பின்னடைவில் ’வேட்டையன்’ வசூல்.. 5 நாட்களில் இவ்வளவுதானா? - Tamil News | Actor Rajinikanth Vettaiyan Movie 5 Day Box Office Collection Details In Tamil | TV9 Tamil

பின்னடைவில் ’வேட்டையன்’ வசூல்.. 5 நாட்களில் இவ்வளவுதானா?

Published: 

15 Oct 2024 13:10 PM

தமிழ் சினிமாவை கலக்கிவரும் நடிகர் சூப்பர் ஸ்டாரின் 171வது திரைப்படமாக அமைந்தது வேட்டையன் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்க, பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா தயாரித்தது

1 / 6தமிழ்

தமிழ் முன்னணி நடிக ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, கிஷோர், துஷாரா விஜயன், ரக்‌ஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு மலையாளம் போன்ற திரைப்படங்களின் முன்னணி கதாநாயகர்களும் இணைந்து இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

2 / 6

இந்த திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்பட பிரபல இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மற்றும் வேட்டையன் திரைப்படத்திற்காக அனிருத் இசையமைத்துள்ளார்.

3 / 6

அனிருத் இசையமைப்பில் இத்திரைப்படத்திலிருந்து வெளியான மனசிலாயோ மற்றும் ஹண்டர் வண்டார் போன்ற பாடல்கள் ஹிட்டாக இணையத்தில் ட்ரெண்டிங் பாடல்களாக உள்ளது.

4 / 6

இத்திரைப்படம் போலி என்கவுண்டர், காதல் நகைச்சுவை மற்றும் எமோஷன் போன்ற கதைக்களத்தை உள்ளடக்கிய ஆக்ஷன் மற்றும் எமோஷன் நிறைந்த கலவையான கதைக்களத்தைக் கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

5 / 6

பிளாக் பாஸ்டர் திரைப்படமாகக் கருதப்படும் வேட்டையன் ஆயுத பூஜை விடுமுறைகளை முன்னிட்டு கடந்த அக்டோபர் 10 உலகமுழுவது வெளியாகியது. இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 5 நாட்கள் நிலையில் பாக்ஸ் ஆபிசில் எவ்வளவு வசூல் வேட்டை நடத்தியுள்ளது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

6 / 6

ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படம் திரையரங்குகளை நல்ல ஓட்டம் பெற்றுவந்தாலும் இணையத்தில் பல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் இன்றுவரை வேட்டையன் திரையரங்கில் எவ்வளவு வேட்டையாடி உள்ளது என்றால் சுமார் 210 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. வெளியான நான்கு நாட்களில் 200 கோடிகளை வசூல்செய்த நிலையில் 5வது நாளில் சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!