வசூல் வேட்டையில் ’மெய்யழகன்’.. 5 நாட்களில் எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா? - Tamil News | Actor Karthik And Arvind Swami Meiyazhagan Movie 5 days Collection Box Office | TV9 Tamil

வசூல் வேட்டையில் ’மெய்யழகன்’.. 5 நாட்களில் எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா?

Published: 

02 Oct 2024 13:13 PM

Meiyazhagan 5 Day Collection : 96 திரைப்பட இயக்குநர் சி.பிரேம் குமார் இயக்கத்திலும் நடிகர் சூர்யாவின் 2டி என்டேர்டைமென்ட் தயாரிப்பிலும் வெளியான திரைப்படம் மெய்யழகன். இத்திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் 5 நாட்களில் எவ்வளவு கலெக்ஷன் செய்துள்ளது தெரியுமா..?

1 / 5நடிகர்

நடிகர் கார்த்திக், ஸ்ரீ திவ்யா, அரவிந்த் சாமி மற்றும் ராஜ்கிரண் போன்றவர்களின் நடிப்பில் கடந்த செப்டம்பர் 27ல் வெளியான திரைப்படம் மெய்யழகன். 96 திரைப்பட பிரபல இயக்குநர் பிரேம்குமார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

2 / 5

இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டைமென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் வெளியான பாடல்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

3 / 5

இத்திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று நல்ல வசூலைப் பெற்று வருகிறது. தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பான "பீல் குட்" திரைப்படம் என்ற பெயரை வாங்கியுள்ளது.

4 / 5

இந்த மெய்யழகன் திரைப்படமானது ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் பல பிரபலங்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பையும் மற்றும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. சமூக ஊடகங்களில் நல்ல கதை கொண்ட திரைப்படம் எனப் பிரபலமாகி வருகிறது.

5 / 5

இத்திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆகும் நிலையில் இப்படம் பாக்ஸ் ஆபிசில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா..? இப்படம் சுமார் "35 கோடி" பட்ஜெட்டில் உருவான இந்த மெய்யழகன் திரைப்படம் உலகளாவிய வசூல் வேட்டையில் 5 நாட்களில் "30 கோடிக்கு" மேல் வசூல் செய்துள்ளது.

Follow Us On
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version