5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சூது கவ்வும் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல்… எவ்வளவு தெரியுமா?

Soodhu Kavvum 2 Movie : தமிழ்த் திரைப்படங்களில் பிரபல நகைச்சுவை நடிகராகப் பிரபலமாகியவர் மிர்ச்சி சிவா. ஆரம்பத்தில் ஆர்.ஜேவாக பணியாற்றிய இவர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவரின் நடிப்பில் உருவான சூது கவ்வும் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிப் பார்க்கலாம்.

barath-murugan
Barath Murugan | Updated On: 14 Dec 2024 21:48 PM
ஆரம்பத்தில் ஆர்.ஜே.வாக பணியாற்றிய சிவா பின்,  வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.  இவர் தொடர்ந்து சரோஜா, தமிழ்ப் படம், வா மற்றும் பதினாறு போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானார்.

1 / 5
இந்நிலையில் 2013ம் ஆண்டு இயக்குநர் நலன் குமாராசாமி இயக்கத்தில் வெளியாகி, மிகப் பிரபலமான திரைப்படம் சூது கவ்வும். இப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் மற்றும் சஞ்சிதா ஷெட்டி எனப் பலரும் நடித்திருந்தனர்.

2 / 5
முற்றிலும் நகைச்சுவை மற்றும் க்ரைம் கதைக்களத்துடன் வெளியாகிய இப்படம், மக்களிடையே  பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக  நடிகர் மிர்ச்சி சிவாவின் நடிப்பில் வெளியான சூது கவ்வும் 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

3 / 5
இந்த திரைப்படம் நேற்று அதாவது டிசம்பர் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இந்நிலையில் உலகளாவிய வசூலில் இப்படம் முதல் நாளில் சுமார் ரூ.45 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் ரூ.7 கோடியில் தயாரான இப்படம், தற்போது வரை ரூ.45 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

4 / 5
இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில், திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் இணைந்து சூது கவ்வும் 2 திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இப்படத்தில்  மிர்ச்சி சிவாவுடன்  ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், கராத்தே கார்த்தி, யோக் ஜேபி, அருள்தாஸ், ரகு மற்றும் கல்கி எனப் பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில் முதல் நாள் ரூ.45 லட்சம் வரை வசூல் செய்துள்ள இப்படம், இன்னும் அதிகம் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 / 5
Latest Stories