5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பண்ணையில் கூலி வேலை செய்யும் மோகன்லாலின் மகன் பிரணவ்

Pranav Mohanlal: பிரணவ் தற்போது ஸ்பெயினில் உள்ள ஒரு பண்ணையில் 'ஒர்க் அவே' திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அங்கு பணத்திற்கு பதிலாக உணவு மற்றும் தங்குமிடத்திற்கு ஈடாக வேலை செய்வதாகவும் சுசித்ரா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். காசு பணத்தை விட இதுபோன்ற அனுபவங்களை பிரணவ் விரும்புகிறார் என்றும் தற்போது குதிரைகள் மற்றும் ஆடுகளை பராமரிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் சுசித்ரா தெரிவித்துள்ளார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Nov 2024 16:05 PM
மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் பண்ணையில் கூலி வேலை செய்து ஆடு மற்றும் பிற விலங்குகளை பராமரிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

1 / 8
பெரும்பாலான திரைப் பிரபலங்களின் பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் வேலைகளை பின்பற்றும் அதே வேளையில், மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ், நடிப்பதை விட விவசாய வேலையில் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

2 / 8
மனோரமா அறிக்கையின்படி, மூத்த நடிகர் மோகன்லாலின் மகன் தற்போது ஸ்பெயினில் விவசாய வேலையில் நேரத்தை செலவிடுவதாக தெரிவித்துள்ளது. மோகன்லாலின் மனைவி சுசித்ரா அளித்த பேட்டியின்படி மகன் பிரணவ் தற்போது படங்களைத் தவிர வேறு விஷயங்களில் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

3 / 8
பிரணவ் தற்போது ஸ்பெயினில் உள்ள ஒரு பண்ணையில் 'ஒர்க் அவே' திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அங்கு பணத்திற்கு பதிலாக உணவு மற்றும் தங்குமிடத்திற்கு ஈடாக வேலை செய்வதாகவும் சுசித்ரா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

4 / 8
காசு பணத்தை விட இதுபோன்ற அனுபவங்களை பிரணவ் விரும்புகிறார் என்றும் தற்போது குதிரைகள் மற்றும் ஆடுகளை பராமரிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் சுசித்ரா தெரிவித்துள்ளார்.

5 / 8
"பிரணவ் நான் சொல்வதை மட்டுமே கேட்கிறார் என்று உறவினர்கள் உட்பட பலர் அடிக்கடி கூறினாலும், அது அனைத்தும் உண்மை இல்லை, பிரணவிற்கு அவரது சொந்த யோசனைகள் உள்ளன. அவர் பிடிவாதமாக இல்லை, ஆனால் அவர் சரியானது என்று நம்புவதை பிரணவ் செய்கிறார் என்றும் சுசித்ரா தெரிவித்தார்.

6 / 8
படங்களின் ஸ்கிரிப்ட்களைப் படிப்பதில் மகிழ்ச்சி அடைந்தாலு, திரைப்படத்தில் நடிப்பதின் முடிவை முழுக்க முழுக்க பிரணவ் தான் எடுப்பார் என்றும் சுசித்ரா தெரிவித்துள்ளார். "வருஷத்திற்கு குறைந்தது இரண்டு படங்களாவது நடிக்க வேண்டும் என்று நான் பிரணவை கட்டாயப்படுத்துகிறேன். ஆனால் பிரணவ் எப்போதும் அதை கேட்பதில்லை என்றும் சுசித்ரா தெரிவித்திருந்தார்.

7 / 8
சில சமயங்களில் அவர் சொல்வது சரி என்று தோனும். வாழ்க்கையில் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்றும் சுசித்ரா கூறினார். பிரணவ் சினிமா துறைக்கு புதியவராக இருந்தாலும், மக்கள் அவரை ஏற்கனவே அவரது தந்தை மோகன்லாலுடன் ஒப்பிடுகிறார்கள் என்று சுசித்ரா குறிப்பிட்டார். “ஆனால் அப்பு (பிரணவ்) ஒருபோதும் மோகன்லால் ஆக முடியாது” என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

8 / 8
Latest Stories