வசூல் வெற்றியில் ஜீவாவின் ‘பிளாக்’ திரைப்படம்.. 11 நாட்கள் வசூல் எவ்வளவு? - Tamil News | Actor Jeeva Black Movie 11th Day Box Office Collection Details | TV9 Tamil

வசூல் வெற்றியில் ஜீவாவின் ‘பிளாக்’ திரைப்படம்.. 11 நாட்கள் வசூல் எவ்வளவு?

Published: 

22 Oct 2024 13:49 PM

Black Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜீவா. தற்போது இவரின் மாறுபட்ட நடிப்பில் மற்றும் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணியன் இயக்கத்தில் வெளியான திகில் த்ரில்லர் திரைப்படம் பிளாக்.

1 / 6தமிழ்

தமிழ் திரையரங்குகளில் கடந்த அக்டோபர் 11ம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறைகளை ஒட்டி வெளியான திரைப்படம் பிளாக். நடிகர் ஜீவா மற்றும் நடிகை ப்ரியா பவானி சங்கர் இதில் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளனர். இவர்கள் இருவரை சுற்றி நிகழும் அமானுஷ்ய கதைக்களத்தைக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

2 / 6

இப்படத்தில் துணை கதாபாத்திரங்களாக விவேக் பிரசன்னா, யோக் ஜபே, ஷரா, ஸ்வயம் சித்தா எனப் பல பிரபல நடிகர்களின் நடிப்பில் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணியன் இயக்கியுள்ளார். மாறுபட்ட கதையை உடைய இத்திரைப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

3 / 6

இந்த பிளாக் திரைப்படம் 2013ல் வெளியான ஹாலிவுட் த்ரில்லர் திரைப்படமான "கோஹரன்ஸின்" என்ற படத்தின் கதையைத் தழுவி தமிழ் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நடிகர் ஜீவா சில வருடங்களுக்குப் பிறகு இந்த மாதிரியான திகில் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 / 6

ஆயுத பூஜை விடுமுறைகளை ஒட்டி கடந்த அக்டோபர் 11ம் தேதி சரஸ்வதி பூஜை அன்று திரையரங்குகளில் வெளியாகியது. இத்திரைப்படம் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வெளியான அடுத்த நாளில் வெளியானாலும் பிளாக் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் இருந்தது.

5 / 6

வேட்டையன் திரைப்படத்திற்குப் போட்டியாக வெளியான நல்ல வசூலை பெற்று உள்ளதால். அதன் வெற்றியை கொண்டாடும் வகையில் கடந்த வாரம் பத்திரிகையாளர்களுடன் இணைந்து நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டனர். இதில் நடிகர் ஜீவா, இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணியன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

6 / 6

இன்றோடு வெளியாகி 11 நாட்களான நிலையில் இத்திரைப்படம் உலகளாவிய வசூலில் 8கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவருகிறது. சுமார் 3.05 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இத்திரைப்படம் பிளாக் பாஸ்டர் திரைப்படமாக இருக்கிறது.

மனிதர்களை தாக்கக்கூடிய பறவைகள் என்னென்ன தெரியுமா?
வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?