பர்த்டே கேர்ள் அக்‌ஷரா ஹாசன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்! - Tamil News | Actor Kamal Haasans Youger daughter Actress Akshara Haasan celebrate her birthday today | TV9 Tamil

பர்த்டே கேர்ள் அக்‌ஷரா ஹாசன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்!

Published: 

12 Oct 2024 13:29 PM

தனக்கு ஆரம்பத்தில் இருந்தே படிப்பு பெரிய அளவில் வரவில்லை என்றும், தான் இன்றளவும் உயர்நிலை கல்வியைக் கூட தாண்டவில்லை என்றும் முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் அக்‌ஷரா. இன்னும் சொல்லப்போனால் இரண்டு முறை 10ம் வகுப்பு தேர்வு எழுதியும், தான் பாஸ் ஆகவில்லை என்றும் கூறியிருந்தார்.

1 / 6நடிகர்

நடிகர் கமல் ஹாசன் மற்றும் அவரது முன்னாள் மனைவி சரிகாவின் மகள்கள், ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன். இருவரும் அப்பா, அம்மா போலவே சினிமாவில் கலக்கி வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசனுக்கும், சரிகாவிற்கும் கடந்த 1991-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி பிறந்த மகள் தான் அக்ஷரா ஹாசன்.

2 / 6

2010இல் பாலிவுட் இயக்குநர் ராகுல் தோலாகியா உதவியாளராக சோசைட்டி என்ற படத்தில் பணியாற்றியுள்ளார். இந்த படத்துக்கு பின்னர் ஏராளமான விளம்பர படங்களில் பணியாற்றிய இவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தபோது அத்தனையும் நிராகரித்தார்.

3 / 6

அக்‌ஷராவும் தனது சகோதரியைப் போலவே, படத்தின் பின்னணியில் இருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். நடன இயக்குனராகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அக்ஷரா நடிகையானார்.

4 / 6

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். அமிதாப் பச்சன், தனுஷ் நடித்த ஷமிதாப் படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். தமிழில் அஜித்தின் ’விவேகம்’ திரைப்படம் மூலம் அறிமுகமான அக்ஷரா, தொடர்ச்சியாக கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ளஅக்னி சிறகுகள் இன்னும் வெளியாகவில்லை.

5 / 6

தனக்கு ஆரம்பத்தில் இருந்தே படிப்பு பெரிய அளவில் வரவில்லை என்றும், தான் இன்றளவும் உயர்நிலை கல்வியைக் கூட தாண்டவில்லை என்றும் முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் அக்‌ஷரா. இன்னும் சொல்லப்போனால் இரண்டு முறை 10ம் வகுப்பு தேர்வு எழுதியும், தான் பாஸ் ஆகவில்லை என்றும் கூறியிருந்தார்.

6 / 6

இந்த நிலையில் இன்று அக்‌ஷரா ஹாசன் தனது 33-வது பிறந்த நாளை கொண்டாகுகிறார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!