamil

பா.ரஞ்சித் படத்தின் இணையும் ஃபகத் ஃபாசில்.. வேட்டுவம் பட அப்டேட்!

Published: 

12 Dec 2024 18:00 PM

Vettuvam Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருந்துவருபவர் பா. ரஞ்சித். கடந்த 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். தொடர்ந்து ரஜினிகாந்த், விக்ரம், கார்த்திக் மற்றும் ஆர்யா போன்ற பிரபலங்களை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்

1 / 5ஆரம்பத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர்.  2007ம் ஆண்டு வெளியான சென்னை 600028 என்ற படத்தின் மூலம் நெருக்கமானார். இதைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு படங்களுக்கு உதவியாக இருந்தார்.

ஆரம்பத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர். 2007ம் ஆண்டு வெளியான சென்னை 600028 என்ற படத்தின் மூலம் நெருக்கமானார். இதைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு படங்களுக்கு உதவியாக இருந்தார்.

2 / 5

பின் இயக்குநராக படங்களை இயக்கவேண்டும் என்று ஆசைப்பட்ட பா.ரஞ்சித் 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். தொடர்ந்து இவர் இயக்கிய மெட்ராஸ் என்ற அரசியல் பின்னணிகளுடன் உருவான படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

3 / 5

தொடர்ந்து பிரபல நடிகரான ரஜினிகாந்துடன் காலா மற்றும் கபாலி போன்ற ஆக்ஷ்ன் திரைப்படங்களை இயக்கி வெற்றிக் கண்டார். இதைத் தொடர்ந்து சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது போன்ற மாறுபட்ட கதைக்களத்துடன் கூடிய திரைப்படங்களை இயக்கி பெரும் வரவேற்பினை பெற்றார்.

4 / 5

இதை அடுத்து தங்கலான் படத்தினை தொடர்ந்து தற்போது "வேட்டுவம்" என்ற புதிய இந்த திரைப்படத்தினை இயக்க உள்ளார். நீலம் ஸ்டுடியோ மற்றும் கோல்டன் ரோஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளது. இப்படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், நடிகர் ஆர்யா வில்லனாகவும் உடன் நடிகர் அசோக் செல்வன் நடிக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.

5 / 5

இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்த செய்தி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் மாதத்தில் நாம் செல்ல வேண்டிய அழகிய சுற்றுலா இடங்கள்!
ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ டிப்ஸ்!
ஒல்லியாக இருப்பவர்கள் இந்த காரணங்களால் எடை அதிகரிப்பது கிடையாது..!
கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங் படைத்த டாப் 10 சாதனைகள்..!